என் மலர்tooltip icon

    சென்னை

    • விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.
    • வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் உருவாகிறது.

    ஆக்கிரமிப்புகளால் வேளச்சேரி ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது குறித்தும், கழிவுநீர் கலப்பதாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி மாசடைந்துள்ளது குறித்தும், வேளச்சேரி ஏரி பாதுகாப்பு இயக்கத்தின் துணைத் தலைவர் குமரதாசன் என்பவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.

    இதை விசாரித்த தீர்ப்பாயம், 'வெள்ள பாதிப்பிலிருந்து வேளச்சேரியை பாதுகாக்க, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலையுடன் கூடிய பூங்கா அமைக்கலாம்' என, யோசனை தெரிவித்தது. இது தொடர்பாக தமிழக அரசின் கருத்தையும் கேட்டது.

    மழை பெய்தால் வெள்ளத்தாலும், மழை பொய்த்தால் வறட்சியையும் எதிர்கொள்ளும் சென்னையில், பசுமை பூங்கா அமைப்பதை விட புதிய நீர்நிலைகளை உருவாக்குவதே சிறந்த முடிவாக இருக்கும் என தீர்ப்பாயம் தெரிவித்து இருந்தது.

    இதனை தொடர்ந்து, தமிழக அரசின் தலைமை செயலர், சம்பந்தப்பட்ட அரசு துறைகளின் செயலர்களுடன் ஆலோசனை நடத்தி, கிண்டி ரேஸ் கிளப் நிலத்தில் நீர்நிலை அமைக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி, முடிவெடுக்க வேண்டும் என அவகாசம் கேட்டிருந்தது.

    தொடர்ந்து, கிண்டி ரேஸ் கிளப்பில் மழை நீரை சேகரிக்கும் வகையில் 4 குளங்களை அமைக்கும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டது.

    இந்நிலையில், கிண்டி ரேஸ் கிளப்பிடம் இருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைகிறது. இதற்காக, விரிவான திட்ட அறிக்கை, வடிவமைப்பு தயார் செய்ய டெண்டரை தமிழ்நாடு அரசு கோரியுள்ளது.

    வண்ண மலர் படுகைகள், மலர் சுரங்கப் பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம், வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் உருவாகிறது.

    • இந்திய ரெயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது.

    ஒன்றிய ரெயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்-க்கு திமுக எம்.பி. ஆ.ராசா எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்திய ரெயில் நிலையங்களில் இந்திப் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக எனது நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் 100 ஆண்டுகள் பழமை கொண்ட #உதகமண்டலம் ரெயில் நிலையத்தில் இந்தியில் நிறுவப்பட்டுள்ள பதாகைகள், தமிழ் மக்களின் உணர்வுகளை பாதிக்கக்கூடிய வகையில் உள்ளன. உடனடியாக அவற்றை அகற்ற உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்த கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாடு ஒருநாளும் இந்தித் திணிப்பை ஏற்காது.

    உதகை ரயில் நிலையத்தில் இந்தி மொழியை விளம்பரப்படுத்தும் வகையில் மற்றும் பாரதியாரின் வாசகத்தை இந்து மகாசபை நிறுவனர் மதன் மோகன் மாளவியா எழுதியதாக வைக்கப்பட்டுள்ள பலகைகளை அகற்றுங்கள் என கூறினார்..

    • தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன.
    • சிறிய வகை மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது.

    திருவொற்றியூர்:

    தமிழகத்தில் 61 நாட்கள் நீடித்த மீன்பிடி தடைகாலம் கடந்த வாரம் சனிக்கிழமையுடன் முடிந்தது. அன்று இரவே காசிமேட்டில் இருந்து சுமார் 600-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க சென்றனர்.

    ஆழ்கடலில் மீன்பிடிக்கும் மீனவர்கள் கரை திரும்ப குறைந்தது 7 நாட்கள் முதல் 15 நாட்கள் வரை ஆகும்.

    இந்தநிலையில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற விசைப்படகு மீனவர்கள் இன்று அதிகாலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பினர். தடைகாலம் முடிந்து கடலுக்குள் சென்று இருந்த விசைப்படகு மீனவர்களின் வலையில் பெரியவகை மீன்கள் அதிகம் சிக்கி இருந்தன.

    இதனால் காசிமேட்டில் விற்பனைக்காக பெரிய வகை மீன்களான வஞ்சிரம், வவ்வால், ஷீலா, தேங்காய் பாறை, சங்கரா, தோல் பாறை, திருக்கை, கொடுவா உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகமாக காணப்பட்டது. விசைப் படகுகளில் இருந்து கூடை கூடையாக ஏல முறையில் மீன்களை விற்பனை செய்தனர். இதனால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு காசிமேடு மீன்பிடி துறைமுகம் களை கட்டி இருந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் இன்று காசி மேட்டில் மீன்வாங்க கூட்டம் அலைமோதியது. மீன்பிரியர்கள் போட்டி போட்டு தங்களுக்கு பிடித்த மீன்களை வாங்கி சென்றனர்.

    அதிக அளவு மீன்கள் விற்பனைக்கு குவிந்ததால் கடந்த வாரத்தை காட்டிலும் மீன்களின் விலை குறைவாகவே காணப்பட்டது. சிறிய வகை மீன்கள் வரத்தும் அதிகமாக இருந்தது. மொத்த வியாபாரிகள், சுற்றுவட்டார பகுதியில் உள்ள மீன் மார்க்கெட்டில் சில்லறை விலையில் விற்பனை செய்யும் மீனவர்களும் காசிமேட்டில் அதிக அளவில் குவிந்து தங்களுக்கு தேவையான மீன்களை வாங்கிச் சென்றனர். சில்லறை விற்பனை கடைகளும் இன்று அதிகமாகவே காணப்பட்டது.

    காசிமேட்டில் மீன்விலை(கிலோவில்)வருமாறு:-

    வஞ்சிரம்-ரூ.800 முதல் 900

    ஷீலா-ரூ.500

    பால் சுறா-ரூ.500

    சங்கரா -ரூ.400

    பாறை -ரூ.400

    இறால்-ரூ.300

    நண்டு -ரூ.300

    நவரை -ரூ.300

    பண்ணா-ரூ.300

    காணங்கத்தை -ரூ.300

    கடுமா-ரூ.300

    நெத்திலி-ரூ.200

    • உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்.
    • தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்.

    லயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை Dr.N.ஜென்சி, அக்கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில்," வாழ்த்துகள் Dr. ஜென்சி! உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்! தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!" என்றார்.

    முதல்வரின் வாழ்த்து குறித்து பேசிய டாக்டர் ஜென்சி," 'டாக்டர் ஜென்சி' என என்னை குறிப்பிட்டு முதல்வர் வாழ்த்து தெரிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் உள்ள ஏதாவது ஒரு அரசு கல்லூரியில் எனக்கு பணி நிரந்தரம் செய்து வேலை வழங்க வேண்டும்" என்றார்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை முதல் 28-ந்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    இன்று முதல் 24-ந்தேதி வரை தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

    மீனவர்களுக்கான எச்சரிக்கை:

    இன்று வடக்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோரப்பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

    நாளை மத்திய வங்கக்கடலின் ஒருசில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். 

    • தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
    • அ.தி.மு.க. கூட்டணியை விரைவாக வலுப்படுத்திவிட வேண்டும் என்பதே எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திப்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக தயாராகி வருகிறார்.

    சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பா.ஜ.க. வுடன் மீண்டும் கூட்டணி அமைத்து உள்ள அ.தி.மு.க., இந்த கூட்டணியில் மேலும் பல கட்சிகளை சேர்த்து பலமான கூட்டணியாக உருவாவதற்கு வியூகம் வகுத்து உள்ளது.

    இதைத் தொடர்ந்து தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் ஆகிய கட்சிகளை கூட்டணியில் சேர்ப்பதற்காக ரகசிய பேச்சுவார்த்தைகள் திரைமறைவில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விஜய், திருமாவளவன் இருவரும் கூட்டணிக்கு வந்து விட்டால் அ.தி.மு.க. அணி வலுவானதாக மாறி விடும் என்கிற எண்ணத்தில் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக அ.தி.மு.க.வினர் தெரிவித்து உள்ளனர்.

    இதற்காக விஜய், திருமாவளவன் இருவருக்கும் கூட்டணியில் உரிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு அ.தி.மு.க. தலைவர்கள் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 2 துணை முதலமைச்சர் பதவியை உருவாக்கி இருவருக்கும் பிரித்து கொடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இரட்டை இலக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தொகுதி கொடுப்பதற்கு அ.தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருப்பதால் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைப்பதற்கு திருமாவளவன் தயக்கம் காட்டி வருகிறார். இருப்பினும் அவரை சமாதானப்படுத்தி கூட்டணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் சத்தமில்லாமல் நடைபெற்று வருவதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்து உள்ளனர்.

    அதே நேரத்தில் தி.மு.க.வுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வரும் விடுதலை சிறுத்தைகளை எப்படியாவது கூட்டணியில் சேர்த்து விட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியுடன் உள்ளார்.

    முக்கிய பிரமுகர்கள், அ.தி.மு.க. ஆதரவு அதிகாரிகள் ஆகியோர் மூலமாக விஜய்யுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. இது தொடர்பாக அ.தி.மு.க. மூத்த நிர்வாகி கூறியதாவது:-

    தமிழகத்தில் தி.மு.க. கூட்டணிக்கு எதிரான மனநிலையில் உள்ள அனைத்து கட்சிகளையும் அ.தி.மு.க. அணியில் சேர்ப்பதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக பல்வேறு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அ.தி.மு.க. கூட்டணியை விரைவாக வலுப்படுத்திவிட வேண்டும் என்பதே பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் எண்ணமாக உள்ளது. வருகிற தேர்தலில் அது நிச்சயம் நிறைவேறி அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
    • தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசுத்துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட ககன்தீப்சிங் பேடி தலைமையிலான குழுவின் பதவிக்காலத்தில் பாதிக்கும் மேல் முடிவடைந்து விட்ட நிலையில், அதன் பணிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்துவதில் அரசு ஊழியர்களை திமுக அரசு மீண்டும், மீண்டும் ஏமாற்றுவது கண்டிக்கத்தக்கது.

    இந்தியாவில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்கண்ட், சத்தீஷ்கர், பஞ்சாப், கர்நாடகா, இமாச்சல பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த மாநிலங்கள் அனைத்தும் தமிழ்நாட்டை விட மிகவும் மோசமான நிதிநிலை கொண்ட மாநிலங்கள் தான். தமிழக அரசுக்கு மனமிருந்தால், அங்கு பழைய ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை ஒரு வாரத்தில் அறிந்து தமிழகத்திலும் செயல்படுத்த முடியும்.

    ஆனால், தமிழக ஆட்சியாளர்களின் மனம் அரசு ஊழியர்களை ஏமாற்றுவது குறித்து மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறது. பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்கள் கடந்த 20 ஆண்டுகளாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர். அவர்களை இனியும் ஏமாற்றிக் கொண்டிருக்கக்கூடாது. ஆனால், தொடர்ந்து ஏமாற்றி வரும் தி.மு.க.வை வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசு ஊழியர்களும், மக்களும் ஏமாற்றுவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்!
    • தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்!

    சென்னை:

    லயோலா கல்லூரியில் ஆங்கிலத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை Dr.N.ஜென்சி, அக்கல்லூரியில் ஆங்கில உதவி பேராசிரியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    வாழ்த்துகள் Dr. ஜென்சி!

    உங்களது உழைப்பின் ஒளியால் இன்னும் பலநூறு பேர் கல்விக்கரை சேரட்டும்!

    தடைகளையும் புறக்கணிப்புகளையும் கல்வி எனும் பேராற்றலால் வெல்லட்டும்! என்று கூறியுள்ளார். 

    • அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
    • சகோதரர் விஜய் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

    சென்னை:

    நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்த நிலையில், முன்னாள் பாஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று பிறந்த நாள் கொண்டாடும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவரும், நடிகருமான, சகோதரர் விஜய்க்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சகோதரர் விஜய் நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தனது மக்கள் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார். 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி நகர், பேபி நகர் பகுதி.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (23.06.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம் : எம்இஎஸ் சாலை, ஜிஎஸ்டி சாலை, காந்தி சாலை, ரங்கநாதபுரம், இரும்புலியூர் சர்வீஸ் ரோடு, இன்விகான் பிளாட், டிடிகே நகர், ஜெருசேலம் நகர், சர்ச் சாலை, ரத்ன குமார் அவென்யூ, மருதம் குடியிருப்பு, ஏ.எஸ்.ராஜன் நகர், ஜிகே மூப்பனார் அவென்யூ, சிட்லபாக்கம் ஜோதி நகர், சிட்லபாக்கம் 1-வது மெயின் ரோடு, ராமசந்திரா சாலை, ரங்கநாதன் சாலை, கண்ணதாசன் தெரு மற்றும் அய்யாசாமி தெரு.

    பல்லாவரம்: கடப்பேரி பச்சைமலை குடியிருப்பு வாரியம், டிபி மருத்துவமனை, ஜிஎஸ்டி சாலை, ஜிஎச் நியூ காலணி 13-14, 17-வது குறுக்கு தெரு, மல்லிகா நகர், விபி வைத்தியலிங்கம் சாலை, கட்டபொம்மன் நகர், ஆர்கேவி அவென்யூ, திருமுருகன் நகர், மாணிக்கம் நகர், வேல்ஸ் கல்லூரி மெயின் சாலை, பங்காரு நகர்.

    தரமணி: அதிபதி மருத்துவமனை, சிடிஎஸ் குடியிருப்பு (கிரியாஸ் அருகே), தரமணி மெயின் ரோடு, டாடா கன்சல்டன்சி, ராம்கிரி நகர், பேபி நகர் பகுதி, சாஸ்திரி நகர், பார்க் அவென்யூ.

    • விஜய்க்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
    • "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன்.

    சென்னை:

    பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவரான தமிழிசை சவுந்தரராஜன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    நாளைய தீர்ப்பு" - இல் ஆரம்பித்து "அழகிய தமிழ் மகனாக" வலம் வந்து "திருப்பாச்சி"-இல் தங்கை பாசத்தையும் "சிவகாசி" இல் தாயின் அன்பையும் பிரதிபலித்து "துப்பாக்கி" ஏந்தி தீவிரவாதிகளை அழித்து தேச பக்தியை வெளிப்படுத்தி "வாரிசு" அரசியலை எதிர்த்தால் தனக்கு வந்த இன்னல்களிலிருந்து "சுறா"வாக நீந்தி "கில்லி" யாக வெற்றி கண்ட "தமிழன்" "ஜன நாயகன்" தம்பி விஜய் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

    "புதிய கீதை" வழியில் தீயசக்திகளை எதிர்த்து நல்லது நடக்க துணை நிற்க வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார். 



    • தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம்...
    • அன்புத்தம்பி விஜய்க்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!

    சென்னை:

    நடிகரும், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சீமான் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தனித்துவமிக்க நடிப்பு, ஈர்க்கும்படியான நடனம், ரசிக்கத்தக்க நகைச்சுவை, கதாபாத்திரங்களை உள்வாங்கிக் கொண்டு, உயிரோட்டமாகப் பிரதிபலிக்கும் திறன் என எல்லா ஆற்றல்களையும் வளர்த்துக்கொண்டு மக்களை மகிழ்வித்து, தமிழ்த்திரைத்துறையில் உச்சம் தொட்ட ஆகச்சிறந்த திரைக்கலைஞன்!

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அன்புத்தம்பி விஜய் அவர்களுக்கு என்னுடைய உளப்பூர்வமான பிறந்த நாள் நல்வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார். 



    ×