என் மலர்
உள்ளூர் செய்திகள்

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கடலூர் பீச் ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு வேளாண் உபகரணங்களை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி கூட்டுறவு வங்கி பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- தொடர் விடுப்பில் அனைத்து பணியாளர்களும் செல்ல முடிவெடுத்தனர்.
- இணை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கடலூர்:
கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளரிடம் மனு கொடுத்தனர். இதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் வேளாண் கருவிகளை மண்டல இணைப்பதிவாளரிடம் ஒப்படைத்துவிட்டு, தொடர் விடுப்பில் அனைத்து பணியாளர்களும் செல்ல முடிவெடுத்தனர். அதன்படி தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தினர் கடலூர் பீச் ரோட்டில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு வேளாண் உபகரணங்களை ஒப்படைக்கும் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார். ஆலோசகர் பாண்டியன், மாவட்ட செயலாளர் சேகர், பொருளாளர் மாரிமுத்து, மாவட்ட மகளிரணி செயலாளர் லட்சுமி நாராயிணி, மண்டல இணை செயலாளர் சீனுவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட துணை தலைவர்கள் தாமோதரன், சாந்தகுமார், இணை செயலாளர்கள் வாசுகி, உமா மகேஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.






