பண்ருட்டி அருகே தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு போலீசார் விசாரணை

மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார்.தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார்.
பண்ருட்டி அருகே தி.மு.க. பிரமுகர் மர்ம சாவு போலீசார் விசாரணை
Published on

கடலூர்:

பண்ருட்டி அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் குணசேகரன் (51) இவரது தம்பி செல்வம் (45)தி.மு.க. பிரமுகர். இவர்கள் இருவரும்குணசேகரன் மகனை பார்ப்பதற்காக நேற்று இரவு புதுவை மாநிலம் குருவிநத்தத்துக்கு சென்றனர் பின்பு இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார். .வரும் வழியில் புதுவை மாநிலத்தில் இருவரும் மது அருந்திவிட்டு வந்தனர்.பண்ருட்டி காந்தி ரோடு சாரதா பள்ளி அருகே சென்று கொண்டி ருந்த போதுஇவர்களுக்கு போதை அதிகமாகி காந்தி ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன்பு படுத்தனர்.

பின்பு குணசேகரன் மோட்டார்சைக்கிள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.காலை 6 மணிக்கு போதை தெளிந்து தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார். பண்ருட்டியில் தம்பி செல்வம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ்மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் போதையில் இறந்தாரா? வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com