என் மலர்
உள்ளூர் செய்திகள்

வடலூர் அருகே என்ஜினீயர் வீட்டில் 35 பவுன் நகை கொள்ளை
- வெங்கடேஷ் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார்.
- நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கடலூர்:
வடலூர் அருகே உள்ள வெங்கட்டம் குப்பத்தை சேர்ந்த முரளிநாயுடு மகன் வெங்கடேஷ் (29) என்ஜினீயர். இவர் கடந்த 16-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு கோவை சென்றார். பின்னர், 17-ந்தேதி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 35 பவுன் தங்க நகைகள் திருடு போய் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் வடலூர் போலிசார் வழக்கு பதிவு செய்து தங்க நகைகளை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story






