என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fumigants"

    • நகர்புறங்களில் மாவட்டம் முழுவதும் 126 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்து.
    • 1000 -க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பணியாளர்க ளும் இம்முகாமில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 15 தினங்களாக பருவநிலை மாற்றத்தினால் ஏற்பட்டுள்ள காய்ச்சலை கட்டுப்படுத்திட பல்வேறு நடவடிக்கைகளை சுகாதார துறையும் மாவட்ட நிர்வாகமும் மேற்கொண்டு வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கிராம மற்றும் நகர்புறங்களில் மாவட்டம் முழுவதும் 126 இடங்களில் சிறப்பு காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்து. இதற்காக மாவட்டதில் பல்வேறு திட்டங்களிலுள்ள 52 நடமாடும் மருத்துவ குழுவினரும், 1450 சுகாதார துறை ஊழியர்களும், 727 கொசு புழு தடுப்பு பணியாளர்களும். 1000 -க்கும் மேற்பட்ட உள்ளாட்சி பணியாளர்க ளும் இம்முகாமில் ஈடுபடு த்தப்பட்டனர். கடலூர் ஒன்றியம் பச்சையா ன்குப்பம் கிராமத்தில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் கலெக்டர் அருண் தம்புராஜ், நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    மேலும் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று மருத்துவ முகாம்கள் நடத்தும் 25 நடமாடும் மருத்துவ வாகனங்களை கொடி அசைத்து தொடக்கி வைத்ததுடன் 25 புகைதெளிப்பு எந்திர இயக்கங்களையும் கலெக்டர் அருண் தம்புராஜ் தொடக்கி வைத்தார். மேலும் ஊராட்சிகள் மூலம் ஒட்டுமொத்த தூய்மை பணியினை மேற்கொண்டும், 727 கொசு தடுப்பு பணியாளர்களை க்கொண்டு கொசு புழு அழித்தல், புகை மருந்து தெளிப்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் முகாம் பகுதிகளிலுள்ள மேல் நிலை தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு குளோரி னேசன் செய்யப்பட்டது.

    ×