என் மலர்
சென்னை
- பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது.
- கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
சென்னை:
தமிழ்நாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கில் தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக தமிழக அரசு கடந்த 2023-ம் ஆண்டு திருத்திய மின்வாகன கொள்கையை வெளியிட்டது. இதன்படி மின்வாகன உற்பத்தி துறையில், ரூ.50 ஆயிரம் கோடிக்கு முதலீடுகள் மற்றும் 1.50 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்குவது இந்த கொள்கையின் முக்கிய நோக்கமாகும்.
இதன்படி மின்சார வாகனங்களுக்கு சாலை வரிவிலக்கு, பதிவுக் கட்டணம் மற்றும் அனுமதி கட்டணம் தள்ளுபடி போன்ற சலுகைகளை இந்த ஆண்டு இறுதிவரை வழங்க அனுமதிக்கப்பட்டது.
மேலும் மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் மின்னேற்ற (சார்ஜிங்) நிலையங்கள், பொது மின்கல (பேட்டரி) மாற்று நிலையங்களுக்கான ஊக்கச் சலுகைகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பொது இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. கடந்த 2023-ம் ஆண்டே 9 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.
இதில் பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் அவை பயன்பாட்டுக்கு வர உள்ளது. இதன் மூலம் தனிநபர் மின் வாகனப் பயன்பாட்டை அதிகரிக்கவும், போக்குவரத்து சேவைகளில் மின் வாகன பயன்பாட்டை அதிகரிக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் முதற்கட்டமாக 120 மின்சார பஸ்கள் பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது. அடுத்தடுத்து இன்னும் புதிய பஸ்கள் வர இருக்கிறது. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு நகர்ப்புறங்கள் மற்றும் நெடுஞ்சாலைகளில் 500 இடங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதற்கான சாத்தியக் கூறுகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி பொது போக்குவரத்தில் ஆட்டோ, கார்கள் போன்ற சேவைகளில் மின்வாகன பயன்பாட்டை அதிகரிக்க நகரங்களில் பேட்டரி மாற்று நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
டெல்லி போன்ற நகரங்களில் இந்த திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட நிலையில், தமிழகத்திலும் செயல்படுத்த திட்டமிட்டு பணிகளை தொடங்கி உள்ளோம்.
ஏற்கனவே தனியார் சார்ஜிங் நிலையங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண பிரத்யேக குறைதீர் மையங்களும் அமைக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
- தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர்.
- அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் காமராஜர்.
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் தலைநிமிரச் செய்த தலைமகன் என்றால் அவர் கர்மவீரர் காமராசர் தான். அந்தப் பெருமகனாரின் 123-ஆம் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக நம்மால் என்ன செய்ய முடியுமோ, அதை விட அதிகமாக செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தும் உன்னத நாள் தான் இந்த நாளாகும்.
தமிழ்நாட்டில் கல்விப்புரட்சி, தொழில் புரட்சி, வேளாண்புரட்சி ஆகிய அனைத்துக்கும் வித்திட்டவர். அறிவுப்பசியை அணைக்க வயிற்றுப்பசி தடையாக இருக்கக்கூடாது என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை அறிமுகம் செய்த மகான் அவர். இன்றைக்கு இருப்பதைப் போல சொல்லி விட்டு செய்யாமல் இருந்த தலைவர் அல்ல அவர், ஏராளமானத் திட்டங்களை செயல்படுத்தி விட்டு, அதை செய்ய வேண்டியது எனது கடமை என்று கூறி விளம்பரம் தேடாமல் இருந்த பெருமகன் அவர்.
அவர் எத்தகைய ஆட்சியைக் கொடுத்தாரோ, அத்தகைய ஆட்சி தமிழ்நாட்டுக்கு மீண்டும் கிடைக்கும் என்றால் அது தான் உண்மையான பொற்காலமாக இருக்கும். அதை ஏற்படுத்துவதற்காக உழைக்க நாம் அனைவரும் அப்பெருமகனின் பிறந்தநாளில் உறுதி ஏற்றுக்கொள்வோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்தவர் காமராஜர்.
- தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவர் காமராஜர்.
அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது:-
எளிய குடும்பத்தில் பிறந்து, கடைக்கோடி தொண்டனாக அரசியலில் இணைந்து, இந்தியாவின் தலைவிதியை நிர்ணயிக்கும் அளவிற்கு மாபெரும் தலைவராக உயர்ந்தவரும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கியதில் அளப்பரிய பங்களிப்பை வழங்கியவருமான முன்னாள் முதலமைச்சர் கர்மவீரர் காமராஜரின் பிறந்த தினம் இன்று.
ஏழை, எளிய மக்களின் நலனையே லட்சியமாகக் கொண்டு, தனக்குக் கிடைத்த பதவிகள் அனைத்தையும் சேவை செய்வதற்கான வாய்ப்பாகக் கருதி கல்வி, விவசாயம், சுகாதாரம் மற்றும் தொழில்துறையில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திய பெருந்தலைவர் காமராஜர் ஆற்றிய அரும்பெரும் பணிகளை அவர் பிறந்த இந்நாளில் போற்றிக் கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் பதிவிட்டுள்ளார்.
- தேர்வர்கள் இன்று முதல் (15-ந்தேதி) அடுத்த மாதம் 13-ந்தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
- முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று நடைபெறும்.
சென்னை:
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் கோபாலசுந்தர ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சார்பதிவாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், வனவர், முதுநிலை வருவாய் ஆய்வாளர் மற்றும் உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான 645 காலிப் பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA) பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் 2025-ம் ஆண்டிற்கான ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்டவாறு இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்கள் இன்று முதல் (15-ந்தேதி) அடுத்த மாதம் 13-ந்தேதி வரை தேர்வாணைய இணைய தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் மாதம் 28-ந்தேதி அன்று நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை யு.பி.ஐ. மூலமாகவும் செலுத்தலாம்.
தொடர்ச்சியாக 13-வது முறையாக தேர்வாணையத்தின் ஆண்டுத் திட்டத்தில் குறிப்பிட்ட தேதியில் தேர் விற்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் தவறாமல் வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வர்களின் நலன் கருதி ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் (முதன்மை) தேர்வு தொகுதி IIA பணிகளின் தேர்வுத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது.
2018 முதல் 2025 வரை உள்ள 8 ஆண்டுகளில் முதன் முறையாக தொடர்ச்சியாக அடுத்தடுத்த ஆண்டுகளில் (2024 மற்றும் 2025), ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி II மற்றும் IIA பணிகளுக்கான அறிவிக்கை தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டு உள்ளது.
2025-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-II (தொகுதி II மற்றும் தொகுதி IIA பணிகள்) மூலம் ஒரு நிதியாண்டிற்கு (2025-26) 645 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டு அறிவிக்கையில் வெளியிடப்பட்ட காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை தோராயமானதாகும். மேலும் அரசுத்துறை, நிறுவனங்களிடம் இருந்து அதிகரித்து பெறப்படும் பட்சத்தில் கலந்தாய்விற்கு முன்பாக மேலும் அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- விவசாயத்திற்கென பெயரளவில் தனி நிதிநிலை தாக்கல் செய்தால் மட்டும் போதாது.
- வேளாண் வளர்ச்சிக்கும், உழவர்களின் முன்னேற்றத்திற்குமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வழங்கப்படவில்லை. 4 லட்சத்திற்கும் கூடுதலான விவசாயிகள் மின் இணைப்புக்காக விண்ணப்பித்து ஆண்டுக்கணக்கில் காத்திருக்கும் நிலையில், அவர்களுக்கு மின் இணைப்பு வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தமிழக அரசு காலம் தாழ்த்துவது கண்டிக்கத்தக்கது.
தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது தமிழ்நாட்டில் விவசாய பயன்பாட்டுக்கான மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 4.50 லட்சம் விவசாயிகள் காத்திருந்தனர். விவசாயிகளுக்கு 2 லட்சம் மின் இணைப்புகள் வழங்கப்போவதாக அறிவித்த தி.மு.க. அரசு அதை முறையாக செய்யவில்லை.
விவசாயத்திற்கென பெயரளவில் தனி நிதிநிலை தாக்கல் செய்தால் மட்டும் போதாது. வேளாண் வளர்ச்சிக்கும், உழவர்களின் முன்னேற்றத்திற்குமான திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஆனால், உழவர்களின் நலன்கள் தொடர்பாக தி.மு.க. அரசு அளித்த வாக்குறுதிகளில் 5 சதவீதம் கூட நிறைவேற்றப்படவில்லை. உணவு படைக்கும் கடவுள்களான உழவர்கள் மீது தி.மு.க. அரசு காட்டும் அக்கறை இவ்வளவு தான். கடந்த நான்கரை ஆண்டுகளாக தங்களுக்கு துரோகம் செய்து வரும் தி.மு.க. அரசுக்கு வரும் தேர்தலில் உழவர்கள் மறக்க முடியாத பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- நேற்று சவரனுக்கு ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனையானது.
- வெள்ளி விலையும் குறைந்துள்ளது.
சென்னை:
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று சவரனுக்கு ரூ.120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.73,240-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 9,145 ரூபாய்க்கும் சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 73,160 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் குறைந்துள்ளது. கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 125 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
14-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,240
13-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
12-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.73,120
11-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,600
10-07-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.72,160
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
14-07-2025- ஒரு கிராம் ரூ.127
13-07-2025- ஒரு கிராம் ரூ.125
12-07-2025- ஒரு கிராம் ரூ.125
11-07-2025- ஒரு கிராம் ரூ.121
10-07-2025- ஒரு கிராம் ரூ.120
- விழாவில் பங்கேற்க வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
- தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. உங்க பிரச்சனைகளுக்கு எப்போது தீர்வு வரும்?
சென்னையில் நேற்று இரவு பா.ம.க. வடக்கு மண்டல இணை பொது செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியின் மகள் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வந்த பா.ம.க. தலைவர் அன்புமணியை சந்தித்து பேசிய அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
இந்நிலையில் விழாவில் பங்கேற்க வந்த பா.ம.க. நிறுவனர் ராமதாசிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
கேள்வி: அன்புமணி அவர்கள் நீங்கள் வரும் வரை காத்திருத்துவிட்டு கிளம்பி இருக்கிறார். இதற்கெல்லாம் எப்போது முடிவு வரும்?
பதில்: போகப் போகத் தெரியும் என்று பாடலாக பாடினார்.
கேள்வி: ஒட்டு கேட்கும் கருவியை யார் வைத்தது என்று கண்டுபிடித்து விட்டீர்களா?
பதில்: அது பிராசசில் உள்ளது.
கேள்வி: தேர்தல் நெருங்கிக்கொண்டு இருக்கிறது. உங்க பிரச்சனைகளுக்கு எப்போது தீர்வு வரும்?
பதில்: விரைவில்... விரைவில்...
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த ஜூன் மாதம் மாநிலங்களவை தேர்தல் நடைபெற்றது.
- தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
சென்னை:
மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவை (ராஜ்ய சபா) தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
கமல்ஹாசன், வருகிற 25-ந்தேதி அன்று பாராளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு பதவியேற்கவுள்ளார் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- கையில் காசு வைத்துக்கொள்ளாத காமராசர் ஏழைத் தமிழர்களை ஈட்டச் செய்தார்...
- கருப்பு காந்தி என்று அழைக்கப்பட்டாலும் காந்தி காணாத துறவறம் பூண்டார்....
சென்னை :
தமிழ்நாட்டை 9 வருடங்கள் ஆட்சி செய்த பெருந்தலைவர் காமராஜரின் 123-வது பிறந்தநாளான இன்று கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட உள்ளது. அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் காமராஜரின் புகழ்போற்றி வருகின்றனர்.
இந்த நிலையில், கவிஞரும், பாடலாசிரியருமான வைரமுத்து எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
படிக்காத காமராசர்
பள்ளிகள் செய்தார்
வீடுகட்டாத காமராசர்
அணை கட்டினார்
புத்தகம் எழுதாத காமராசர்
நூலகம் திறந்தார்
கையில் காசு
வைத்துக்கொள்ளாத காமராசர்
ஏழைத் தமிழர்களை
ஈட்டச் செய்தார்
மற்றவர்க்கு நாற்காலி தந்து
தன் பதவி தான்துறந்தார்
கருப்பு காந்தி
என்று அழைக்கப்பட்டாலும்
காந்தி காணாத
துறவறம் பூண்டார்
காமராசர் நினைக்கப்பட்டால்
அறத்தின் சுவாசம்
அறுந்து விடவில்லை
என்று பொருள்
காமராசர் மறக்கப்பட்டால்
மழையே தண்ணீரை
மறந்துவிட்டது என்று பொருள்
நான் உங்களை
நினைக்கிறேன் ஐயா
இவ்வாறு வைரமுத்து பதிவிட்டுள்ளார்.
- சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும்.
- தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 9 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரி, நெல்லை, தென்காசி, தேனி, விருதுநகர், திண்டுக்கல், கோவை, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- காமராஜ் நகர், ராஜலட்சுமி அவென்யூ, டெலிபோன்ஸ் நகர், விபிகே தெரு .
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.07.2025) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
சைதாப்பேட்டை: கட்டபொம்மன் பிளாக், முத்துரங்கன் பிளாக், அஞ்சுஹாம் நகர், பாரி நகர், பள்ளி தெரு, ஆர்.ஆர்.காலனி அனைத்து தெருக்கள், விஎஸ்எம் கார்டன், பாரதி பிளாக், ஏரிக்கரை தெரு, சைதாப்பேட்டை மேற்கு பகுதிகள் (முழுவதும்), 11வது அவென்யூ, 7வது அவென்யூ, எல்ஐசி காலனி, நாகாத்தம்மன் கோவில் தெரு, அண்ணாமலை செட்டி நகர், 1 அஞ்சலகம், ஈ.வி. காலனி 1-4 தெருக்கள், காமாட்சிபுரம் 1வது-10வது அவென்யூ, அசோக் நகர் 58-64 தெரு, மூவேந்தர் காலனி, அசோக் நகரின் ஒரு பகுதி, பிள்ளையார் கோவில் தெரு, சேகர் நகர், மேற்கு ஜோன்ஸ் சாலை, அசோக் நகர் 12வது அவென்யூ, ராமபுரம் ராமசாமி தெரு, ராஜகோபால் தெரு, ஆஞ்சநேயர் பாலம் தெரு, தனசேகரன் தெரு, விஜிபி சாலை.
அம்பத்தூர் : வெள்ளாளர் தெரு, பள்ளி தெரு, ஆச்சி தெரு, பாடசாலை தெரு, எட்டேஸ்வரன் கோவில் தெரு, வைஷ்ணவி நகர், காமராஜர் நகர்.
தரமணி: காமராஜ் நகர், ராஜலட்சுமி அவென்யூ, டெலிபோன்ஸ் நகர், விபிகே தெரு, வெங்கடேஸ்வரா நகர், குருஞ்சி நகர்.
பட்டாபிராம்: சேக்காடு, ஐயப்பன் நகர், ஸ்ரீ தேவி நகர், தந்துறை, கண்ணபாளையம், கோபாலபுரம், விஜிவி நகர், விஜிஎன் நகர்.
காரம்பாக்கம்: சமயபுரம், ஸ்ரீராம் நகர், காந்தி நகர், கந்தசாமி நகர், பொன்னி நகர், மோதி நகர், பத்மாவதி நகர், காவேரி நகர், தர்மராஜா நகர், விஸ்வநாதன் தெரு, பிரமனார் தெரு.
அரும்பாக்கம்: 100 அடி சாலை, ஜெய் நகர் 17,18,21,22,23 தெரு, ஜெய் நகர் 2வது பிரதான சாலை, வள்ளுவர் சாலை, அமராவதி நகர், எஸ்விபி நகர், ஜெகநாதன் நகர் 2வது பிரதான சாலை, பெருமாள் கோவில் தோட்டம், ராமகிருஷ்ணா தெரு.
- ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது.
- இந்த பிரச்சனைக்கு ஜி.கே.மணி தான் காரணம் என்று அன்புமணி தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
சென்னையில் நேற்று இரவு பாமக முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தியின் மகள் நிச்சயதார்த்த விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு வந்த பாமக தலைவர் அன்புமணியை சந்தித்து பேசிய அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே.மணி அவருடன் கைகுலுக்கி நலம் விசாரித்தார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே மோதல் போக்கு நீடித்த வண்ணம் உள்ளது. இந்த பிரச்சனைக்கு ஜி.கே.மணி தான் காரணம் என்று அன்புமணி தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், அன்புமணியும் ஜி.கே.மணியும் சந்தித்து பேசியுள்ளது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.






