என் மலர்
உள்ளூர் செய்திகள்

காய்கறிகடை உரிமையாளார் தாக்கியதாக புகார்: தற்கொலை செய்து கொண்ட வியாபாரி உடலை வாங்க மறுத்து 3-வது நாளாக போராட்டம்
- பூச்சி மருந்து குடித்து விட்டேன் என்று தனது அண்ணன் மகன் மனோகருக்கு செல்போனில் தேவேந்திரன் கூறியதாக கூறப்படுகிறது.
- பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கடலூர்:
பண்ருட்டி ரத்தினம் பிள்ளை மார்க்கெட்டில் ஜே. ஜே. ஜெயபால் என்பவர் காய்கறிகடை நடத்தி வருகிறார். இவரிடம் காடாம்புலியூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தாழம்பட்டை சேர்ந்த வியாபாரி தேவேந்திரன் (வயது 45 ) காய்கறி கடன் வாங்கிய பணத்தை கொடுக்கவில்லைஎன்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கடையின் உரிமையாளர் ஜெயபால், தேவேந்திரனை அசிங்கமாக திட்டி அவரது3 சக்கர வாகனத்தின் சாவியை பிடுங்கிக் கொண்டு அடித்து விட்டதாககூறப்படுகிறது. இதனால் அவமானம் தாங்க முடியாமல் பூச்சி மருந்து குடித்து விட்டேன் என்று தனது அண்ணன் மகன் மனோகருக்கு செல்போனில் தேவேந்திரன் கூறியதாக கூறப்படுகிறது. மனோகர் மற்றும் தேவேந்திரன் மகன்கள், உறவினர்கள் பண்ருட்டியில் உள்ள ஜே .ஜே. காய்கறி கடைக்கு சென்று உரிமையாளரிடம் கேட்டு பார்த்தும் எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.
இதனால் பண்ருட்டி போலீஸ் நிலையத்தில் தேவேந்திரன் மகன் ராஜதுரை புகார்கொடுத்தார். பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் இது குறித்து வழக்கு பதிவு செய்து காணாமல் போன காய்கறி வியாபாரி தேவேந்திரனை தேடி வந்தனர் . இந் நிலையில் தேவேந்திரன் பண்ருட்டி- சென்னை சாலை எல். என் .புரம் டி .ஆர். வி. நகருக்கு செல்லும் வழியில் பூச்சி மருந்து குடித்து இறந்து கிடந்ததைபண்ருட்டி போலீசார்க ண்டுபிடி த்தனர். உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரது சாவில் சந்தேகம் உள்ளது எனக் கூறியும், இந்த வழக்கை கொலை வழக்காக மாற்ற கோரியும் காய்கறி வியாபாரி தேவேந்திரன்கு டும்பத்திற்கு இழப்பீடு கேட்டு உறவினர்கள் உடலை வாங்க மறுத்து3-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பண்ருட்டி, காடாம்புலியூர் போலீசார் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்திவ ருகின்றனர். இதற்கிடையில் கடையின் உரிமையாளர் ஜெயபா லிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொடுத்த கடனை கேட்டதற்காக வியாபாரி மீது கொலைப்பழி சுமத்துவதா? இந்த வழக்கை சட்டப்படி சந்திக்க போவதாக காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவரும் பண்ருட்டி நகர் மன்ற துணைத் தலைவருமான சிவா மற்றும் வியாபாரிகள்தெரிவித்து உள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.






