ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள்

தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன.ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையில் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.
ஆம்னி பஸ்களுக்கு இணையாக புதிய வண்ணத்தில் வலம்வர காத்திருக்கும் அரசு பஸ்கள்
Published on

சென்னை:

மக்களின் பிரதான போக்குவரத்து சேவைகளில் ரெயில் போக்குவரத்து இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக இருப்பது பஸ் போக்குவரத்துதான். அதிலும் அனைத்து தரப்பு மக்களும் குறைந்த கட்டணத்தில் பயணிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் தற்போது தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் கீழ் 20,508 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படக்கூடிய பஸ்களில் ஏறி பயணிக்கும் மக்களுக்கு ஏற்ப வசதிகளும் இருக்கும் வகையில், அவ்வப்போது பஸ்களை புதிதாகவும் வாங்கி இயக்குகின்றனர். அதன்படி, இதுவரை இயக்கப்பட்ட புதிய அரசு பஸ்கள் பல்வேறு நிறங்களில் வலம் வந்தன. அந்த வரிசையில் தற்போது கண்ணை கவரும் வகையில் புதிய வண்ணத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) பஸ்களை இயக்க இருக்கிறது.

கருப்பு, சாம்பல், மஞ்சள், ஆரஞ்சு மற்றும் வெள்ளை ஆகிய நிறங்களை உள்ளடக்கி, பார்த்ததும் கண்ணில் ஒத்திக்கொள்வது போன்ற அழகில் வலம்வர இருக்கிறது. இன்னும் சில நாட்களில் அதனை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர இருக்கின்றனர். இந்த பஸ்கள் பி.எஸ்.6 ரகம் ஆகும். மேலும் ஏ.சி. வசதிகளும், இருக்கை வரிசையில் 2 பேர் தாராளமாக அமர்ந்து பயணிக்கும் வகையிலும் தனியார் ஆம்னி பஸ்களுக்கு இணையாக களம் இறங்க இருக்கிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com