என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நகைச்சுவை நடிகர்"

    • சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.
    • நகைச்சுவைத் தொடரில் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து சதிஷ் ஷா பாராட்டைப் பெற்றார்.

    பல பாலிவுட் படங்கள் மட்டும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடித்து புகழ்பெற்ற நகைசுவை நடிகர் சதிஷ் ஷா (74) உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.

    இதனை அவரது நெருங்கிய நண்பரும் தயாரிப்பாளருமான அசோக் பண்டிட் உறுதிப்படுத்தியுள்ளார்.

    1951 ஆம் ஆண்டு குஜராத்தி குடும்பத்தில் பிறந்த சதீஷ் ஷா 1970 களில் தனது திரை வாழ்க்கையைத் தொடங்கினார்.

    1984 ஆம் ஆண்டு வெளியான நகைச்சுவைத் தொடரான யே ஜோ ஹை ஜிந்தகி மூலம் சதிஷ் ஷா புகழ் பெற்றார். அதில் அவர் 55 வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து பாராட்டைப் பெற்றார்.

    தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே, ஹம் ஆப்கே ஹைன் கோன்..!, ஹீரோ நம்பர் 1, மைன் ஹூன் நா மற்றும் ஃபனா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் சதிஷ் ஷா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    • நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது.
    • சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்தார்.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனாவின் திருமணம் சென்னையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

    இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் நேரடியாக கிங்காங் வீட்டுக்கே சென்று சர்ப்ரைஸ் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

    இந்நிலையில், நடிகர் கிங்காங் மற்றும் அவரது மகள், மருமகன் ஆகியோர் விஜய் சேதுபதியின் அலுவலகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு மணமக்களை நடிகர் விஜய் சேதுபதி வாழ்த்தி அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இது தொடர்பான வீடியோவை கிங்காங் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார்.


    • அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்ட முயன்றனர்.
    • பல தெலுங்கு படங்களில் வில்லன் கேங்கில் காமெடி பாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமடைந்தார்.

    பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வெங்கட் ராஜ் என்ற "Fish வெங்கட்" சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 53.

    சமீபத்தில் சிறுநீரகக் கோளாறு மோசமடைந்ததால் வெங்கட் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேணடி இருந்தது. அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்டவும், பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கவும் முயற்சித்தனர். இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் ஐசியூவில் அவருக்கு டயாலிசிஸ் நடந்து வந்தது. 

    பவன் கல்யாண் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்த போதிலும், சரியான நேரத்தில் சிறுநீரகம் கிடைக்கவில்லை. இந்நிலையில்  நேற்று இரவு மருத்துவமனையிலேயே அவர் காலமானார்.

    பல தெலுங்கு படங்களில் வில்லன் கேங்கில் காமெடி பாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமடைந்தார். தனித்துவமான தெலுங்கானா பகுதி தெலுங்கு உச்சரிப்பு மற்றும் டைமிங் காமெடியில் வெங்கட் தேர்ந்தவர் ஆவார்.

    இளம் வயதில் சந்தையில் மீன் விற்று தனது வாழ்க்கையை நடத்தினார். இதன்மூலம் அவருக்கு Fish வெங்கட் என்ற பெயர் வந்தது. அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    • பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் நடிகர் கிங்காங் மகளின் திருமணம் நடைபெற்றது.
    • இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகார்த்திகேயன் வரை பலவேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் கிங்காங்.

    கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கும் பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இந்த விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினர். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் அவர்களும் கலந்து கொண்டார்.

    • கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.
    • பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    நடிகர் கிங்காங் பல்வேறு காமெடி கதாபாத்திரங்களில் நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர். கிங்காங் என்ற கதாப்பத்திரத்தில் சினிமாவில் அறிமுகமானதால், அதே பெயரிலேயே அழைக்கப்டுகிறார்.

    கலா என்ற பெண்ணை திருமனம் செய்த கிங்காங்கிற்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்நிலையில், இவரின் மகள் கீர்த்தனா திருமணத்திற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிவகார்த்திகேயன் வரை பலவேறு அரசியல் பிரபலங்கள் மற்றும் திரை பிரபலங்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழ் கொடுத்தார் கிங்காங்.

    கிங் காங் கொடுத்த திருமண அழைப்பிதழ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. இந்நிலையில் இன்று காலை கிங்காங் மகள் கீர்த்தனாவுக்கும் நவீன் என்பவருக்கும் பெசன்ட் நகரில் உள்ள ஆறுபடை முருகன் கோவிலில் திருமணம் நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அரசியல் தலைவர்களும் திரை பிரபலங்களும் கலந்து கொள்வார்கள் எதிர்பார்க்கப்படுகிறது.

    • நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு சமத்துவ பாட திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார்.
    • சினிமா படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது பாடங்கள் படித்து வந்தார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் குமாரபுரம் பகுதியை சேர்ந்த பிரபல நடிகர் இந்திரன். குடும்பத்தின் பொருளாதார பிரச்சனை காரணமாக தனது சிறு வயதிலேயே தையல் வேலைக்கு சென்ற இந்திரன், நாடகங்களில் நடித்தார்.

    அதன்பிறகு அவருக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமின்றி, ஏராளமான தமிழ் படங்களிலும் நடித்தார். சிறு வயதிலேயே வேலைக்கு சென்றுவிட்டதன் காரணமாக, அவர் 4-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போனது.

    எப்படியாவது பள்ளி படிப்பை முடிக்க வேண்டும் என்பதை தனது இலக்காக வைத்திருந்த அவர், தற்போது அதனை செயல்படுத்தியிருக்கிறார். அவர் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முயன்று வந்தார். இதற்காக 68 வயதான இந்திரன் கடந்த ஆண்டு (2023) கேரள மாநில சமத்துவ திட்டத்தில் பதிவு செய்தார்.

    17 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் 7-ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருந்தால் பத்தாம் வகுப்பு படிப்பில் சேரலாம். ஆகவே நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு சமத்துவ பாட திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

    சினிமா படப்பிடிப்புகளுக்கு இடையே நேரம் கிடைக்கும்போது பாடங்கள் படித்து வந்தார். கேரள மாநில சமத்துவ பாடத் திட்டத்தில் 1,604 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் நடிகர் இந்திரனும் ஒருவர் ஆவார். அவர் உள்பட 1,043 பேர் சமீபத்தில் 7-ம் வகுப்பு தேர்வு எழுதினர்.

    அந்த தேர்வில் நடிகர் இந்திரன் உள்பட 1,007 பேர் தேர்ச்சி பெற்றனர். நடிகர் இந்திரன் 7-ம் வகுப்பு தேர்வில் 59.4 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
    • மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்தி திரைத்துறையில் காமெடி நடிகராகவும், குணச்சித்திர நடிகராகவும் அறியப்படுபவர் நடிகர் ராஜூ ஸ்ரீவஸ்தவா(வயது 59). பிரபல ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நிகழ்ச்சியான, தி கிரேட் இந்தியன் லாஃப்டர் சேலஞ்ச் முதல் சீசனில் பங்கேற்று அதன்மூலம் அங்கீகாரம் பெற்றவர்.

    அதன்பின்னர் மெயினி பியார் கியா, பாஸிகர், பிக் பிரதர், பாம்பே டூ கோவா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இவர் கடந்த ஆகஸ்ட் 10-ம் தேதி காலை டெல்லியில் உள்ள ஜிம் ஒன்றில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தபோது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு சரிந்து விழுந்தார். அதன்பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

     

    40 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் ராஜூ ஸ்ரீவஸ்தவா இன்று காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மட்டுமின்றி அரசியல் தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    பிரபல பாலிவுட் நகைச்சுவை நடிகர் ராஜு ஸ்ரீவஸ்தவா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிடுகையில், " ராஜு ஸ்ரீவஸ்தவா நம் வாழ்வை சிரிப்பு, நகைச்சுவை மற்றும் நேர்மறை உணர்ச்சிகளால் பிரகாசமாக்கினார். அவர் விரைவாக நம்மை விட்டு பிரிந்துவிட்டார். ஆனால் அவர் பல ஆண்டுகளாக அவரது செழுமையான பணியால் எண்ணற்ற மக்களின் இதயங்களில் தொடர்ந்து வாழ்வார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என்று குறிப்பிட்டிருந்தார்.

    மேலும், உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், "ராஜு ஸ்ரீவஸ்தவா இப்போது நம்முடன் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடைய உ.பி. மக்கள் சார்பாக பிரார்த்திக்கிறேன். அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    ×