என் மலர்
கடலூர்
- நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தை பார்த்தனர்
- வாழ்முனி புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.
கடலூர்:
பண்ருட்டி திருவதிகை பகுதியில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இரவு ரோந்து பணி முடிந்து தனது ஜீப்பில் பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார்.இன்ஸ் பெக்டர் டிரைவர் ராஜாஜீப்பை ஓட்டி வந்தார். அப்போது பண்ருட்டி - பாலூர் ரோட்டில் திருவதிகை வீரட்டானே ஸ்வரர் சன்னதி தெருவுக்கு போகும் வழியில் நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தை பார்த்தனர். ஜீப்பை நிறுத்தி விசாரித்த போது காரில் இருந்த டிரைவர் இறங்கி ஓட ஆரம்பித்தார்.ஏண்டா ஓடுகிறாய் என்று கேட்ட போது நான் குடித்து விட்டு இருக்கிறேன்.அதனால் பயந்து ஓடுகிறேன் என்று கூறியுள்ளார். கார் யாருடையது ஏன் இங்கு நிற்கிறாய் என்று விசாரித்தனர். அப்போது முன்னு க்குப் பின் முரணாக கூறியு ள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். சோதனையில் அதில் நாட்டு வெடி மூட்டை, மூட்டையாக இருந்ததை கண்டு பிடித்தனர்.உடனடியாக இந்த காரை பண்ருட்டி போலீசில் நிலையத்திற்கு எடுத்துவந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது எனது மாமா கார் என்று கூறியுள்ளான். மாமாவுக்கு போன் போட சொல்லி கூறியுள்ளனர். போனில் சார்ஜ் இல்லை என்று பதில் அளித்துள்ளான் போனை வாங்கி சார்ஜரில் போட்டு உள்ளனர். போனில் சார்ஜ் ஏறவில்லை.சார்ஜரை மாற்றி போட்டு ள்ளனர் அப்போதும் ஏறவில்லை.பிறகு தான் தெரிந்தது அந்த போனில் பேட்டரி இல்லை என்பது. பேட்டரி தான் இல்லை என்று போனை திறந்து பார்த்தனர். அதில் சிம்கார்டும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசார ணையை தீவிரப்படுத்தினர். அப்போது கடந்த11-ந் தேதிபுதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தில் ஒர்க் ஷாப்பில் இருந்து திருட்டுபோ ன கார் என்று தெரிய வந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் புதுச்சேரி அங்காள குப்பம் அங்காளம்மன் கோவில் தெருஜெய்சீலன் மகன் வாழ்முனி (24) என தெரியவந்தது. கடலூர்போலீஸ் சூப்பிரண்டு,பண்ருட்டி டி.எஸ்.பி.ஆகியோர் உத்தரவின பேரில் வாழ்முனி வேறு ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா?என்பது குறித்து விசாரிக்க பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் புதுவை மாநிலத்திற்கு விரைந்தனர்.
அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்முனிபு துவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அந்த திருட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தபோது தவளக்குப்பத்தில்மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு காரை திருடியதும் தெ ரியவந்தது. இந்த காரில் நாட்டு வெடிகளை திருவதிகையில் உள்ள ஒரு வியாபாரியிடம் கொடுப்பத ற்காக வந்தபோது வழியில் ரெட்டி சாவடியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த பவுன் தங்க நகை 50 ஆயிரம் பணம் கொள்ளை அடித்தது விசாரணை யில் அம்பலமா னது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் வாழ்முனியை ஒப்படைத்தனர். அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசார ணையில் மேலும் பல திட்ட தகவல்கள் அம்பலமாகும் என தெரிகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மதியம் உணவு உண்பதற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திறந்திருந்தது.
- சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
கடலூர்:
குறிஞ்சிப்பாடி விருப்பாச்சி பகுதியில் வசிப்பவர் சசிக்குமார் (வயது 34). இவரது மனைவி ஆனந்தி. இருவரும் அரசு பள்ளியில் ஆசிரியர்களாக பணி செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் காலை வீட்டை பூட்டிக்கொண்டு, பள்ளிக்கு சென்றனர். மதியம் உணவு உண்ப தற்காக வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு திற ந்திருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பின்பக்க கதவும் திறந்திருந்தது. அதிர்ச்சியடைந்த தம்பதியர், வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் உள்ளனவா என சரிபார்த்தனர். அப்போது, பூஜை அறையில் உள்ள லாக்கரில் வைத்திருந்த 2 பவுன் நகை, ரூ.1 லட்சம் பணம் திருடுபோனதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பாக குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகாரளித்த னர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கடலூரில் இருந்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர். திருட்டு சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர். மக்கள் நடமாட்டமுள்ள பகுதியில், பட்டப்பகலில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்து மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- இந்த நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது.
- மக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.
கடலூர்:
புரட்டாசி,தை,ஆடி அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து திதி கொடுத்து வழிபடுவது வழக்கம். இந்த நாளில் முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்து கடலில் புனித நீராடி வழிபாடு செய்வது சிறப்பு வாய்ந்தது என்பதால் இன்று புரட்டாசி மகாளய அமாவாசை முன்னிட்டு கடலூர் தேவனாம்பட்டினம் வெள்ளி கடற்கரை கடற்கரையில் கடலூர் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஏராளமான மக்கள் வருகை தந்து புரோகிதர்கள் முன்னிலையில் படையல் இட்டு தங்களது முன்னோர்களை நினைத்து புனித நீராடி தர்ப்பணம் செலுத்தி வழிபட்டனர். இதேபோல் கடலூர் தென்பெண்ணை ஆறு கெடிலம் ஆறு உள்ளிட்ட பல நீர்நிலைப்பகுதியில் பகுதிகளில் ஏராளமான மக்கள் தங்களது முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்து தர்ப்பணம் கொடுத்தனர்.
- இப்போட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது
- 4 முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது.
கடலூர்:
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு சைக்கிள் போட்டி கடலூரில் நடைபெற்றது. இப்போட்டியை கலெக்டர் அருண் தம்புராஜ், மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் கலந்து கொண்டு கொடியசைத்து தொடங்கி வைத்தனர். மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா வரவேற்றார். இப் போ ட்டியில் 13, 15, 17 வயது என 3 பிரிவுகளின் கீழ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது.
இந்தப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 5 ஆயிரம், இரண்டாம் பரிசாக 3 ஆயிரம், மூன்றாம் பரிசாக 2 ஆயிரம் ரூபாயும், 4 முதல் 10 இடங்களை பிடித்த வர்களுக்கு தலா 250 ரூபாயும் வழங்கப்பட்டது. மேலும் இப் போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழும் வழங்கப்பட்டன. இதில் ஏராள மானவர்க ள்ஆர்வ முடன் கலந்து கொண்டனர்.
- இன்று முதல் 17 -ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
- இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
கடலூர்:
தமிழ்நாட்டின் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 17 -ந்தேதி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்தது. இதனை தொடர்ந்து கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாதிரிப்புலியூர், முதுநகர், திருவந்திபுரம், கோண்டூர், நடுவீரப்பட்டு, நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம், ெரட்டிச்சாவடி, தூக்கணாம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில் லேசான சாரல் மழையுடன் தொடங்கி தொடர்ந்து மழை பெய்து வந்தது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
- ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன.
- 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடைபெறுகிறது.
கடலூர்:
கடலூர் ஊராட்சி ஒன்றியம் குணமங்கலம் கிராமத்தில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது . இதனை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து சிறந்த கால்நடைகளுக்கு பரிசும், முன்னோடி விவசாயிகளுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.கடலூர் மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புதுறையின் கீழ் ஒரு கால்நடை பெரு மருத்துவமனையும், 5 கால்நடை மருத்துவமனையும், 92 கால்நடை மருந்தகங்களும், 56 கால்நடை கிளை நிலையங்களும், ஒரு நடமாடும் கால் நடை மருந்தகமும், ஒரு கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி நிலையமும், ஒரு கால்நடை நோய் புலனாய்வு பிரிவும் செயல்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் மொத்தம் 3,53,663 மாடுகளும், 6,031 எருமை மாடுகளும், 42,675 செம்மறியாடுகளும், 3,41,587 வெள்ளாடுகளும், 9,50,457 கோழிகளும், 8,280 பன்றிகளும் விவசாயயிகளால் வளர்க்கப்பட்டு வருகின்றன.
அவற்றினை பாதுகாத்தல், பெருக்குதல் மற்றும் வருவாய் ஈட்டும் நோக்கத்துடன் 14 ஊராட்சி ஒன்றியங்களில் 280 முகாம்கள் நடைபெறுகிறது. மேலும், இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தல், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி, குடற்புழு நீக்கம் செய்தல், சினை பரிசோதனை, மலட்டு நீக்க சிகிச்சை, தாது உப்பு கலவை வழங்குதல், கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் நோய் தடுப்பூசி போடுதல் மற்றும் சிறு அறுவை சிகிச்சை போன்ற சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும். கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் இச்சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாமில் தங்கள் கால்நடைகளுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை பெற்று பயன்பெறுமாறு கலெக்டர் அருண் தம்புராஜ் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மண்டல இணை இயக்குநர் (பொறுப்பு) மோகன் மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
- இறந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனக் கூறி புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- கல்லூரி ஆரம்பம் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும்.
கடலூர்:
கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் பண்ருட்டியை சேர்ந்த கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் உள்பட 9 பேர் ஷேர் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தபோது ஷேர் ஆட்டோ திடீரென்று சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவர் தமிழ்ச்செல்வன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இறந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்குவதற்கு உத்தரவிட்டார். ஆனால் இறந்த தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிதி வழங்க வேண்டும் எனக் கூறி புதுப்பேட்டை பகுதியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இன்று காலை பெரியார் அரசு கலைக் கல்லூரிக்கு வழக்கம் போல் மாணவர்கள் வந்தனர். பின்னர் திடீரென்று மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு கோஷங்கள் எழுப்பிக்கொண்டு கல்லூரி முன்பு சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது கல்லூரி ஆரம்பம் மற்றும் முடியும் நேரத்தில் அரசு பஸ் விட வேண்டும். ஆட்டோ மற்றும் ஷேர் ஆட்டோ போன்றவை எங்களுக்கு தேவையில்லை. மேலும் இறந்த மாணவன் தமிழ்ச்செல்வன் குடும்பத்திற்கு கூடுதலாக நிவாரண உதவி வழங்குவதோடு, அவரது குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி தொடர்ந்து கோஷம் எழுப்பினார்கள்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அந்த சமயத்தில் மாணவர்கள் அங்கிருந்து தலைமை தபால் நிலையம் வந்து மறியலில் ஈடுபட ஊர்வலமாக புறப்பட்டனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதனை ஏற்காமல் மாணவர்கள் ஊர்வலமாக புறப்பட்டு வந்தனர். உப்பனாறு பகுதியில் வரும் போது தாசில்தார் விஜய் ஆனந்த் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் அங்கு நின்றனர். அவர்களும் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வருமாறு அழைத்தனர். அதனையும் ஏற்காத மாணவர்கள் தீயணைப்பு துறை அலுவலகம் அருகே ஊர்வலமாக வந்தனர்.
அங்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். வருவாய் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் நீங்கள் வாய்மொழி வழியாகத்தான் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறோம் என கூறுகிறீர்கள். கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என எழுத்து பூர்வமாக எழுதி கொடுங்கள் என்றனர். மேலும் பேச்சுவார்த்தைக்கு கலெக்டர் வரவேண்டும் என்றனர். கலெக்டர் வெளியூர் சென்று இருப்பதால் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன் அங்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் கடலூரில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.
- ஊழியர்கள் அங்கு வந்து, குடிநீர் குழாயை எந்தவித அறிவிப்பும் இன்றி சிமெண்ட் வைத்து அடைத்து விட்டனர்.
- அதன் அருகாமையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை அடுத்த சுந்தர்ராம் நகரில் மாநகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாயில் பழுது ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாநகராட்சியில் புகார் அளித்தனர். சில நாட்களுக்கு முன்பு மாநகராட்சி ஊழியர்கள் அங்கு வந்து, குடிநீர் குழாயை எந்தவித அறிவிப்பும் இன்றி சிமெண்ட் வைத்து அடைத்து விட்டனர். இதனால் அப்பகுதி மக்களுக்கு குடிநீர் கிடைக்காமல் அவதி அடைந்து வந்தனர்.
இந்நிலையில் இன்று காலை ஒருங்கிணைப்பாளர் ஆல்பேட்டை பாபு தலைமையில் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூடப்பட்ட குடிநீர் குழாய் மீது வெள்ளை துணி போட்டு, மாலை அணிவித்து, அதன் அருகாமையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து அழுது போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- கடலூர் முதுநகரில் மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதி கூலி தொழிலாளி பலியானார்.
- தங்கை வீடான கடலூர் சாவடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
கடலூர்:
கடலூர் அடுத்த கிருஷ்ணங்குப்பத்தை சேர்ந்தவர் நிக்சன் மோரோ (வயது 32). கூலி தொழிலாளி. நேற்று நள்ளிரவு தனது தங்கை வீடான கடலூர் சாவடிக்கு சென்று விட்டு மீண்டும் தனது ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கடலூர் அடுத்த சேடப்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கட்டுப்பாட்டை இழுந்த மோட்டார் சைக்கிள் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் நிக்சன் மோரோவிற்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து நிக்சன் மோரோவின் உடலை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- இந்நிலையில் கோவில் கோபுரம் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
- இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
கடலூர்:
விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் திரு கொளஞ்சியப்பர் கோவில் உள்ளது. இங்கு ராமதாஸ் (வயது 50), துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கோவில் கோபுரம் மீது ஏறி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி கீழே விழுந்தார்.
இதில் தலையில் பலத்த காயம் அடைந்த ராமதாசை, விருத்தாசலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இது குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
- இவரது மனைவி கேரளாவில் தங்கி பணி செய்து வருகிறார்.
- தாய்மாமன், கேரளாவில் உள்ள மாணவியின் தாயிடம் நடந்ததை கூறி உடனே வரவழைத்துள்ளார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தொழிலாளி, கோயம்மேடு மார்க்கெட்டில் பணி செய்து வந்தார். இவரது கையில் அடிபட்டதால் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார். இவரது மனைவி கேரளாவில் தங்கி பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 5-ம் வகுப்பு பயிலும் மகள் உள்ளார். இந்நிலையில் ெதாழிலாளி, தனது 10 வயது மகளை அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் உடல்நிலை சரியில்லாமல் போன 5-ம் வகுப்பு மாணவியிடம், அவரது தாய்மாமன் விசாரித்துள்ளார்.
மாணவி நடந்த விஷய ங்களை தாய்மாமனிடம் கூறியுள்ளார். அதிர்ச்சி யடைந்த தாய்மாமன், கேரளாவில் உள்ள மாணவியின் தாயிடம் நடந்ததை கூறி உடனே வரவழைத்துள்ளார். வீட்டிற்கு வந்த தாய், மகளிடம் விசாரணை மேற்கொண்டு நடந்த சம்பவத்தை உறுதி செய்தார். உடனடியாக வேப்பூர் போலீசாரிடம் புகார் செய்தார். போக்சோ பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- விஸ்வநாதன் என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம் இருந்து வந்தது.
- போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் காடாம் புலியூர் அடுத்த வேகாக் கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி (42)தி.மு.க. வைச் சேர்ந்தவர். இவர் வேகாக்கொல்லை ஊராட்சி மன்ற துணைத் தலைவ ராகஇருந்து வருகிறார். இவரது மனைவி செல்வி. இவர்களுக்கும்பக்கத்து வீட்டைச் சேர்ந்த விஸ்வ நாதன் (51)என்பவருக்கும் நிலப்பிரச்சனை சம்பந்த மாக முன்விரோதம்இருந்து வந்தது. கொண்டான் குளம் அருகே உள்ள 141 செண்ட் நிலத்தை 30 வருடங்களாக விஸ்வநாதன் ஆக்கிரமிப்பு செய்ததை துணைத்தலைவர் தட்சிணாமூர்த்தி ஆக்கிர மிப்புகளை அகற்றச் சொல்லி அகற்றியதாக தவறாக தினமும் திட்டிக் கொண்டிருந்தார்.
இன்று தட்சிணா மூர்த்தி மற்றும் அவரது மனைவி மற்றும் தம்பி மகன் அறிவு ஆகியோரை வீட்டில் இருந்த போது விஸ்வநாதன் அவரது மனைவி சின்னபொன்னு மற்றும் மகன்கள் பாஸ்கர், பிரசாந்த் அனைவரும் சேர்ந்து இரும்பு பைப்பாலும், கையாலும், கட்டையாலும் அடித்துள்ளனர். இதில் காயம் அடைந்தவர்கள் பண்ருட்டி அரசுமருத்துவமனைக்கு சென்று விட்டு பின்னர் மேல்சிகிச்சைக்கு கடலூர் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசில் புகார் செய்யப்பட்டது காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ தாமரைப் பாண்டியன் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்.






