சேத்தியாத்தோப்பு அருகேபஸ் படியில் பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து பலி

விருத்தாசலம் தர்மநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்பஸ்சில் பின்பக்க படியில் நின்று பயணம் செய்தார்.
சேத்தியாத்தோப்பு அருகேபஸ் படியில் பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து பலி
Published on

கடலூர்:

விருத்தாசலம் தாலுக்கா தர்மநல்லூர் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 25). இவர் தனியார் பஸ்சில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். இவர் அதே பஸ்சில் பின்பக்க படியில் நின்று பயணம் செய்தார். அப்போது எறும்பூர் பணஞ்சாலை அருகே வளைவில் பஸ் திரும்பிய போது தவறி கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தமிழ்வா ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீ சார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com