பண்ருட்டி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து

முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார்.2 பேர் உள்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.
பண்ருட்டி அருகே வாலிபருக்கு கத்திக்குத்து
Published on

கடலூர்:

பண்ருட்டி அடுத்த வல்லம் அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர்கிருஷ்ணமூர்த்தி. இவரது மகன் அன்புச்செல்வன் (வயது 23) இவர் மேல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்த பட்டுராசா மகன் சிவமணி யிடம்கடனாக முந்திரி வாங்கி ஏற்றுமதி செய்து வந்தார்.

தற்போது சொந்தமாக வாகனம் வாங்கி முந்திரி பயிர்ஏற்றி வருகிறார். இதனால் இவர்களுக்குள் தொழில் ரீதியாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் சம்பவத்தன்று இரவு அன்புச்செல் வனை சிவமணி, வெங்கடேசன் மற்றும் 2 பேர் உள்பட 4 பேர் கத்தியால் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் காயமடைந்த அன்புச்செல்வன் பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது பற்றி தகவல் அறிந்ததும் காடாம்புலியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்ராஜ தாமரை பாண்டியன் வழக்கு பதிவு செய்து மேல்மேட்டுக்குப்பம்சிவமணி, வெங்கடேசன்ஆகிய இருவரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் 2பேரை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com