search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடலூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்பு
    X

    கடலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சரும் , மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத் பேசினார்.

    கடலூரில் புதிய பஸ்நிலையம் அமைக்க வலியுறுத்தி அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்: முன்னாள் அமைச்சர் எம்.சி. சம்பத் பங்கேற்பு

    • வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.
    • பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    கடலூர்:

    அ.தி.மு.க.ஆட்சியில் கடலூரில் புதிய பஸ் நிலையம் அமைக்க தேர்வு செய்யப்பட்ட இடத்தில் புதிய பஸ் நிலையத்தை அமைக்க வேண்டும். கடலூர் மாநகராட்சியில் நிலவி வரும் சுகாதார சீர்கேடுகளை உடனடியாக சீர்செய்திட வலியுறுத்தியும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆணைக்கிணங்க கடலூர் வடக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கடலூர் மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம். சி.சம்பத் தலைமை தாங்கி கண்டன உரை ஆற்றினார். மாவட்ட அவைத்தலைவர் சேவல் குமார் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் ஜானகிராமன், ஒன்றிய செயலாளர் காசிநாதன், அழகானந்தம், ஒன்றிய குழு தலைவர் தெய்வ.பக்கிரி, பகுதி செயலாளர்கள் பாலகிருஷ்ணன், கந்தன், வினோத் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எம்.சி.தாமோதரன், மீனவர் அணி தங்கமணி, பேரவை துணைச் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ சத்யா பன்னீர் செல்வம், அண்ணா தொழிற்சங்க செயலாளர் கே.ஆர். பாலகிருஷ்ணன், வர்த்தக பிரிவு செயலாளர் வரதராஜன், மாநகராட்சி கவுன்சிலர்கள் தஷ்ணா, வினோத், மாவட்ட மாணவரணி செயலாளர் கலையரசன், ஒன்றிய செயலா ளர்கள் தமிழ்ச்செல்வன், நாகபூஷணம், சிவா, நகர செயலாளர் தாடி முருகன், பேரூராட்சி செயலாளர்கள் கனகராஜ், அர்ச்சுனன், இலக்கிய அணி ஏழுமலை, முத்து, மாவட்ட பிரதிநிதி தமிழ்செல்வன், ஒன்றிய கவுன்சிலர் வேல்முருகன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர்கள் கெமிக்கல் மாதவன், வெங்கட்ராமன் ஆகியோர் நன்றி கூறினர்.

    Next Story
    ×