என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தி.மு.க. பிரமுகர் கொலை
    X

    தி.மு.க. பிரமுகர் பாலாஜி பிணமாக கிடப்பதையும், அவரது உடல் மீட்கப்பட்ட கிணற்றையும் படத்தில் காணலாம்.

    தி.மு.க. பிரமுகர் கொலை

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தி.மு.க. பிரமுகரை கொலை செய்து உடலை கிணற்றில் உடல் வீசிந்திருந்தனர்.
    • அவரது கைகள் பின்பக்கமாக வைத்து கட்டப்பட்டு, சாக்கு மூட்டையில் வைத்து உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள டி.கல்லுப்பட்டி எம்.சுப்புலாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடாஜலபதி. இவரது மகன் பாலாஜி (வயது 25). தி.மு.க. பிரமுகரான இவர் கட்சிப்பணியில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். இவருக்கு தர்ஷினி என்ற மனைவி உள்ளார். கடந்த 65 நாட்களுக்கு முன்பு இந்த தம்பதிக்கு குழந்தை பிறந்தது.

    எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்து வந்த பாலாஜி கடந்த 24-ந் தேதி வெளியே சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றார். ஆனால் அதன்பின் அவர் வீடு திரும்பவில்லை. செல்போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பாலாஜியை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இந்த நிலையில் நேற்று மாலை சித்துலொட்டிபட்டி பகுதியில் சாமிராஜ் என்பவரது தோட்டத்து கிணற்றில் கைகள் கட்டப்பட்ட நிலையில் ஆண் பிணம் மிதந்தது.

    இதுகுறித்து காடனேரி கிராம நிர்வாகி பாலமுருகன் பேரையூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அப்போது மாயமான தி.மு.க. பிரமுகர் பாலாஜி பிணமாக கிடந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது கைகள் பின்பக்கமாக வைத்து கட்டப்பட்டு, சாக்கு மூட்டையில் வைத்து உடலை கிணற்றில் வீசி சென்றுள்ளனர்.

    கட்சி முன்விரோதத்தில் பாலாஜி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? கொலையாளிகள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×