கடலூர் எஸ்.பி. அலுவலகத்தில் மணக்கோலத்தில் காதல் ஜோடி தஞ்சம்:பாதுகாப்பு கேட்டு மனு

காதல் விவகாரம் பற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மணப்பெண் மகாலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
பாதுகாப்பு கேட்டு கடலூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு மணக்கோலத்தில் வந்த காதல் ஜோடியை படத்தில் காணலாம்.
பாதுகாப்பு கேட்டு கடலூர் எஸ்.பி. அலுவலகத்திற்கு மணக்கோலத்தில் வந்த காதல் ஜோடியை படத்தில் காணலாம்.
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள ஆலிச்சிக்குடியை சேர்ந்தவர் மனோகரன் மகள் மகாலட்சுமி (வயது 19). இளங்கலை படித்து வருகிறார். இவரும் அதே பகுதியை சேர்ந்த இளங்கோவன் மகன் தமிழ்வாணன் (24) என்பவரும் கடந்த 3 வருடமாக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரம் பற்றி அறிந்த மகாலட்சுமியின் பெற்றோர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் வேறொரு வாலிபருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர்.

இதனால் மனமுடைந்த மகாலட்சுமி நேற்று தமிழ்வாணனுடன் வீட்டை விட்டு வெளியேறி, திருவந்திபுரம் ஆஞ்சநேயர் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மணக்கோலத்தில் இருவரும் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். மணப்பெண் மகாலட்சுமி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதில் உள்ளதாவது, எனக்கும், தமிழ்வாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் எனது பெற்றோர் மூலம் அச்சுறுத்தல் ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் எனக்கும், தமிழ்வாணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மணக்கோலத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com