என் மலர்
உள்ளூர் செய்திகள்

குள்ளஞ்சாவடி அருகே ஊராட்சி செயலாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துவர் கைது
- அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார்.
- போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த கருமாச்சி பாளையத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 45) . ஊராட்சி செயலாளர். சம்பவத்தன்று எடகொண்டான் பட்டு காலனி பகுதியில் தெரு மின்விளக்கு எரியவில்லை என அப்பகுதியை சேர்ந்த ஆகாஷ் ஊராட்சி மன்ற தலைவரிடம் தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் இதற்கு நடவடிக்கை எடுக்காததால் ஆகாஷ் அதே பகுதியில் இருந்த தெரு மின்விளக்கு மற்றும் மீட்டர் பாக்ஸை உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பார்த்த ஊராட்சி செயலாளர் சேகர், ஆகாஷிடம் தட்டி கேட்டபோது கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து குள்ளஞ்சாவடி போலீசார் ஆகாஷ் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
Next Story






