தொழில் தொடங்க 16 பவுன் நகையை வாங்கி ஏமாற்றியவர் மீது வழக்கு

சம்பவத்தன்று சுதாகர் தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெனிதாமேரிடம் பணம் கேட்டார். 16 பவுன் நகையை தருமாறு சுதாகரிடம் கேட்டார். அவர் வழங்கவில்லை என கூறப்படுகிறது.
தொழில் தொடங்க 16 பவுன் நகையை வாங்கி ஏமாற்றியவர் மீது வழக்கு
Published on

கடலூர்:

கடலூர் அடுத்த குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் ஜெனிதாமேரி. விருத்தாச்சலம் பூதாம்பூரை சேர்ந்தவர் சுதாகர். இருவரும் நண்பர்கள். சம்பவத்தன்று சுதாகர் தொழில் தொடங்கப் போவதாக கூறி ஜெனிதாமேரிடம் பணம் கேட்டார். அவர் வைத்திருந்த 16 பவுன் நகையை சுதாகரிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சுதாகர் அந்த நகையை ரூ.3 லட்சத்திற்கு அடமானம் வைத்துள்ளார். இந்நிலையில் ஜெனிதா மேரி தனது 16 பவுன் நகையை தருமாறு சுதாகரிடம் கேட்டார். அவர் வழங்கவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து ஜெனிதா மேரி குறிஞ்சிப்பாடி போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com