search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DMK personality"

    • மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார்.
    • தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார்.

    கடலூர்:

    பண்ருட்டி அருகே உள்ள அம்மாபேட்டையை சேர்ந்தவர் குணசேகரன் (51) இவரது தம்பி செல்வம் (45)தி.மு.க. பிரமுகர். இவர்கள் இருவரும்குணசேகரன் மகனை பார்ப்பதற்காக நேற்று இரவு புதுவை மாநிலம் குருவிநத்தத்துக்கு சென்றனர் பின்பு இரவு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பினர்.மோட்டார் சைக்கிளை குணசேகரன் ஓட்டி வந்தார். .வரும் வழியில் புதுவை மாநிலத்தில் இருவரும் மது அருந்திவிட்டு வந்தனர்.பண்ருட்டி காந்தி ரோடு சாரதா பள்ளி அருகே சென்று கொண்டி ருந்த போதுஇவர்களுக்கு போதை அதிகமாகி காந்தி ரோட்டில் உள்ள ஒரு வீட்டின் முன்பு படுத்தனர்.

    பின்பு குணசேகரன் மோட்டார்சைக்கிள் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு சென்றார்.காலை 6 மணிக்கு போதை தெளிந்து தம்பியை தேடி பண்ருட்டிக்கு குணசேகரன் வந்தார். பண்ருட்டியில் தம்பி செல்வம் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது பற்றி பண்ருட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.இன்ஸ்பெக்டர் கண்ணன், சப் -இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ்மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்வம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். செல்வம் போதையில் இறந்தாரா? வாகனம் மோதி இறந்தாரா? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.



    வீ.கே.குருசாமி-ராஜபாண்டி

    மதுரை

    பெங்களூருவில் கொலைவெறி தாக்குத–லுக்குள்ளான திமுக பிரமுகர் வி.கே.குரு சாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி. இவருக் கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே கடந்த 23 ஆண்டுக ளாக தொடர்ந்து முன் விரோதம் இருந்து வருகிறது. இருதரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட நிலையில் வி.கே.குருசாமியும் அவரது மகன் மணியும் தலைமுறைவாக இருந்து வருகிறார்கள். வி.கே.குருசாமி மீது கொலை மற்றும் கள்ளத் துப்பாக்கி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்கு விசாரணைக்காக அவ்வப் போது மதுரைக்கு வந்து கோர்ட்டில் ஆஜ ராகி விட்டு வெளியூர் செல்வதை வி.கே.குருசாமி வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு பெங்க ளூருவுக்கு சென்ற வி.கே.குருசாமி அங் குள்ள சுக்சாகர் பகுதியில் உள்ள ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த போது தமிழக பதிவு எண் கொண்ட காரில் வந்து இறங் கிய 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயு தங்க ளுடன் வி.கே.குருசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது.

    இதில் கழுத்து, தலை, மார்பு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் வி.கே.குருசாமி கீழே சாய்ந்தார். உடனடி யாக அவரை அங்குள்ளவர்கள் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வி.கே.குருசாமி அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பானசவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் மதுரை வந்துள்ள னர். மதுரை காமராஜர் புரம், வாழை தோப்பு, கீரை துறை ,கீழ் மதுரை ரயில் நிலைய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வி கே குருசாமியின் மீதான கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ராஜபாண்டியின் உறவினர்கள் குறித்தும், கமுதி பகுதிகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை, ராம நாதபுரம் மாவட்டங்களில் பெரும் பரபரப் பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

    வி.கே.குருசாமி வெட்டப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் கீரைத்துறை, காமராஜர்புரம் பகுதியில் பரவி வருவதால் பதட்டத்தை தணிக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.

    • தி.மு.க. பிரமுகரை கொலை செய்து உடலை கிணற்றில் உடல் வீசிந்திருந்தனர்.
    • அவரது கைகள் பின்பக்கமாக வைத்து கட்டப்பட்டு, சாக்கு மூட்டையில் வைத்து உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது மகன் பாலாஜி (வயது 25). தி.மு.க. பிரமுகரான இவர் கட்சிப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த 65 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது.

    எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்து வந்த பாலாஜி கடந்த 24-ந் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பாலாஜியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை சித்துலொட்டிபட்டி பகுதியில் சாமிராஜ் என்பவரது தோட்டத்து கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் மிதந்தது.

    இதுகுறித்து காடனேரி கிராம நிர்வாகி பாலமுருகன் பேரையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது மாயமான தி.மு.க. பிரமுகர் பாலாஜி பிணமாக கிடந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது கைகள் பின்பக்கமாக வைத்து கட்டப்பட்டு, சாக்கு மூட்டையில் வைத்து உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.

    கட்சி முன்விரோதத்தில் பாலாஜி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    மயிலாடுதுறை அருகே நிலத்தகராறில் திமுக பிரமுகர் மீது தாக்குதல் நடத்திய தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த வடகரை பெரிய மேல்தெருவைச் சேர்ந்த முகமது சித்திக் மகன் அப்துல்ஜலீல், தி.மு.க. பிரமுகர். இவரது வயல் அருகில் பாரூக் என்பவருக்கு சொந்தமான வயல் உள்ளது. இங்கு அரங்ககுடியை சேர்ந்த அப்துல் காதர் மகன் முகமது காசிம் என்பவர் வீட்டு மனைகளை உருவாக்கி உள்ளார். அவர் அப்துல் ஜலீலுக்கு சொந்தமான வயலுக்கு வழியில்லாத வகையில் வீட்டுமனை அமைத்ததால் அப்துல் ஜலீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக முகமது காசிம் மயிலாடுதுறை கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    இந்த நிலையில் அப்துல் ஜலீல் தனது தரப்பில் வாதாட வக்கீலை சந்தித்து பேசி அவரிடம் வழக்குக்கு உரிய இடத்தை காட்ட நேற்று மாலை அழைத்து சென்றுள்ளார். இதுபற்றி அறிந்த முகமது காசிம், அவரது மகன் அனீஸ் ஆகியோர் வாக்குவாதம் செய்து அவரை ஆயுதங்களால் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதில் தலையில் பலத்த காயமடைந்த அப்துல் ஜலீல் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே முகமது காசிம், அவரது மகன் அனீசும் தங்களை அப்துல் ஜலீல் தாக்கியதாக கூறி மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.

    இந்த மோதல் குறித்து இருதரப்பினரும் செம்பனார் கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    மணல் கடத்தல் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததால் தி.மு.க. கிளை செயலாளர் இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    நாகை:

    நாகை மாவட்டம் மணல்மேடு அருகே உள்ள சாத்தங்குடி புளியந்தோப்பு தெருவை சேர்ந்தவர் மருதவாணன்(வயது 50). இவர், குறிச்சி ஊராட்சியில் தி.மு.க. கிளை செயலாளராக இருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர், இரும்பு கம்பியால் மருதவாணனை சரமாரியாக தாக்கினர். இதில், ரத்த வெள்ளத்தில் அந்த இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்து பலியானார்.

    இதுகுறித்த தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட மருதவாணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து மருதவாணனின் மனைவி உமா கொடுத்த புகாரின்பேரில் மணல்மேடு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், சாத்தங்குடியை சேர்ந்த கனகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சேர்ந்து புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த மருதவாணனை இரும்பு கம்பியால் அடித்துக் கொலை செய்தது தெரிய வந்தது.

    இந்த கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-

    நேற்று முன்தினம் இரவு மணல்மேடு பகுதியில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் ஏற்றிச் செல்வதாக மணல்மேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று கடுவங்குடி பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற ஒரு டிராக்டரை மடக்கி பிடித்தனர். போலீசாரை கண்டதும் டிராக்டரை அங்கேயே நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். அந்த டிராக்டரில் கனகராஜ் என்று பெயர் எழுதப்பட்டிருந்ததாக தெரிகிறது.

    இதுகுறித்து மருதவாணன் தான் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததாக கூறி கனகராஜ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரும் சேர்ந்து புலவனூர் பஸ் நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த மருதவாணனை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்து உள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் தலைமறைவாக உள்ள கனகராஜ், ஜெயக்குமார், ரஞ்சித் ஆகிய 3 பேரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். #tamilnews
    வேளாங்கண்ணி அருகே சட்டத்திற்கு விரோதமாக மணல் பதுக்கியது குறித்து திமுக பிரமுகர் மகனை கைது செய்த போலீசார் 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.
    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம், வேளாங்கண்ணி அடுத்த சுக்கானூர் பகுதியில் சட்டத்திற்கு விரோதமாக அளவுக்கு அதிகமான மணல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு சட்டத்திற்கு விரோதமாக மணல் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து ஒரே இடத்தில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 1000 யூனிட் மணலை போலீசார் கைப்பற்றினர். மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 டிராக்டர்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். கைப்பற்றிய மணலின் மதிப்பு சுமார் ரூ.80 லட்சம் என கூறப்படுகிறது.

    விசாரணையில் மணல் கடத்தலில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்த தி.மு.க பிரமுகர் சுக்கானூர் பாலு மற்றும் அவரது மகன் நவநீதகிருஷ்ணன் என்பது தெரிவந்தது. இதையடுத்து போலீசார் நவநீதகிருஷ்ணனை கைது செய்தனர். தப்பியோடிய பாலுவை போலீசார் தேடி வருகின்றனர்.

    மேலும் கைப்பற்றப்பட்ட மணலுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #tamilnews
    மகள் காதல் திருமணம் செய்து கொண்ட நிலையில் வரதட்சணை கேட்டு கேவலமாக பேசியதால் திமுக பிரமுகரை வெட்டிக் கொன்றதாக கைதான பெண்ணின் தந்தை வாக்குமூலம் அளித்துள்ளார்.
    பூந்தமல்லி:

    குன்றத்தூரை அடுத்த சிறுகளத்தூர் கெலட்டிப்பேட்டை காந்தி தெருவை சேர்ந்தவர் கிரிராஜன் (43). ரியஸ் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். தி.மு.க. பிரமுகரான இவர் சிறுகளத்தூர் ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினர் ஆவார்.

    நேற்று மதியம் நந்தம்பாக்கம் கருமாரி அம்மன்நகர் அருகே கிரிராஜன் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குன்றத்தூர் போலீசார் கெலட்டிப்பேட்டையை சேர்ந்த பாபு, பழையநல்லூர் கவின்ராஜ், புதிய நல்லூர் கங்காதரன் மற்றும் சதீஷ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். இவர்கள் தவிர சரண், ரவி ஆகிய 4 பேரை தேடி வருகிறார்கள்.

    இந்த நிலையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான பாபு போலீசில் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 10 மாதங்களுக்கு முன்பு எனது மூத்த மகள் சவுபாக்கியவதிக்கு விருகம்பாக்கத்தில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் பேசி முடித்தேன். அழைப்பிதழ் கொடுத்து திருமணம் நெருங்கிய நிலையில் காதல் என்ற பெயரில் கொலை செய்யப்பட்ட கிரிராஜனின் மைத்துனர் மோகன் என்பவர் எனது மகளை கடத்தி சென்று திருமணம் செய்து கொண்டார்.

    அதில் இருந்தே எனக்கும், என் மகளுக்கும் இடையே சம்பந்தம் இல்லை என்று கூறிவிட்டு அமைதியாக இருந்தேன். ஆனால் கிரிராஜன் என்னை பார்க்கும் போதெல்லாம் கேலி, கிண்டல் செய்தார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் என்னிடம் வந்து பெண்ணுக்கு தர வேண்டிய நகையை தரும்படி கேட்டார். நான் தரமறுத்து விட்டேன். எனவே என்னை கேவலமாக பேசினார். இதனால் எனது கோபம் அதிகமானது.

    எனவே அவரை கொலை செய்ய திட்டமிட்டு வேறு ஒருவர் மூலம் அவரை வரவழைத்தேன். பின்னர் எனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டி கொலை செய்தேன். என்னை கேவலமாக தகாத முறையில் பேசியதால் வாயில் அரிவாளால் வெட்டினேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.#tamilnews
    ×