என் மலர்tooltip icon

    கடலூர்

    • தமிழ்செல்வன் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்.
    • அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த மணப்பாக்கத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (20)கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரி மாணவர். இவர் கடலூரில் இருந்து ஆட்டோவில் சென்ற போது ஆட்டோ கவிழ்ந்து சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார். அவரது உடல் சொந்த ஊரான பண்ருட்டி உட்கோட்டம் புதுப்பேட்டை போலீஸ் சரகம் மணப்பாக்கம் ஊராட்சியில் அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த போது மரியாதை செலுத்த வந்த பெரியார் கலை கல்லூரி மாணவர்கள், உறவினர்கள், கிராமத்தினர், அதே ஊராட்சியை சேர்ந்த சுரேந்தர், மாவட்ட தலைவர், தமிழக வாழ்வுரிமை கட்சி சியாமளா சுரேந்தர், மணப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் அரசு அறிவித்த 2 லட்சம் இழப்பீடு போதாது என்றும் கூடுதலாக 10 லட்சம் ரூபாய் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் என அனைவரையும் திரட்டி கடலூர் - மடப்பட்டு சாலை அன்னை வேளாங்கண்ணி பாலிடெக்னிக் எதிரில் இன்று சாலை மறியல் செய்தனர். பண்ருட்டி டி.எஸ்.பி.சபியுல்லா, அரசு அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் என்று பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர்.

    • இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது.
    • தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர்.

    கடலூர்:

    கடலூர் - சிதம்பரம் சாலையில் செல்லங்குப்பம் பகுதி அருகே மோட்டார் சைக்கிள் விற்பனை ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமை நேற்று இரவு அங்கு பணிபுரியும் ஊழியர்கள் பூட்டிவிட்டு சென்று விட்டனர். இன்று காலை வழக்கம் போல் தனியார் ஷோரூமை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்தி ருந்தது. அங்கு ஒரு அறை யில் வைக்கப்பட்டிருந்த லாக்கர் உடைந்து பொருட் கள் சிதறி கிடந்தது. பின்னர் லாக்கரை சென்று பார்த்த போது 3 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் 6 கிராம் தங்க நாணயத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. கொள்ளையர்கள் ஷோரூம் க்குள் எப்படி வந்தனர்? என பார்வை யிட்ட போது, பின்புறம் இருந்த ஜன்னலை அறுத்து மர்ம நபர்கள் உள்ளே வந்து பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடியது தெரியவந்தது.

    இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரிப் புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபு ணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து முக்கிய தடயங்களை சேகரித்தனர். கடலூர் - சிதம்பரம் சாலையில் மக்கள் நட மாட்டமும், வாகன போக்கு வரத்தும் 24 மணி நேரமும் இருந்து வரும் நிலையில் மர்ம நபர்கள் பணம் மற்றும் தங்க நாணயத்தை திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீ சார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 40 ஆண்டுகள் முடிவு பெற்ற பிறகு இந்து சமய அறநிலை துறை வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
    • இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி பஸ் நிலையம் பின்புறம் வட கைலாசம், காமராஜர் நகரில் உள்ள குருலட்சுமி அறக்க ட்டளைக்கு சொந்தமான இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுமார் ரூ100கோடி மதிப்பிலா ன 1 ஏக்கர் 80 சென்ட் இடத்தை ராமச்சந்திரன் ,ரேவதி ,அன்பு ஆகியோர்களின் உறவினர்கள் 40 ஆண்டு குத்தகைக்கு வைத்திருந்து 40 ஆண்டுகள் முடிவு பெற்ற பிறகு இந்து சமய அறநிலை துறை வசம் ஒப்படைக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.

    கோர்ட்டு உத்தரவுப்படி இந்த இடத்தை கடந்த19-ந் தேதி இந்து சமய அறநிலைத்துறை சார்பில் கையகப்படுத்திய போது ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவரும் பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வுமான வேல்முருகன் தூண்டுதலின் பேரில் தான் நீங்கள் இடத்தை கையகப்படுத்துகிறீர்கள். நாங்கள் உங்களை சும்மா விடமாட்டோம் என்று ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர்கள் மிரட்டியதாக ராமச்சந்திரன், ரேவதி, அன்பு ஆகியோர் மீது வேல்முருகன் எம்.எல்.ஏ. உதவியாளர் ராஜசேகர் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில்எம்.எல்.ஏ உதவியாளர் புகார்மனு கொடுத்துள்ளார். அதில்பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ.வேல்முருகன் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் இவர்கள் பேசி வருகிறார்கள். இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த புகார் குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காமராஜ் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தது.
    • வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே இளநாங்கூர் கிராமத்தில் உள்ள காமராஜ் வீட்டு தோட்டத்தில் சுமார் 9 அடி நீளமுள்ள140 கிலோ மதிக்கத்தக்க முதலை புகுந்தது. மாவட்ட வன அலுவலர் குருசாமி உத்தரவின் படி சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர்பிரபு,சிதம்பரம் பீட் வன க்காப்பாளர்அன்புமணி, புவனகிரி பீட் வனக்காப்பாள ர்ஞா னசேகர்,வனகாப்பாளர் அலமேலு, வன ஊழியர்கள் புஷ்பராஜ் ஆகியோர் முதலையை பத்திரமாக பிடித்து வக்கிரமாரி ஏரியில் விட்டனர்.

    • கெடிலம் ஆற்றில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மாட்டு வண்டிகளை பறிமுதல் பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கவேல்,பிரசன்னாமற்றும்போலீசார்வேல்முருகன்,உதயகுமார் ஆகியோர்இன்று அதிகாலை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது பண்ருட்டி திருவதிகை கெடிலம் ஆற்றுப்பகுதியில் 2மாட்டுவண்டியில்அரசு அனுமதி இல்லாமல் திருட்டுத்தனமாக மணல் கடத்தியது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து மணல் கடத்தலில் ஈடுபட்ட திருவதிகை குட்ட தெரு கணபதி(64),பண்ருட்டி ெரயில்வே காலனிமகாலிங்கம்(55) ஆகியோர் மீதுவழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து அவர்கள் ஒட்டி வந்த மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

    • இதனை கண்ட பொதுமக்கள், தப்பிக்க முயன்ற குமரேசனை மடக்கி பிடித்தனர்.
    • கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    விழுப்புரம்:

    திருவெண்ணை நல்லூர் அருகேயுள்ள மாதம்பட்டு கிராமத்தில் முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு முன்பாக பித்தளையால் செய்யப்பட்ட சூலாயுதம் நடப்பட்டிருந்தது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் சூலாயுதத்தை வணங்கிவிட்டு பின்னர் கோவிலுக்குள் சென்று அம்மனை தரிசிப்பர். இந்நிலையில் முத்துலிங்கமடம் கிராமத்தின் இருளர் குடியிருப்பில் வசிக்கும் குமரேசன் (வயது 38) என்பவர் இன்று விடியற்காலையில் சூலாயுதத்தை திருடினார். இதனை கண்ட பொதுமக்கள், தப்பிக்க முயன்ற குமரேசனை மடக்கி பிடித்தனர்.

    இது குறித்து திருவெண்ணைநல்லூர் போலீசாரிடம் தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசாரிடம் குமரேசனை பொதுமக்கள் ஒப்படைத்தனர். அவரை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும், சூலாயுதத்தை பறிமுதல் செய்து, ஊர் பிரமுகர்களிடம் வழங்கி, கோவிலுக்குள் பாதுகாப்பான இடத்தில் நடும்படி திருவெண்ணைநல்லூர் போலீசார் கூறினர். இந்த சம்பவத்தால் மாதம்பட்டு கிராமத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

    • நடப்பு ஆண்டில் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்கு மார் தெரிவித்துள்ளார்.

    கடலூர்:

    அரசு பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் பொது மக்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் பொருட்கள் கடத்தலை தடுக்க குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு த்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டத்தில் திட்டக்குடி, கொரக்கவாடி, ராமநத்தம், தொழுதூர், வேப்பூர் தாலுக்கா பகுதி களில் நடப்பு ஆண்டில் 91 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 42 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் இந்த வழக்குகளில் சம்பந்தப்பட்ட 16 வாகனங்கள், 3 மோட்டார் சைக்கிள், ஒரு 3 சக்கர வாகனம் என மொத்தம் 20 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடர்புடைய 87 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரேசன் பொருட்கள் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் ரோந்து நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது. ரேஷன் பொருட்கள் கடத்தல் மற்றும் முறைகேடுகள் சம்பந்தமாக பொதுமக்கள் 24 மணி நேரமும் இயங்கக்கூடிய 1800 5995 950 என்ற இலவச தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவிக்கலாம். இத்தகவலை கடலூர் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் சுரேஷ்கு மார் தெரிவித்துள்ளார்.

    • அன்பரசன் என்பவருக்கும் முன்விராத தகராறு இருந்து வந்தது.
    • ரூபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் முதுநகர் பச்சையாங்குப்பத்தை சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருக்கும் இவரது உறவினர் அன்பரசன் என்பவருக்கும் முன்விராத தகராறு இருந்து வந்தது. சம்பவத்தன்று முன்விரோத தகராறு காரணமாக அன்பரசன் அவரது மனைவி இந்துமதி ஆகியோர் முத்துக்குமரன் மனைவி ரூபியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதில் காயமடைந்த ரூபி கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் அன்பரசன், இந்துமதி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பழனி கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.
    • ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    கடலூர்:

    வடலூர் இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வடலூர் -நெய்வேலி மெயின் ரோட்டில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் பழனி (வயது 40), அவரது கடையில் புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.

    இதேபோல் ஆர்.சி. தெற்கு தெருவில் கடை வைத்திருந்த ஆலிஸ்மேரி (41) என்பவரும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்று வந்தார். இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து ரூ.2,200 மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், மண்டல துணை தாசில்தார் துரைராஜ், சம்பவ இடத்திற்கு வந்து கடைகளுக்கு சீல் வைத்தார்.

    • அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
    • போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த கருமாச்சி பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45) . ஊராட்சி செயலாளர். சம்பவத்தன்று எடகொண்டான் பட்டு காலனி பகுதியில் தெரு மின்விளக்கு எரியவில்லை என அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்காததால் ஆகாஷ் அதே பகுதியில் இருந்த தெரு மின்விளக்கு மற்றும் மீட்டர் பாக்ஸை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஊராட்சி செயலாளர் சேகர், ஆகாஷிடம் தட்டி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
    • அன்றைய தினத்தில் மேலே குறிப்பிட்ட நேரத்தில் மின்விநி யோகம் இருக்காது.

    கடலூர்:

    பண்ருட்டி மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்தி ரன் வெளியீட்டு விழா செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- பண்ருட்டி பூங்குணம் துணை மின் நிலையத்தில் வரும் (12-ந் தேதி) வியாழ க்கிழமை அத்தியாவசிய மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெ றஉள்ளதால் அன்றுகாலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    இதனால், அங்குசெட்டிப்பாளையம். சேமக்கோட்டை, விசூர், கருக்கை, மணலூர், கண்டர க்கோட்டை, கனி சப்பாக்கம், சூரக்குப்பம், பனப்பாக்கம், ராசாபாளையம், பக்கிரிப்பாளையம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், ஏரிப்பா ளையம், தட்டா ம்பாளையம், மாளிகை மேடு, புதுப்பே ட்டை, பண்டரக்கோட்டை, கொண்டா ரெட்டிப் பாளையம், வவுசி நகர், ஆர்.எஸ்.மணி நகர், பாரதி நகர், ெரயில்வே காலனி, சாமியார் தர்கா மற்றும் புதுநகர் ஆகிய ஊர்களுக்கும், அதை சுற்றியுள்ள கிராம ங்களு க்கும் அன்றைய தினத்தில் மேலே குறிப்பிட்ட நேரத்தில் மின்விநி யோகம் இருக்காது. இவ்வாறு அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்

    • பண்ருட்டி அடுத்த திருவாமூர் சிவாஜி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    கடலூர்:

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக் டர் நந்தகுமார், சப் இன்ஸ்பெக்டர் ராமசாமி மற்றும் போலீசார் திருவாமூர் பகுதியில் தீவிர மது சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பண்ருட்டி அடுத்த திருவாமூர் சிவாஜி நகரை சேர்ந்த 17 வயது சிறுவன் மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. பின்னர் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அவரது வீட்டில் இருந்த 180மில்லி லிட்டர் அளவு கொண்ட மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

    ×