பண்ருட்டி அருகே குடிபோதையில் கத்தியை காட்டி மிரட்டிய 2 பேர் கைது

கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர். சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர்.
பண்ருட்டி அருகே குடிபோதையில் கத்தியை காட்டி  மிரட்டிய 2 பேர் கைது
Published on

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த முத்துக் கிருஷ்ணா புரம் காலனியை சேர்ந்தவர் மாரி என்ற மாரிமுத்து (வயது27), அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் என்கிற யுவராஜ் இவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக வந்த வாகனங்களை நிறுத்தி கத்தியை காட்டி மிரட்டி தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து அதே பகுதியில் உள்ள கோவில் உண்டியலை கத்தியால் சேதப்படுத்தினர். இவர்களை அந்த பகுதியை சேர்ந்த நாட்டாமை சங்கர் (வயது 45) தட்டிக் கேட்டார். ஆத்திரம் அடைந்த அவர்கள் 2 பேரும் நாட்டாமை சங்கரை சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினர். காயமடைந்த நாட்டாமை சங்கர் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இது குறித்து வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய மாரி முத்து, யுவராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com