ஹெல்மெட் அணிந்து முகவரி விசாரித்த வாலிபர் மூதாட்டி கழுத்திலிருந்த 4 பவுன் செயினை பறித்து தப்பி ஓட்டம்

ஜெயந்தி மாலா சம்பவத்தன்று காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்தார். ஜெயந்தி மாலா முகவரி தெரியாது எனக்கூறி அங்கிருந்து செல்ல முயன்றார்.
ஹெல்மெட் அணிந்து முகவரி விசாரித்த வாலிபர் மூதாட்டி கழுத்திலிருந்த 4 பவுன் செயினை பறித்து தப்பி ஓட்டம்
Published on

கடலூர்:

வடலூர் என்.எல்.சி. ஆபீசர்ஸ் நகரை சேர்ந்தவர் இளமுருகு. இவரது மாமி யார் ஜெயந்தி மாலா (வயது 62). சம்பவத்தன்று காய்கறி வாங்கிக் கொண்டு தனது வீட்டுக்கு நடந்து வந்து கொண்டி ருந்தார். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து கொண்டு வந்த ஒரு நபர் ஜெயந்தி மாலாவிடம் முகவரி விசாரித்தார்.

அப்போது ஜெயந்தி மாலா முகவரி தெரி யாது எனக்கூறி அங்கி ருந்து செல்ல முயன்றார். அப்போது அந்த நபர் திடீரென்று ஜெயந்தி மாலா வின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்கச் செயினை பறித்துக் கொண்டு கண்ணி மைக்கும் நேரத்தில் தப்பி விட்டார். இதன் மதிப்பு ரூ.2 லட்சம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் வடலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com