என் மலர்tooltip icon

    சென்னை

    • தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.

    சென்னை:

    மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படக்கூடிய பஸ்களில் ஏறி பயணிக்கும் மக்களுக்கு ஏற்ப வசதிகளும் இருக்கும் வகையில், அவ்வப்போது பஸ்களை புதிதாகவும் வாங்கி இயக்குகின்றனர். அதன்படி, இதுவரை இயக்கப்பட்ட புதிய அரசு பஸ்கள் பல்வேறு நிறங்களில் வலம் வந்தன. அந்த வரிசையில் தற்போது கண்ணை கவரும் வகையில் புதிய வண்ணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) பஸ்களை இயக்க இருக்கிறது.

    கருப்பு, சாம்பல், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை உள்ளடக்கி, பார்த்ததும் கண்ணில் ஒத்திக்கொள்வது போன்ற அழகில் வலம்வர இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கின்றனர். இந்த பஸ்கள் பி.எஸ்.6 ரகம் ஆகும். மேலும் ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலும் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.

    • அண்ணா சாலையில் பகுதி நேர ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • ஆசிரியர்களை கைது செய்த போலீசார் அவர்களை தனியார் மண்டபத்தில் அடைத்தனர்.

    சென்னை அண்ணா சாலையில் பகுதி நேர ஆசிரியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணி நிரந்தரம் செய்யக்கோரி சிறை நிரப்பும் போராட்டத்தை அறிவித்து, சிந்தாதிரிப்பேட்டை ரெயில் நிலையத்தில் இருந்து போராட வந்த ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

    போராட்டம் நடத்திய ஆசிரியர்கள் தனியார் மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.

    • நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது.
    • காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.

    சென்னை:

    17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய தொழிற்சங்கங்கள் நாளை பொது வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடக்கிறது.

    தமிழ்நாட்டில் இந்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான சி.ஐ.டி.யு., இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தொழிற்சங்கமான ஏ.ஐ.டி.யூ.சி., காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தொழிற்சங்கங்கள் உள்பட 13 தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்து உள்ளன. இதுதொடர்பாக தொ.மு.ச. தொழிற்சங்க பேரவையின் பொதுச்செயலாளர் மு.சண்முகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தை மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு பொறுப்பேற்றது முதல் தொழிலாளர்களின் பிரச்சனைகளை விவாதிப்பதற்கு இந்தியா சுதந்திரம் அடைந்ததற்குப்பின் தொடர்ச்சியாக நடைபெற்று வந்த 'இந்தியா தொழிலாளர் மாநாடு' 2015-ம் ஆண்டு முதல் கூட்டப்படவில்லை.

    இந்திய நாட்டு தொழிலாளிகள் 100 ஆண்டுகளுக்கு மேலாக போராடி பெற்ற பணியிட பாதுகாப்பு, சமூக பாதுகாப்பு சட்டங்கள் அனைத்தும் முழுமையாக தொழிலாளர்களுக்கு பயன்தரவில்லை என்றாலும், அந்தச் சட்டங்களை முன்வைத்து, தங்கள் உரிமைகளை பெற்று வந்தனர். அத்தகைய 44 சட்டங்களில் 29 சட்டங்கள 4 தொகுப்புகளாக மாற்றப்பட்டு உள்ளன.

    இச்சட்டத் தொகுப்புகள் நடைமுறைக்கு வந்தால், 80 சதவீதமான தொழிலாளர்கள் சட்ட வரம்புக்கு வெளியே இருப்பார்கள் என்கிற அபாயமும், அதன் காரணமாக வேலை நீக்கம், ஆட்குறைப்பு, ஆலை மூடல் போன்றவைகளுக்கு அரசின் அனுமதி பெறாமலேயே நடைமுறைப்படுத்த முடியும் என்கிற அபாயமும் உள்ளது.

    மோட்டார் வாகனச் சட்டம் திருத்தப்பட்டதன் காரணமாக பொது போக்குவரத்து என்கிற அமைப்பு பாதுகாப்பற்றதாக மாற்றப்பட்டுள்ளது.

    இந்த விவகாரம் உள்ளிட்ட17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற உள்ள இந்த வேலை நிறுத்தத்தில் அனைத்து பிரிவு தொழிலாளர்களும் கலந்துகொண்டு வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்த வேலைநிறுத்த போராட்டத்தை வெற்றி பெற செய்வோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் சண்முகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளார்.

    ஆளுங்கட்சியான தி.மு.க.வின் தொழிற்சங்கமான தொ.மு.ச. இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் நாளை இயக்கப்படாது என்று தெரிகிறது.

    அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கம் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. எனவே அந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்கள் வழக்கம் போல் பணிக்கு வருவார்கள். எனவே குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படலாம் என்று தெரிகிறது.

    சி.ஐ.டி.யு.வில் ஆட்டோ தொழிலாளர்கள் அதிகளவில் அங்கம் வகிக்கின்றனர். எனவே பெரும்பாலான ஆட்டோக்கள் ஓடுவதற்கு வாய்ப்பு இல்லை. வணிகர் சங்கங்கள் இந்த போராட்டத்துக்கு இதுவரையில் ஆதரவு தெரிவிக்கவில்லை. எனவே கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம் போல் செயல்படும்.

    அரசு ஊழியர் சங்கங்களின் இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் 25 கோடிக்கு அதிகமானோர் பங்கேற்பார்கள் என அனைத்து இந்திய வர்த்தக காங்கிரஸ் நிர்வாகி அமர்ஜீத் கவுர் தெரிவித்தார்.

    மேலும் விவசாயிகள் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்றும் அவர் கூறினார்.

    இதற்கிடையே இந்த நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் பங்கேற்க உள்ளதாக வங்கித்துறை அறிவித்து உள்ளது. இதைப்போல காப்பீடு துறையும் போராட்டத்தில் இணைவதாக அறிவித்து உள்ளன.

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • அன்னை நகர், சுப்புலட்சுமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், வைகை நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (09.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அரும்பாக்கம் : 100 அடி ரோடு, வி.என். புரம் 1 முதல் 3-வது தெரு வரை, டிரையம்ப் அபார்ட்மெண்ட்.

    பாடி : அன்னை நகர், சுப்புலட்சுமி நகர், ராஜீவ் நகர், பாலாஜி நகர், வைகை நகர்.

    திருமங்கலம் : மெட்ரோ மண்டலம், சத்ய சாய் நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, TNHB குடியிருப்புகள், பழைய பென், கோல்டன் ஜூபிலி ப்ளாட்ஸ், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரெயில் நகர், சிவன் கோவில் தெரு, ஸ்ரீனிவாசன் நகர், 100 அடி ரோடு, நியூ காலனி மற்றும் மேட்டுகுளம்.

    • கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10, 9.55, 11.25 மதியம் 12, 1, 2.30 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரெயிகளும் ரத்து செய்யப்படுகிறது.
    • கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை:

    சென்னை சென்டிரல்-கூடூர் வழித்தடத்தில் கும்மிடிப்பூண்டி மற்றும் பொன்னேரி ரெயில் நிலையங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) மற்றும் 10 ஆகிய தேதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 3.15 மணி வரையில் (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை சென்டிரலில் இருந்து காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 மணி ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 9.10, 9.55, 11.25 மதியம் 12, 1, 2.30 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் ரெயிகளும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்டிரலில் இருந்து காலை 5.40, 8.35, 10.15, மதியம் 12.10 ஆகிய நேரங்களில் சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், சூலூர்பேட்டையில் இருந்து காலை 10, 11.45, மதியம் 12.35, 1.15 ஆகிய நேரங்களில் சென்டிரல் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.

    கடற்கரையில் இருந்து காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10.55 மணிக்கு கடற்கரைக்கு வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சூலூர்பேட்டையில் இருந்து காலை 7.50 மணிக்கு ஆந்திர மாநிலம் நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இரவு 9 மணிக்கு சூலூர்பேட்டை வரும் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    செங்கல்பட்டில் இருந்து காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரை-கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    கும்மிடிப்பூண்டியில் இருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி-கடற்கரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இதனால் இந்த 2 நாட்களிலும் காலை 8.05, 9, 9.30 மணிக்கு சென்டிரல்-பொன்னேரிக்கும், காலை 9.40, 9.58 மணிக்கு பொன்னேரி-சென்டிரலுக்கும், காலை 10.30, 11.35 மணிக்கு சென்டிரல்-எண்ணூருக்கும், காலை 11.03 மணிக்கு எண்ணூர்-சென்டிரலுக்கும், காலை 9.40, மதியம் 12.40 மணிக்கு கடற்கரை-மீஞ்சூருக்கும், காலை 10.34, மதியம் 12.24, 1.32 மணிக்கு மீஞ்சூர்-சென்டிரலுக்கும், காலை 10.28 மணிக்கு பொன்னேரி-கடற்கரைக்கும் சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.
    • இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    சென்னை:

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஏற்கனவே கைதாகி சிறையில் உள்ளனர். இவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதனிடையே ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் கோரி சென்னை போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீதான விசாரணையின் போது இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து அவர்களுக்கு ஜாமின் வழங்க மறுத்த நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.

    இந்த நிலையில், நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் ஜாமின் வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்தனர். இதனை தொடர்ந்து மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணை நிறைவு பெற்ற நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளிக்கிறது. 

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கடந்த மாதம் 23-ந்தேதி நடிகர் ஸ்ரீகாந்தும், 26-ம் தேதி நடிகர் கிருஷ்ணாவும் கைது செய்யப்பட்டனர். 

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 13-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தென்காசி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார்.
    • புதிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். அவருடைய முதலாம் ஆண்டு நினைவுநாள் நேற்று முன்தினம் அனுசரிக்கப்பட்டது.

    இதையொட்டி முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நினைவேந்தல் சங்கமமாக நடந்தது. தென்னிந்திய புத்தவிகார் தலைவரும் ஆம்ஸ்ட்ராங் மனைவியுமான பொற்கொடி தலைமையில் அமைதிப் பேரணி காலையில் நடந்தது.

    அதனை தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் சிலை திறப்பு விழா நடந்தது. நினைவேந்தல் மலரும் வெளியிடப்பட்டது. ஆம்ஸ்ட்ராங் நினைவிடத்தில் கட்சி தலைவர்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.

    பின்னர், ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி 'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' என்ற புதிய கட்சியை அறிவித்தார். கட்சி பெயர், கொடியை அறிமுகம் செய்த பொற்கொடி 32 அடி உயர கம்பத்தில் கொடியேற்றினார்.

    யானை தனது துதிக்கையில் பேனாவை பிடித்து எடுத்து செல்வதுபோல் உள்ள நீலம், வெண்மை நிறத்திலான கொடியை அறிமுகப்படுத்தினார்.

    இந்த நிலையில், த.வெ.க. கொடியில் யானை சின்னம் தொடர்பான வழக்கின் விசாரணை இன்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் இன்று நடந்த நிலையில், பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கிய கட்சியின் கொடியிலும் யானை படம் இருப்பதாக த.வெ.க. சார்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

    அதற்கு எதிராகவும் வழக்கு தொடரப்படும் என பகுஜன் சமாஜ் தரப்பு பதில் அளித்தது.

    இதற்கிடையே, இந்த வழக்கின் விசாரணை வரும் 11ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    • ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன்.
    • ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நான்கு மணி நேரம் நீடித்த 10 அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டத்தில் ஒவ்வொரு அறிவிப்பாகத் தகவல்களைக் கேட்டுச் சரிபார்த்தேன்.

    ஒவ்வொரு துறையிலும் நாம் செய்து முடித்துள்ள பணிகள் வியப்பளித்தன. நடைபெற்று வரும் பணிகளையும் மக்கள் மெச்சிட, குறித்த காலத்தில் முடித்திட அறிவுறுத்தல்களை வழங்கினேன்.

    அறிவித்தால் ஆணையாக வேண்டும்! அரசாணைகள் செயலாக்கம் பெற வேண்டும்! "அதுதான் #DravidianModel" என அனைவர் மனதிலும் பதிய வேண்டும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.
    • இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.

    'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில் மேட்டுப்பாளையத்தில் பிரச்சார பயணத்தை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொடங்கினார்.

    பிரச்சார பயணத்தின்போது, இபிஎஸ் மீது மலர்களை தூவி தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். அப்போது, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் இணைந்தார்.

    இந்நிலையில், தேர்தல் சுற்றுப் பயணத்தின் முதல்நாளில் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார்.

    அப்போது அவர்," நாளைய தமிழகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி" என்றார்.

    • சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரி உத்தரவு.
    • ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவு.

    நடிகை நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதி இன்றி 'சந்திரமுகி' பட காட்சிகளை பயன்படுத்த தடை கோரி பதிப்புரிமை பெற்றுள்ள ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.

    சந்திரமுகி பட காட்சிகளை நீக்க கோரியும், 5 கோடி ரூபாய் இழப்பீடு கோரியும் ஏற்கனவே நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

    மேலும், ஆவண படத்தின் மூலம் ஈட்டிய லாபக் கணக்கை சமர்ப்பிக்க உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டது.

    இவ்வழக்கு தொடர்பாக ஆவண பட தயாரிப்பு நிறுவனம், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 2 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • கடலோர மாவட்டங்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது திமுக மீனவர் அணி.
    • இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.

    திமுகவில் நிர்வாக ரீதியாக அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் 25 சார்பு அணிகள் செயல்படுகின்றன. அதில் இளைஞரணி, தகவல் தொழில்நுட்ப அணி, மாணவரணி, மகளிரணி, மீனவரணி, விவசாய அணி உள்ளிட்ட சில அணிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன.

    ஏனென்றால் திமுக அரசியலின் அடிநாளமாக அவை செயல்படுகின்றன. இளைஞர்கள், மாணவர்கள், மகளிர் என ஒவ்வொரு தரப்பினரையும் கட்சி ரீதியாக சென்றடைய பல்வேறு முன்னெடுப்புகள் திமுக தலைமையின் உத்தரவின்படி அந்த சார்பு அணிகள் மேற்கொள்ளும். அவை களத்தில் வீரியமானதாக இயங்கும்.

    திமுக அரசு செய்த சாதனைகளை சார்பு அணி நிர்வாகிகள் மூலம் கொண்டு சேர்ப்பதில் கவனம் சேர்க்கப்படும். மத்திய அரசால் அவர்களுக்கு பிரச்னை என்றால் வீதியில் இறங்கி அந்த அணியினர் போராடுவார்கள்.

    நீட் தேர்வை எதிர்த்து போராட்டம், கீழடிக்காக போராட்டம் என ஏராளமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மாவட்டந்தோறும் நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில், முக்கியமான அரசியல் முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டிய அணிதான் தி.மு.க. மீனவரணி. கடலோர மாவட்டங்களில் கோடிக்கணக்கான வாக்காளர்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டது.

    ஆனால், மீனவர்களுக்கான பிரச்னைகளுக்காக இந்த அணியினர் குரல் கொடுப்பதும் இல்லை., திமுக அரசின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முன்னெடுப்புகளையும் இந்த அணி சார்பாக மேற்கொண்ட மாதிரியும் தெரியவில்லை என்ற புலம்பல் அதிகம் கேட்கிறது.

    ஏனென்றால், மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செயல்படுவதில்லை என்ற மிகக் கடுமையான குற்றச்சாட்டை மீனவரணி நிர்வாகிகளே முன்வைக்கின்றனர்.

    சீரான இடைவெளியில் நிர்வாகிகளை சந்தித்தால் தான் எங்களுக்கும் தீவிரமாக களப்பணியாற்ற வேண்டும் என்ற உற்சாகம் பிறக்கும்.ஆனால் அதுபோன்ற சூழல் இல்லை. இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தப்படுகிறது.

    மீனவர்கள் விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு தொடர்ந்து கடிதம் எழுதுகிறார். மீனவர்களுக்கான பிரச்னைகளுக்கு குரல் கொடுக்கிறார். ஆனால், கட்சியின் தலைவர் வழியில் கட்சியின் மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் செயல்படவில்லை என்ற பிரதான குற்றச்சாட்டு அமைப்பு நிர்வாகிகளால் தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது.

    நிர்வாகிகள் மூலம் மீனவர்களை சந்தித்து கலந்துரையாடினால்தான் அவர்களுக்கு இருக்கும் குறைகளை தெரிந்துகொள்ள முடியும். மீனவர்களுக்காக அரசு செய்துவரும் திட்டங்களையும் பட்டியலிட முடியும். சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் மீனவர்களிடையே நல்ல உறவை மேம்படுத்த முடியும். ஆனால், அதுபோன்ற நிலை இல்லவே இல்லை என்கின்றனர் நிர்வாகிகன்.

    மீனவரணி சார்பில் அந்த அணியின் செயலாளராய், குறைந்தபட்சம் ஒரு விளையாட்டுப் போட்டியையாவது நடத்தி பரிசு வழங்கினால் நிர்வாகிகளுக்கும் செயல்பட உதவியாக இருக்கும். மீனவர்களுடன் கட்சி ரீதியாக தொடர்பையும் ஏற்படுத்த முடியும் என்கின்றனர் நிர்வாகிகள்.

    எல்லாவற்றையும் விட தேர்தல் நெருங்கி வருவதால் மக்களை திமுக நிர்வாகிகள் நேரடியாக சந்திக்க வேண்டும் என்பதற்காக "ஓரணியில் தமிழ்நாடு" என்ற தலைப்பில் திமுகவின் மாபெரும் முன்னெடுப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி இருக்கிறார்.

    இதற்காக பல மாதங்களாக திட்டமிட்டு மாநிலம் முழுவதும் அனைத்து நிர்வாகிகளுக்கும் உத்தரவிட்டு தொடர்ந்து அவர்களின் செயல்பாடுகளை கண்காணித்து கேட்டறிந்து வருகிறார். ஒவ்வொரு அமைச்சரும், மாவட்டச் செயலாளரும், அணி நிர்வாகிகளும் உறுப்பினர்களை சேர்த்து தலைவரிடம் நல்ல பெயரை வாங்க வேண்டும் என பம்பரமாய் களப்பணியாற்றி வருகின்றனர்.

    ஆனால், இப்படி ஒரு மக்கள் இயக்கம் செயல்படுகிறதா என்கிற வகையில் தான் ஜோசப் ஸ்டாலின் இருக்கிறார்

    என்கின்றனர் தி.மு.க. மீனவரணி நிர்வாகிகள்.

    ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையில் மக்களை சந்தித்து அவர்களிடம் கேட்பதற்காக 6 கேள்விகளை கட்சித் தலைமை தயாரித்திருக்கிறது. அதில் இரண்டாவதாக "மகளிர் தங்களின் உரிமைத்தொகையை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலன் காக்கப்படும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிட வேண்டுமா?" என்ற கேள்வி இடம் பெற்றிருக்கிறது.

    ஆனால், தி.மு.க. மீனவரணி செயலாளருக்கு இது புரிந்ததாக தெரியவில்லை என்றும், இன்னும் சொல்லப்போனால், திமுக மீனவரணி செயலாளர் ஜோசப் ஸ்டாலின் எங்கே என்றும் நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.

    ×