search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "price of fish"

    • பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர்.
    • தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    கடலூர்:

    புரட்டாசி மாதம் பெரு மாளுக்கு உகந்த மாதம் என்பதால் கடந்த 3 வாரமாக பொதுமக்கள் விரத முறையை கடைப்பிடித்தனர். நேற்று 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு கடலூர் திருவந்திபுரம் தேவநாத சாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவில்களில் வழக்கத்தை விட அதிக அளவில் கூட்டம் அலைமோதி பயபக்தியுடன் சாமி கும்பிட்டு வந்தனர். இந்த நிலையில் நேற்று சனிக்கிழமை முடிந்த நிலையில் இன்று காலை முதல் கடலூர் துறைமுகம் மற்றும் இறைச்சி கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதி தங்களுக்கு தேவையான மீன் மற்றும் இறைச்சிகளை வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் கடலூர் துறைமுகத்தில் கடந்த மூன்று வாரமாக பொது மக்கள் இல்லாமல் வெறிச் சோடி காணப்பட்டதோடு, நேற்று ஆங்காங்கே இறைச்சி கடைகள் மூடப் பட்டு இருந்தது. இன்று அதிகாலை 3 மணி முதல் வியாபாரி களும், பொதுமக்களும் ஏராளமான அளவில் அங்கு குவிந்தனர். மேலும் தங்களுக்கு தேவையான மீன் வகைகளை போட்டி போட்டுக் கொண்டு வாங்கி சென்றனர்.

    இதில் வஞ்சரம் கிலோ 650 முதல் 700 ரூபாய்க்கும், சங்கரா மீன் 300 ரூபாய் முதல் 350 ரூபாய் வரைக் கும், பன்னி சாத்தான் மீன் 350 ரூபாய்க்கும், பாறை மீன் 350 ரூபாய்க்கும், கனவா வகை மீன்கள் 250 ரூபாய்க்கும், நெத்திலி மீன் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதேபோல இறைச்சி கடைகளிலும் பொது மக்கள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப் பட்டது.

    ×