வேப்பூர் அருகேதரைக் கிணற்றில் தவறிவிழுந்து 6 வயது சிறுமி பலி

தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர்.
வேப்பூர் அருகேதரைக் கிணற்றில் தவறிவிழுந்து 6 வயது சிறுமி பலி
Published on

கடலூர்:

வேப்பூர் அருகே தரைக் கிணற்றில் தவறி விழுந்து 6வயது குழந்தை பலியானது.கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள சித்தேரி காலனியை சேர்ந்தவர் மணி. கூலித் தொழிலாளி. இவரது மகள் கனிஷ்கா(வயது6).இவள் சித்தேரி அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று சிறுமி கனிஷ்காஅப் பகுதியில் உள்ள வயல் வெளியில் நடந்து சென்றார். அப்போது அங்குள்ள200 அடி ஆழ தரைக் கிணற்றில் தவறி விழுந்தாள்.

இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அங்கு ஓடி வந்து சிறுமியை மீட்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சிறுமியை நீண்ட நேரம் போராடி மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே சிறுமி கனிஷ்கா பரிதாபமாக இறந்தார். இது குறித்து சிறுப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

X

Maalai Malar
www.maalaimalar.com