search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டி யூனியன் அலுவலகம்  அருகில் தனியார் ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி: இன்வெட்டர் - பேட்டரி திருட்டு
    X

    இன்வெட்டர் மற்றும் பேட்டரிகள் கொள்ளைபோன ஏ.டி.எம்.மினை படத்தில் காணலாம்.

    பண்ருட்டி யூனியன் அலுவலகம் அருகில் தனியார் ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி: இன்வெட்டர் - பேட்டரி திருட்டு

    • இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார்.
    • இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகரில் தனியார் நிறுவன ஏ.டி.எம். 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. அதில் பண்ருட்டி யூனியன் அலுவலகம் எம்.ஜி.ஆர். சிலை பின்புறம் உள்ள தனியார் கட்டிடத்தில் ஏ.டி.எம். இயங்கி வருகிறது. இந்த ஏ.டி.எம். நேற்று இரவு இருண்டு கிடந்தது. இதனை கண்ட கட்டிட உரிமையாளர், தனியார் நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தார். இன்று காலை தனியார் நிறுவன ஊழியர்கள் ஏ.டி.எம். மையத்திற்கு வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தின் பின்புறமுள்ள கதவை திறக்க முடியவில்லை. அதில் ஏற்கனவே இருந்த பூட்டிற்கு பதிலாக வேறு ஒரு பூட்டு போடப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த ஊழியர்கள் பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    அந்த அறையில் இருந்த இன்வெட்டர், பேட்டரி போன்ற மின் சாதனப் பொருட்களை காணவில்லை. இதனால் மின் விநியோகம் தடைபடும் போது ஏ.டி.எம்.ல் இருள் சூழ்ந்து பணிசெய்யாமல் போனதை கண்டறிந்தனர். இது குறித்து பண்ருட்டி போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். ஏ.டி.எம். கொள்ளை யர்களின் கைவரிசையா? அல்லது பேட்டரி திருடர்கள் இதனை செய்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×