சேத்தியாதோப்பு அருகே கோவில் உண்டியலில் பணம் திருட்டு

பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது.கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார்.
சேத்தியாதோப்பு அருகே கோவில் உண்டியலில் பணம் திருட்டு
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அடுத்த பின்னலூர் கிராமத்தில் வீரன் கோவில் உள்ளது. இங்கு கடந்த மாதம் கும்பாபிஷேகம் நடைபெற்று 48 நாள் பூஜை சில நாட்களுக்கு முன்பு முடிந்து உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார். நேற்று காலையில் கோவிலுக்கு வந்து பார்த்தபோது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் வேறு இடத்தில் சிதறி கிடந்தது.

மேலும் கோவிலின் கலசத்தை எடுத்து பக்கத்தில் வைத்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து சேத்தியாதோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது கோவில் உண்டியலில் இருந்து ரூ.10 ஆயிரம் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது. இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com