search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telugu Actor"

    • தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
    • கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    பிரபல தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள பிலிம் நகர் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இன்று அதிகாலை மரணமடைந்தார். அவருக்கு வயது 87. அவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த 1959 ஆம் ஆண்டு வெளியான 'சிப்பாயி கூத்துரு' படத்தின் மூலம் அறிமுகமான இவர், ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என தனக்கு கிடைத்த அனைத்து வேடங்களையும் சிறப்பாக செய்து ரசிகர்களின் மனதில் தனி இடம் பிடித்தார். இதுவரை 770க்கும் மேற்பட்ட படங்களில் சத்யநாராயணா நடித்துள்ளார். கடைசியாக மகேஷ் பாபுவின் 'மஹார்ஷி' படத்தில் நடித்திருந்தார்.

    தமிழில் 'பஞ்சதந்திரம்' படத்தில் ஸ்ரீமனின் மாமனாராக சஞ்சீவி ரெட்டி என்ற வேடத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார். இந்தப் படத்தில் கைகலா சத்யநாராயணா பேசிய 'சின்ன கல்லு, பெத்த லாபம்' என்ற வசனம் யாராலும் மறக்க முடியாது. மேலும் 'பெரியார்' படத்தில் பெரியார் அப்பா வெங்கடப்ப நாயக்கராக தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

    கடந்த 1996 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள மச்சிலிபட்டினம் தொகுதியில் போட்டியிட்டு மக்களவை உறுப்பினார். இவர் தனது ராமா பிலிம்ஸ் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் சார்பாக ஏராளமான படங்களை தயாரித்து உள்ளார்.

    கேஜிஎப் படங்களை தெலுங்கில் இவர் தான் வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், தெலுங்கு நடிகர் கைகலா சத்யநாராயணா மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். கைகலா சத்யநாராயணா மறைவு வேதனை அளிக்கிறது. தனது குறிப்பிடத்தக்க நடிப்பு திறன் மற்றும் மாறுபட்ட பாத்திரங்களுக்காக தலைமுறைகள் கடந்து பிரபலமானவர் சத்யநாராயணா. இந்த சோகமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினருடனும் ரசிகர்களுடனும் உள்ளன. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.

    தமிழில் ஜெயம் படத்திலும், தெலுங்கில் பல படங்களில் நடித்தவருமான கோபிசந்த், தற்போது நடித்துவரும் படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்திருக்கிறார். #GopiChand
    தமிழில் ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். தெலுங்கில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது பெயரிடப்படாத தெலுங்கு படமொன்றில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முக்கிய காட்சிகளை ஜெய்ப்பூர் அருகே உள்ள மண்ட்வாவில் படமாக்கி வந்தனர்.

    கோபிசந்த் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்று வில்லன்களுடன் மோதுவதுபோல் காட்சியை எடுத்தனர். இதை 3 கேமராக்கள் வைத்து படமாக்கி கொண்டு இருந்தார்கள். அப்போது மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டிச்சென்ற கோபிசந்த் திடீரென்று பைக்கில் இருந்து கீழே தவறி விழுந்தார்.



    இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக கோபிசந்தை மீட்டு அருகில் இருந்த தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து காரணமாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.
    ஜெகன்மோகன் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக தெலுங்கு நடிகர் சிவாஜியை கைது செய்து விசாரிக்க வேண்டும் என்று ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் வற்புறுத்தியுள்ளது. #JaganMohanReddy #Visakhapatnamairport

    அமராவதி:

    தெலுங்கு திரைப்பட நடிகர் சிவாஜி. தமிழ் படங்களிலும் நடித்து உள்ளார்.

    இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆந்திர தேர்தலுக்காக ‘ஆபரேஷன் கருடா’ என்ற பா.ஜனதா திட்டம் ஒன்று வைத்துள்ளது என்றும் அதற்கு கோடிக்கணக்கில் பணம் செலவு செய்ய திட்டமிட்டுள்ளது என்றும் தெரிவித்து இருந்தார்.

    மேலும் இத்திட்டத்தின்படி எதிர்க்கட்சி தலைவர் தாக்கப்படுவார். அந்த பழி ஆளும் கட்சி மீது சுமத்தப்படும். அதனால் ஆளும் கட்சியான தெலுங்கு தேசத்திற்கு அரசியல் நெருக்கடி ஏற்படும். ஒரு நடிகரை தேசிய கட்சி வழிநடத்தும் என்று கூறி இருந்தார்.

    அவர் கூறியதுபோல், எதிர்க்கட்சி தலைவரான ஜெகன்மோகன் ரெட்டி விசாகப்பட்டனம் விமான நிலையத்தில் வைத்து கத்தியால் குத்தப்பட்டார். அந்த பழி தெலுங்கு தேசம்கட்சி மீது சுமத்தப்பட்டு இருக்கிறது.


    மேலும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவுடன் நட்புடன் இருந்த நடிகர் பவன் கல்யாண் தற்போது தெலுங்கு தேசம் கட்சியை விமர்சித்து வருகிறார்.

    நடிகர் சிவாஜி கூறியது போல் நடப்பதால் அவர் மீது ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் விஜயவாடா போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

    அதில், நடிகர் சிவாஜி ஆபரேசன் கருடா என்ற பெயரில் சொன்ன தகவல்கள் நடந்து வருகிறது. எனவே அவருக்கு தற்போது நடக்கும் வி‌ஷயங்கள் அனைத்தும் முன்கூட்டியே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது.

    ஜெகன்மோகன் ரெட்டி மீதான தாக்குதல் சம்பவமும் அவருக்கு முன்பே தெரியும். எனவே நடிகர் சிவாஜியை கைது செய்து விசாரித்தால் பல உண்மைகள் வெளியே வரும் என்று கூறி உள்ளது. #JaganMohanReddy #Visakhapatnamairport

    ×