போதைப்பொருள் விவகாரம்- மேலும் 3 பேர் கைது

நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
போதைப்பொருள் விவகாரம்- மேலும் 3 பேர் கைது
Published on

போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், போலீசார் விசாரணை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, கைதான நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது.

இதற்கிடையே, நடிகர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்ததாக அரவிந்த் பாலாஜி, சுபாஷ் ஆகியோரை கடந்த வாரம் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில், கொக்கைன் போதைப்பாருள் பயன்படுத்திய விவகாரத்தில் திரைப்பட துணை இயக்குநர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். திரைப்பட துணை இயக்குநர் ஸ்ரீபிரேம்குமார், அலெக்ஸ் சந்தோஷ், ராஜன் ஆகியோரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com