search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமிக்கு தீவிர சிகிச்சை
    X

    மதுரை கீரைத்துறை பகுதியில் பதட்டம் நிலவுவதால் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காட்சி.

    தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமிக்கு தீவிர சிகிச்சை

    • மதுரை தி.மு.க. பிரமுகர் வி.கே.குருசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.



    வீ.கே.குருசாமி-ராஜபாண்டி

    மதுரை

    பெங்களூருவில் கொலைவெறி தாக்குத–லுக்குள்ளான திமுக பிரமுகர் வி.கே.குரு சாமி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    மதுரை மாநகராட்சி முன்னாள் கிழக்கு மண்டல தலைவர் வி.கே.குருசாமி. இவருக் கும் அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டி தரப்புக்கும் இடையே கடந்த 23 ஆண்டுக ளாக தொடர்ந்து முன் விரோதம் இருந்து வருகிறது. இருதரப்பிலும் 20-க்கும் மேற்பட்டோர் கொலை செய்யப்பட்ட நிலையில் வி.கே.குருசாமியும் அவரது மகன் மணியும் தலைமுறைவாக இருந்து வருகிறார்கள். வி.கே.குருசாமி மீது கொலை மற்றும் கள்ளத் துப்பாக்கி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

    இந்த வழக்கு விசாரணைக்காக அவ்வப் போது மதுரைக்கு வந்து கோர்ட்டில் ஆஜ ராகி விட்டு வெளியூர் செல்வதை வி.கே.குருசாமி வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்தநிலையில் கடந்த 2-ந்தேதி வழக்கு விசாரணைக்காக ஆஜராகி விட்டு பெங்க ளூருவுக்கு சென்ற வி.கே.குருசாமி அங் குள்ள சுக்சாகர் பகுதியில் உள்ள ஓட்டலில் டீ குடித்துக் கொண்டிருந்த போது தமிழக பதிவு எண் கொண்ட காரில் வந்து இறங் கிய 5 பேர் கொண்ட கும்பல் அரிவாள் பட்டாக்கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயு தங்க ளுடன் வி.கே.குருசாமியை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கியது.

    இதில் கழுத்து, தலை, மார்பு, முகம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்டதால் ரத்த வெள்ளத்தில் வி.கே.குருசாமி கீழே சாய்ந்தார். உடனடி யாக அவரை அங்குள்ளவர்கள் சிகிச்சைக் காக தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் வி.கே.குருசாமி அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் குறித்து பானசவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத் தில் ஈடுபட்ட குற்றவாளிகள் ஐந்து பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படை போலீசார் மதுரை வந்துள்ள னர். மதுரை காமராஜர் புரம், வாழை தோப்பு, கீரை துறை ,கீழ் மதுரை ரயில் நிலைய பகுதிகளில் போலீசார் தேடுதல் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். மேலும் வி கே குருசாமியின் மீதான கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்ட ராஜபாண்டியின் உறவினர்கள் குறித்தும், கமுதி பகுதிகளிலும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மதுரை, ராம நாதபுரம் மாவட்டங்களில் பெரும் பரபரப் பும் பதட்டமும் ஏற்பட்டுள்ளது.

    வி.கே.குருசாமி வெட்டப்பட்டு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து பல்வேறு தகவல்கள் கீரைத்துறை, காமராஜர்புரம் பகுதியில் பரவி வருவதால் பதட்டத்தை தணிக்க அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வெளியாட்கள் யாரும் மேற்கண்ட பகுதிகளுக்கு அனுப்ப போலீசார் மறுத்து விட்டனர்.

    Next Story
    ×