என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்
  X

  ஆண்டிபட்டியில் ஆட்டோ டிரைவர்களிடம் முககவசம் வழங்கி கலெக்டர் முரளிதரன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  தேனி மாவட்டத்தில் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கை தீவிரம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆண்டிபட்டியில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டார்
  • மேலும் அரசு மாணவர் விடுதி, ரேசன் கடை, கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

  தேனி:

  தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக கலெக்டர் முரளிதரன் ஆய்வு மேற்கொண்டு ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கி, விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  ஆண்டிபட்டி பேரூராட்சிக்குபட்ட அரசு ஆஸ்பத்திரி பகுதியில் செயல்பட்டு வரும் உணவகங்கள், தேநீர் கடை, ஆட்டோ, பஸ் நிறுத்தம் மற்றும் பொதுமக்கள் அதிக அளவு கூடும் இடங்களில் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளீர்களா என பொதுமக்களிடம் கேட்டறிந்து, சமூக இடைவெளி கடைபிடிப்பது, முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

  தமிழக அரசின் பன்முக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளினால் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நம்மிடம் கொரோனா நோய்த் தொற்றினை கட்டுப்படுத்திடும் பேராயுதமாக கொரோனா தடுப்பூசி உள்ளது. கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்கு இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.

  மேலும், ஆட்டோ டிரைவர்கள் பள்ளிக் குழந்தைகள் மற்றும் பொதுமக்களை அழைத்துச் செல்லும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனவே கொரோனா நோய்த் தொற்று குறித்து ஆட்டோ டிரைவர்கள் பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்து எடுத்துரைத்து, போதிய விழிப்புணர்வுவை ஏற்படுத்திட வேண்டும்.

  பொதுமக்கள் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை அளித்திட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.

  மேலும் ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தின் கீழ் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கலெக்டர் பார்வையிட்டார். பொதுமக்களிடையே பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு மாணவர் விடுதி, ரேசன் கடை, கால்நடை மருத்துவமனை ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

  Next Story
  ×