search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "For 36 people"

    • டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டது.
    • 36 பேர் டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவலாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ஒரே நாளில் 6 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. இவர்களுக்கென தனி வார்டு அமைக்காததால், அங்கிருந்த நோயாளிகள் அச்சத்தில் இருந்தனர். இதையடுத்து கடலூர் அரசு மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கென தனி வார்டு அமைக்கப்பட்டது. இதையடுத்து கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கும் நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத் துறையி னர் மேற்கொண்டு வருகின்ற னர்.

    கடலூர் அரசு மருத்துவ மனையில் 23 நபர்களும், சிதம்பரம் அரசு மருத்துவ மனையில் 3 நபர்களும், சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 10 நபர்களும் ஆக மொத்தம் 36 பேர் டெங்கு காய்ச்சல் வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக இருந்தது. இது 5 மடங்கு உயர்ந்து தற்போது 36 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்தில் சுமார் 260-க்கும் மேற்பட்ட காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. பொது மக்கள் சுத்தமாகவும் சுகா தார மாகவும் இருந்து, டெங்குவை ஒழிக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலினால் பாதிக்கப்பட்டவர்கள் கணிசமாக உயர்ந்து வருவது பொது மக்களிடையே அச்சத்தை உருவாக்கியுள்ளது.

    ×