என் மலர்
உள்ளூர் செய்திகள்

X
சிதம்பரம் அருகே வெடிபொருள் தயாரித்தவர் கைது
By
மாலை மலர்8 Oct 2023 1:02 PM IST

- சிதம்பரம் அருகே வெடிபொருள் தயாரித்தவர் கைது செய்யப்பட்டார்.
- வெடிப் பொருள்கள் தயாரிக்கும் மூலப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உரிமம் இன்றி குடியிருப்பு பகுதியில் வெடிப் பொருள்கள் கள்ளத்தனமாக தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து அண்ணா மலைநகர் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது கூத்தன்கோ வில் காலணி அருகே குடியிருப்பு பகுதியில் கள்ளத் தனமாக வெடிப் பொருள்கள் தயாரித்த சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சை முத்து நகரைச் சேர்ந்த ஜெயசங்கர் (வயது 53) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து வெடிப் பொருள்கள் தயாரிக்கும் மூலப்பொருள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அண்ணா மலைநகர் போலீசா வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
Next Story
×
X