என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாட்டு வெடிகள்"

    • நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தை பார்த்தனர்
    • வாழ்முனி புதுவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது.

    கடலூர்:

    பண்ருட்டி திருவதிகை பகுதியில் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இரவு ரோந்து பணி முடிந்து தனது ஜீப்பில் பண்ருட்டிக்கு வந்துகொண்டிருந்தார்.இன்ஸ் பெக்டர் டிரைவர் ராஜாஜீப்பை ஓட்டி வந்தார். அப்போது பண்ருட்டி - பாலூர் ரோட்டில் திருவதிகை வீரட்டானே ஸ்வரர் சன்னதி தெருவுக்கு போகும் வழியில் நம்பர் பிளேட் எதுவும் இல்லாமல் வந்த கார் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தை பார்த்தனர். ஜீப்பை நிறுத்தி விசாரித்த போது காரில் இருந்த டிரைவர் இறங்கி ஓட ஆரம்பித்தார்.ஏண்டா ஓடுகிறாய் என்று கேட்ட போது நான் குடித்து விட்டு இருக்கிறேன்.அதனால் பயந்து ஓடுகிறேன் என்று கூறியுள்ளார். கார் யாருடையது ஏன் இங்கு நிற்கிறாய் என்று விசாரித்தனர். அப்போது முன்னு க்குப் பின் முரணாக கூறியு ள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் காரை சோதனை செய்தனர். சோதனையில் அதில் நாட்டு வெடி மூட்டை, மூட்டையாக இருந்ததை கண்டு பிடித்தனர்.உடனடியாக இந்த காரை பண்ருட்டி போலீசில் நிலையத்திற்கு எடுத்துவந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையின் போது எனது மாமா கார் என்று கூறியுள்ளான். மாமாவுக்கு போன் போட சொல்லி கூறியுள்ளனர். போனில் சார்ஜ் இல்லை என்று பதில் அளித்துள்ளான் போனை வாங்கி சார்ஜரில் போட்டு உள்ளனர். போனில் சார்ஜ் ஏறவில்லை.சார்ஜரை மாற்றி போட்டு ள்ளனர் அப்போதும் ஏறவில்லை.பிறகு தான் தெரிந்தது அந்த போனில் பேட்டரி இல்லை என்பது. பேட்டரி தான் இல்லை என்று போனை திறந்து பார்த்தனர். அதில் சிம்கார்டும் இல்லை.  இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் விசார ணையை தீவிரப்படுத்தினர். அப்போது கடந்த11-ந் தேதிபுதுச்சேரி மாநிலம் தவளக்குப்பத்தில் ஒர்க் ஷாப்பில் இருந்து திருட்டுபோ ன கார் என்று தெரிய வந்தது. விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் புதுச்சேரி அங்காள குப்பம் அங்காளம்மன் கோவில் தெருஜெய்சீலன் மகன் வாழ்முனி (24) என தெரியவந்தது. கடலூர்போலீஸ் சூப்பிரண்டு,பண்ருட்டி டி.எஸ்.பி.ஆகியோர் உத்தரவின பேரில் வாழ்முனி வேறு ஏதாவது வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறாரா?என்பது குறித்து விசாரிக்க பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் இன்ஸ்பெக்டர்கள் தங்கவேலு, பிரசன்னா ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் புதுவை மாநிலத்திற்கு விரைந்தனர்.

    அங்கு விசாரணை நடத்தினர். விசாரணையில் வாழ்முனிபு துவை மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடியது தெரியவந்தது. அந்த திருட்டு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வந்தபோது தவளக்குப்பத்தில்மோட்டார் சைக்கிளை விட்டு விட்டு காரை திருடியதும் தெ ரியவந்தது. இந்த காரில் நாட்டு வெடிகளை திருவதிகையில் உள்ள ஒரு வியாபாரியிடம் கொடுப்பத ற்காக வந்தபோது வழியில் ரெட்டி சாவடியில் ஒரு வீட்டில் புகுந்து அங்கிருந்த பவுன் தங்க நகை 50 ஆயிரம் பணம் கொள்ளை அடித்தது விசாரணை யில் அம்பலமா னது. இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் வாழ்முனியை ஒப்படைத்தனர். அங்கு அவனிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. விசார ணையில் மேலும் பல திட்ட தகவல்கள் அம்பலமாகும் என தெரிகிறது. இந்த சம்பவம் இந்த பகுதியில் பெரும் பரப ரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின.
    • அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.

    காரிமங்கலம்:

    தருமபுரி மாவட்டம், ஆட்டுக்காரன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் அபி (வயது28). இவருடைய மனைவி நாகவேணி (25). இவர்களுக்கு கவிநிலா (6) என்ற மகள் இருந்தாள். கணவன்-மனைவி இருவரும் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் கூலி வேலை செய்து வந்தனர்.

    காரிமங்கலம் அருகே உள்ள பூமாண்டஅள்ளி கிராமத்தில் வசிக்கும் வள்ளி என்ற பெண்ணும், நாகவேணியுடன் பெங்களூருவில் வேலைபார்த்து வந்துள்ளார். அவர்கள் இருவரும் தோழிகளாக பழகி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாட வள்ளி தனது சொந்த கிராமமான பூமாண்டஅள்ளிக்கு சிறுமி கவிநிலாவை மட்டும் அவரது பெற்றோர் அனுமதியுடன் அழைத்து வந்துள்ளார். வள்ளியின் பக்கத்து வீட்டில் தர்மன் என்பவர் வசித்து வருகிறார்.

    நேற்று மதியம் சிறுமி கவிநிலா வள்ளியிடம் கூறிவிட்டு தர்மன் வீட்டின் மொட்டை மாடிக்கு விளையாட சென்றாள். அந்த மொட்டை மாடியில் சிறிய அறை ஒன்று உள்ளது.

    அந்த அறையில் நாட்டு வெடிகள் (கயிற்றால் சுற்றப்பட்ட குண்டு வெடிகள்) அங்கு வைத்திருந்தனர். இதனிடையே அந்த அறையில் இருந்த வெடிகள் திடீரென வெடித்து சிதறின. இதில் எதிர்பாராத விதமாக அந்த அறையின் ஒரு பக்க சுவர் கீழே இடிந்து விழுந்துள்ளது. மேலும் அந்த அறையும் இடிந்து சேதம் அடைந்தது.

    அதே நேரத்தில் மொட்டை மாடியில் விளையாடிக்கொண்டிருந்த அந்த சிறுமி கவிநிலாவும் தூக்கி வீசப்பட்டு உடல் துண்டு, துண்டாகி கருகிய நிலையில் பரிதாபமாக இறந்தாள்.

    இதுகுறித்து தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். மேலும் விபத்துக்கான காரணத்தை கண்டறிய தடயங்களையும் சேகரித்தனர். பின்னர் அவர்கள் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சிறுமி உயிரிழந்த செய்தி பெங்களூருவில் வசித்து வரும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனை கேட்டு அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் உடனே விரைந்து வந்து தனது மகள் உடலை பார்த்து கதறி அழுதனர்.

    இந்த வெடி விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தியதில் பன்றிகளை வேட்டையாட வெடி மருந்துகளை வாங்கிக் கொண்டு தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேர் அனுமதியின்றி சட்ட விரோதமாக நாட்டு வெடிகள் தயாரித்துள்ளனர்.

    இதனால் தயாரித்த வெடிகளை காய வைத்து மொட்டை மாடியில் அறை யில் வைத்துள்ள போது எதிர்பாராதவிதமாக வெடி த்ததில் சிறுமி பலியாகி யுள்ளது தெரியவந்தது.

    இது தொடர்பாக போலீ சார் வழக்குபதிவு செய்து வீட்டின் உரிமையாளர் தர்மன், அவரது மருமகன் கிருஷ்ணன் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் வெடிக்காத நாட்டு வெடிகளை பறிமுதல் செய்தனர்.

    • செஞ்சியில் நடந்த ரோந்தில் 27 நாட்டு வெடிகளுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • அவர் வைத்தி ருந்த பையில் காட்டு பன்றிக்கு வைக்கும் 27நாட்டு வெடிகள் இருந்தது தெரிய வந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே சிறுவாடி காப்பு காட்டில்,வனசரக காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, சந்தேக ப்படும்படியாக அங்குநின்றி ருந்த வாலிபரை மடக்கி விசாரணை செய்தனர். விசாரணையில் திருவண்ணாமலை மாவட்டம்சேத்துப்பட்டு மேல்வில்லிவலத்தை சேர்ந்த சதீஷ், (வயது20)என்பதும், அவர் வைத்தி ருந்த பையில் காட்டு பன்றிக்கு வைக்கும் 27நாட்டு வெடிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, செஞ்சி வன சரக காவலர்கள் வழக்கு பதிந்து சதீஷை கைது செய்து, சிறையில்அடைத்தனர். மேலும் 27 வெடிகளை பறிமுதல்செய்தனர்.

    ×