என் மலர்tooltip icon

    சென்னை

    • தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.
    • 9 மாதங்கள் கழித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    சென்னை:

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டின் கிராமப்புற துப்புரவு தொழிலாளர்களும், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்குபவர்களும் குறைந்தபட்சக் கூலி மறுக்கப்படுவதாக தெரிவிப்பது தமிழக அரசின் மனிதாபிமானமற்ற ஆட்சியை வெளிப்படுத்துகிறது. கிராம ஊராட்சிகளின் சுகாதாரம் பேண துப்புரவு பணியாளர்களும், குடிநீர் வினியோகம் செய்ய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்களும் என சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

    தூய்மைப் பணியாளர்களுக்கு ரூபாய் ஆயிரம் உயர்த்தி வழங்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார். 9 மாதங்கள் கழித்து அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால் இன்றைக்கும் பல இடங்களில் இந்தத் தொகை வழங்கப்படவில்லை.

    மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குனர்களுக்கு ரூ. 1,400 உயர்த்தி மாதம் ரூ.4,000 ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதற்கும் 10 மாதங்கள் கழித்துதான் அரசாணை வெளியிடப்பட்டது. இதுவும் இன்னும் முழுமையாக அமலாக்கப்படவில்லை. எனவே தமிழக அரசு அவர்களின் நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன்.
    • வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசியவர் மாவீரர் அழகுமுத்துக்கோன்.

    தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    வீரமும் ஈரமும் நிறைந்த தமிழ் மண்ணில் ஆங்கிலேயர்களை எதிர்த்துக் கிளர்ச்சி செய்த மாவீரர் அழகுமுத்துக்கோன். தாய் நிலத்தின் உரிமை காக்க, அடிமை விலங்கைத் தகர்த்தெறிய, விடுதலைப் போராட்டக் களத்தில் தலைவணங்காமல் தடந்தோள்களுடன் தீரமாகப் போரிட்டவர்.

    வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரர் அழகுமுத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் எந்நாளும் போற்றுவோம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
    • பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, விஜய் கட்சி, சீமான் கட்சி ஆகியவை இந்த தேர்தலில் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் உள்ள நிலையில் இப்போதே அனைத்துக் கட்சிகளும் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தி பிரசாரம் தொடங்கும் பணிகளை செய்து வருகின்றன. தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் பிரசாரத்தை ஏற்கனவே தொடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் முக்கிய அங்கம் வகிக்கும் பா.ஜ.க. கட்சி 2026-ம் ஆண்டு தேர்தலை முக்கியமானதாக கருதுகிறது. அந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதோடு தமிழகத்தில் பா.ஜ.க.-வை வலுப்படுத்த வேண்டும் என்பதில் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் தீவிரமாக உள்ளனர்.

    இதற்காக பா.ஜ.க. மூத்த தலைவர்கள், மத்திய மந்திரிகள் இனி அடிக்கடி தமிழகத்துக்கு அதிகளவில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் ஆகியோரும் அடுத்தடுத்து தமிழகத்துக்கு வர தயாராகி வருகிறார்கள்.

    அதன் முதல் தொடக்கமாக பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் 27, 28-ந் தேதிகளில் 2 நாட்கள் தமிழ் நாட்டில் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருப்பது தெரிய வந்து உள்ளது. பிரதமர் மோடி 26-ந்தேதி டெல்லியில் இருந்து புறப்பட்டு கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்துக்கு வருகிறார்.

    அங்கு நடக்கும் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பிறகு அவர் திருவனந்தபுரத்தில் இருந்து திருச்சிக்கு வருவார் என்று தெரிய வந்துள்ளது. அன்று இரவு அவர் திருச்சியில் தங்குவார் என்று கூறப்படுகிறது.

    27, 28-ந்தேதிகளில் பிரதமர் மோடி அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர் ஆகிய 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளார். 27-ந்தேதி அவர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள புகழ் பெற்ற சிவாலயத்துக்கு செல்ல இருக்கிறார்.

    கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் ஆடி திருவாதிரை விழா மிகவும் கோலாகலமாக நடைபெறும். வழக்கமாக 3 நாட்கள் இந்த திருவிழா நடைபெறும்.

    இந்த ஆண்டு வருகிற 23-ந்தேதி தொடங்கி 7 நாட்களுக்கு விழா நடை பெற உள்ளது. அந்த சமயத்தில் 27-ந்தேதி நடக்கும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.

    இதையடுத்து பெரம்பலூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் நடக்கும் பல்வேறு விழாக்களில் 28-ந்தேதி பிரதமர் மோடி கலந்து கொள்ள இருக்கிறார். அவரது சுற்றுப்பயணத்துக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

    அரியலூர், பெரம்பலூர், தஞ்சை 3 மாவட்டங்களிலும் பிரதமர் மோடி செல்லும் இடங்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. பாதுகாப்பை கருத்தில் கொண்டு அதிகாரிகள் மற்றும் பா.ஜ.க. மூத்த தலைவர்கள் ஓசையின்றி பிரதமர் மோடி சுற்றுப்பயண ஏற்பாடுகளை செய்து வருவதாக தெரிய வந்துள்ளது.

    தமிழகத்தில் ஆன்மீக ரீதியாக மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்த பா.ஜ.க. மூத்த தலைவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் மதுரையில் நடத்திய முருகன் மாநாடு பா.ஜ.க.வுக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.

    அதுபோல பிரதமர் மோடி கங்கைகொண்ட சோழபுரம் ஆலயத்தில் நடக்கும் ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதன் மூலம் மீண்டும் தமிழகத்தில் ஆன்மீக பரபரப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதனால் பிரதமர் மோடியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கடந்த 8-ந்தேதி தமிழகத்துக்கு வர திட்டமிட்டு இருந்தார். கடைசி நேரத்தில் அது ரத்து ஆனது.

    அவர் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கோவைக்கு வருவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. கோவையில் பா.ஜ.க. மூத்த தலைவர்களுடன் 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் தொடர்பாக அவர் ஆலோசிப்பார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் மத்திய மந்திரி அமித்ஷாவின் வருகை உறுதி செய்யப்படவில்லை.

    • நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.
    • கடந்த 7 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    சென்னை:

    சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. திங்கட்கிழமை சவரனுக்கு ரூ.400 குறைந்தும், செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.400 உயர்ந்தும், புதன்கிழமை சவரனுக்கு ரூ.480 குறைந்தும் நேற்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்தும் ஒரு சவரன் ரூ.72,160-க்கு விற்பனையானது.

    இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 55 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 9,075 ரூபாய்க்கும் சவரனுக்கு 440 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 72,600 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 7 நாட்களாக விலை மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 121 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 21 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160

    09-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,000

    08-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    07-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,080

    06-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,480

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    10-07-2025- ஒரு கிராம் ரூ.120

    09-07-2025- ஒரு கிராம் ரூ.120

    08-07-2025- ஒரு கிராம் ரூ.120

    07-07-2025- ஒரு கிராம் ரூ.120

    06-07-2025- ஒரு கிராம் ரூ.120

    • தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
    • தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு பொதுசுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    கேரளாவின் பாலக்காடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் சமீபத்தில் 'நிபா' வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகி உள்ளதை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு நோய் பரவல் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகிறது. மேலும், தமிழ்நாடு அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

    தமிழகத்தில் இதுவரை எந்தவித 'நிபா' வைரஸ் நோய் தாக்கங்கள் பதிவாகவில்லை என்றாலும், பொது மக்கள் பதற்றமின்றி விழிப்புடன் இருந்து அடிப்படை பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    'நிபா' வைரஸ் என்பது விலங்கியல் மூலம் பரவும் ஒரு நோய் தொற்றாகும். இது, பழ வகை வவ்வால்கள் மற்றும் பன்றிகள் போன்ற விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. வவ்வாலின் உமிழ்நீரால் மாசுபட்ட பழங்களை உண்ணுவதன் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு கொள்வதன் மூலமாகவோ நோய் தொற்று பரவுகிறது.

    காய்ச்சல், தலைவலி, வாந்தி, குழப்பம், தூக்கமின்மை, மூச்சுதிணறல் அல்லது மயக்கம், வலிப்பு போன்ற அறிகுறிகள் உள்ளதா? என மக்கள் கவனிக்க வேண்டும். குறிப்பாக, கேரளாவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பயணம் செய்த பிறகு அல்லது நோய்வாய்ப்பட்ட ஒருவரை தொடர்பு கொண்ட பிறகு, இதுபோன்ற அறிகுறிகள் யாரிடமாவது தோன்றினால் அவர்கள் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல வேண்டும்.

    கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களை, சிறப்பு கவனம் செலுத்தி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

    மேலும், இந்த மாவட்டங்களில் உள்ள மருத்துவ குழுக்கள் சந்தேகத்திற்கிடமான நோய் தொற்றுகளை முன்கூட்டியே கண்டறிந்து செயல்பட தயார் நிலையில் உள்ளனர். தமிழ்நாடு அரசு அனைத்து விதமான நோய் பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. எனவே, 'நிபா' வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய தேவையில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதிச்செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா?
    • எடப்பாடி பழனிசாமி, திமுகவை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்.

    சென்னை:

    கோவில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி, அறநிலையத்துறை நிதியில் இருந்து கல்லூரி ஆரம்பித்தால், மாணவர்களின் தேவைக்கான நிதி கிடைக்காது என்பதால் அந்த கருத்தை கூறியதாக விளக்கம் அளித்தார்.

    இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக ராயபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு கூறுகையில்,

    * கோவில் பணத்தில் கல்லூரி கட்டுவது சதிச்செயல் என்று பேசிவிட்டு தற்போது மாற்றி பேசுவதா?

    * எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பெயரை 'பல்டி' பழனிசாமி என மாற்றிக்கொள்ளலாம்.

    * எடப்பாடி பழனிசாமி, திமுகவை மட்டுமல்ல அவரது கட்சி தலைவர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவையும் விமர்சிக்கிறார்.

    * கொள்ளிக்கட்டையை எடுத்து தலைமை சொறியும் வேலையில் எடப்பாடி பழனிசாமி இறங்கியுள்ளார் என்றார். 

    • நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர்.
    • கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

    இதற்கிடையே, நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

    இந்த நிலையில், கொக்கைன் போதைப்பாருள் பயன்படுத்திய விவகாரத்தில் திரைப்பட துணை இயக்குநர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட துணை இயக்குநர் ஸ்ரீபிரேம்குமார், அலெக்ஸ் சந்தோஷ், ராஜன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி .

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    அதன்படி, பூந்தமல்லி நகராட்சி, சென்னீர்குப்பம், கரையான்சாவடி, துளசிதாஸ் நகர், சின்ன மாங்காடு, குமணன்சாவடி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் பாதிக்கப்படும்.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 17-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நெல்லை, தென்காசி, தேனி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது.
    • இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகார்த்திகேயன் வரை பலவேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் கிங்காங்.

    கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கும் பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினர். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்.

    • கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல் என சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்.
    • கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள் அமைக்கலாம்.

    திமுக மாணவர் அணிச் செயலாளர் ராஜீவ்காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் உத்தரவின்படி ஏழை, எளிய, சாமானிய மாணவர்களுக்கு உயர்கல்வி பெற கல்லூரிகளைத் திறந்து வைத்ததை "கல்லூரிகளைத் திறப்பது சதிச்செயல்" என பதவி சுகத்துக்காக பேரறிஞர் அண்ணாவை அடகு வைத்த எடப்பாடி பழனிசாமி இப்போது, "உங்களுக்கெல்லாம் எதற்கு கல்வி?" என்ற சங்கிகளின் குரலாய் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறார்.

    கோவில்களுக்கு மக்கள் காணிக்கையாகக் கொடுக்கும் உபரி நிதியிலிருந்து கல்வி நிலையங்கள், சிறார், முதியோர் பராமரிப்பு நிலையங்கள், மருத்துவமனைகள் அமைக்கலாம் என்பது இந்து சமய அறநிலையத்துறையின் சட்டங்களில் ஒன்று.

    ஆனால் அதுகூடத் தெரியாமல் திராவிட இயக்கத்தின் துரோகியாக, கல்விக்காக திராவிட மாடல் அரசு எடுக்கும் முன்னெடுப்புகளைக் கொச்சைப்படுத்தும் விதமாக கோவையில் பேசியுள்ள எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் ஜூலை 14ஆம் தேதி, பிற்பகல் 2.30 மணி அளவில், "கோவை, டாடாபாத், சிவானந்தா காலனி"யில், தி.மு.க. மாணவர் அணி செயலாளரான எனது (ராஜீவ்காந்தி) தலைமையில் "மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்" நடைபெறும்

    இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் அவர்களது தோழர்களுடன் பெருந்திரளாக பங்கேற்று, போராட்டத்தை வெற்றியடையச் செய்ய அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு ராஜீவ் காந்தி அதில் குறிப்பிட்டுள்ளார்.

    • கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதியதற்கு கேட் கீப்பர் தூங்கியதே காரணம்.
    • ரெயில்வே அதிகாரிகள் நள்ளிரவில ஆய்வு மேற்கொண்டனர்.

    கடலூரில் பள்ளி வேன் மீது ரெயில் மோதிய கோர விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். கேட் கீப்பரின் அலட்சியத்தால்தான் இந்த விபத்து நடந்ததாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

    கேட்கீப்பர் தூங்கிக் கொண்டிருந்ததால் ரெயில் வரும்போது, ரெயில்வே கேட்டை மூடவில்லை. இதனால் பள்ளி வேன் தண்டவளத்தை கடக்கும்போது விபத்து ஏற்பட்டது என குற்றம்சாட்டப்பட்டது. இதனால் கேட் கீப்பர் கைது செய்யப்பட்டதுடன், சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் அரக்கோணம்- செங்கல்பட்டு ரெயில் மார்க்கத்தில் நள்ளிரவு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது இரண்டு கேட் கீப்பர்கள் தூங்கிக் கொண்டிருந்ததை கண்டறிந்தனர். அவர்கள் இருவரையும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

    ×