பண்ருட்டி அருகே 10 ஏக்கர் கரும்பு தீயில் எறிந்து சேதம்

சம்பத்குமாருக்கு சொந்தமாக அண்ணா கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.
பண்ருட்டி அருகே  10 ஏக்கர் கரும்பு தீயில் எறிந்து சேதம்
Published on

கடலூர்:

அண்ணா கிராமம் ஆண்டிப்பாளையத்தை சேர்ந்தவர் சம்பத்குமார். இவருக்கு சொந்தமாக அண்ணா கிராமத்தில் கரும்பு தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டு இவருக்கு சொந்தமான 6 ஏக்கர் கரும்பு எரிந்து சேதமடைந்தது.இந்த தீ மேலும் அதே பகுதியை சேர்ந்த சத்திய நாராயணன் என்பவரது கரும்பு தோட்டத்திற்கும் பரவியது. இதனால் அவருக்கு சொந்தமான 4 ஏக்கர் கரும்பு தீயில் எரிந்து சேதம் அடைந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் பண்ருட்டி தீயணைப்பு நிலை அலுவலர் வேல்முருகன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் போராடி அணைத்தனர். இதுகுறித்து பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com