என் மலர்
சினிமா செய்திகள்

பிரபல தெலுங்கு காமெடி நடிகர் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழப்பு
- அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்ட முயன்றனர்.
- பல தெலுங்கு படங்களில் வில்லன் கேங்கில் காமெடி பாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமடைந்தார்.
பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் வெங்கட் ராஜ் என்ற "Fish வெங்கட்" சிறுநீரக செயலிழப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 53.
சமீபத்தில் சிறுநீரகக் கோளாறு மோசமடைந்ததால் வெங்கட் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட வேணடி இருந்தது. அவரது குடும்பத்தினர் அறுவை சிகிச்சைக்கான பணத்தை திரட்டவும், பொருத்தமான சிறுநீரகம் கிடைக்கவும் முயற்சித்தனர். இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் ஐசியூவில் அவருக்கு டயாலிசிஸ் நடந்து வந்தது.
பவன் கல்யாண் உள்ளிட்டோர் நிதி உதவி அளித்த போதிலும், சரியான நேரத்தில் சிறுநீரகம் கிடைக்கவில்லை. இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனையிலேயே அவர் காலமானார்.
பல தெலுங்கு படங்களில் வில்லன் கேங்கில் காமெடி பாத்திரத்தை ஏற்று நடித்து பிரபலமடைந்தார். தனித்துவமான தெலுங்கானா பகுதி தெலுங்கு உச்சரிப்பு மற்றும் டைமிங் காமெடியில் வெங்கட் தேர்ந்தவர் ஆவார்.
இளம் வயதில் சந்தையில் மீன் விற்று தனது வாழ்க்கையை நடத்தினார். இதன்மூலம் அவருக்கு Fish வெங்கட் என்ற பெயர் வந்தது. அவரது மறைவு தெலுங்கு திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






