search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் ரூ.5 சரிவு
    X

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி விலை மேலும் ரூ.5 சரிவு

    • நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 84 ரூபாயாக இருந்தது.
    • முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாகவும், முட்டை கோழி ரூ.79 ஆகவும் நீடித்து வருகிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கடந்த சில நாட்களாக 84 ரூபாயாக இருந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடந்தது.

    இதில் கறிக்கோழியின் உற்பத்தி மற்றும் தேவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. பின்னர் கறிக்கோழியின் விலையை கிலோவுக்கு ரூ.5 குறைக்க முடிவு செய்தனர். இதனால் கறிக்கோழி விலை ரூ.79 ஆக சரிவடைந்தது.

    முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாகவும், முட்டை கோழி ரூ.79 ஆகவும் நீடித்து வருகிறது. அவற்றின் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×