என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேலி அமைக்கும் பணி"

    • வேலி அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது.
    • விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    கடலூர்:

    சேத்தியா தோப்பு அருகே என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் வேலி அமைக்கும் பணி நடை பெற்று வருகிறது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக் கத்திற்கு கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை சேத்தியாதோப்பு அருகே உள்ள கத்தாழை, கரிவெட்டி, மும்முடி சோழகன், ஊ. ஆதனூர், மேல்வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, வி. சாத்தப்பாடி உள்ளிட்ட 7 கிராமங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. கடந்த 2 மாதத்திற்கு முன் வளையமாதேவியில் கையகப்படுத்திய நிலத்தில் என்.எல்.சி. சார்பில் புதிய பரவனாறு வெட்டப்பட்டது.

    புதிய பரவனாறு வெட்டும் பணியின் போது குறுவை சாகுபடி நெற் பயிர்களை அழித்து பணியை செய்ததால் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். விவசாயிகளுக்கு ஆதர வாக என்.எல்.சி. நுழைவு வாயில் முன்பு பா.ம.க. சார்பில் நடைபெற்ற போராட்டம் கலவரமானது. இது தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில் என்.எல்.சி. கையகப்படுத்திய நிலத்தில் விவசாயிகள் பயிரிடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் வளையமாதேவியில் கையகப்படுத்திய நிலங்க ளில் அத்து மீறி யாரும் பிரவேசிக்க கூடாது என என்.எல்.சி. சார்பில் அறி விப்பு பலகை வைக்கப் பட்டது. தற்போது அங்கு வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ×