என் மலர்
சென்னை
- ஆதவ் அர்ஜுனா அலுவலகம் ஆழ்வார்பேட்டையில் உள்ளது.
- அலுவலகம் அருகே ஆயுதங்களுடன் சிலர் நோட்டமிட்டதாக புகார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளராக இருப்பவர் ஆதவ் அர்ஜுனா. இவரது அலுவலகம் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ளது. இவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது அலுவலகம் அருகே சிலர் ஆயுதங்களுடன் நோட்டமிட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
- குடிநீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
- 3 தடவை முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.
சென்னை:
சென்னை நகர மக்களுக்கு தினமும் 107 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. குடிநீர் இணைப்பு இல்லாத இடங்களில் சாலையோர தொட்டிகள் மற்றும் முன்பதிவு செய்யும் குடியிருப்புகள், வணிக நிறுவனங்களுக்கு 452 ஒப்பந்த லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
லாரிகளில் குடிநீரை கொண்டு செல்லும் போது தெருவோர தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் உள்ள தண்ணீரை வணிக நிறுவனங்களுக்கு விற்று டிரைவர்கள் முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும், இதேபோல் பணம் செலுத்தி வாங்கும் குடிநீரையும் அவர்களது தொட்டிகளில் முழுவதும் நிரப்பாமல் மீதம் எடுத்து சென்று வெளியே விற்பனை செய்வதாகவும் குடிநீர்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் குடிநீரேற்று நிலையங்களிலும் லாரிகளில் முறைகேடாக குடிநீர் நிரப்பி வெளியே கொண்டு செல்வதால் குடிநீர் வாரியத்துக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வந்தது.
இதையடுத்து குடிநீர் வினியோகத்தில் முறைகேடுகளை தடுக்க தண்ணீர் எடுத்து செல்லும் லாரிகளில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதன் மூலம் குடிநீர் வழங்கும் லாரிகள் எங்கெல்லாம் செல்கின்றன என்பதை குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். லாரியின் தொட்டியில், சென்சார் பொருத்தி நீரேற்று நிலையத்தில் இருந்து எடுத்துச் செல்லும் குடிநீர் குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு முழுவதும் வினியோகிக்கப்படுகிறதா? என்றும் கண்காணிக்கப்படுகிறது.
இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறும்போது, குடிநீர் வினியோகிக்கும் ஒவ்வொரு லாரிக்கும் அதன் பதிவு எண் அடிப்படையில் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அதில் குடிநீர் வினியோகம் தொடர்பான அனைத்து தகவல்களும் இருக்கும். தண்ணீர் வினியோகத்தில் முறைகேட்டில் ஈடுபட்டால் ஸ்மார்ட் அட்டையின் இயக்கம் தடைபடும். முதல்முறை தடைபட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். 3 தடவை முறைகேட்டில் ஈடுபட்டால் சம்பந்தப்பட்ட லாரியின் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றனர்.
- போராட்டத்தையொட்டி, அந்த கட்சியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள் திரண்டு வந்தனா்.
- வழக்கு தொடா்பாக போலீசாா், இன்று முதல் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனா்.
சென்னை:
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் கோவில் காவலாளி அஜித்குமாா் போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் சாா்பில் திருவல்லிக்கேணி சுவாமி சிவானந்தா சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு தலைமை ஏற்று அந்த கட்சியின் தலைவரும் நடிகருமான விஜய் பேசினாா். போராட்டத்தையொட்டி, அந்த கட்சியைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான தொண்டா்கள் திரண்டு வந்தனா்.
கூட்ட நெரிசலின் காரணமாக அந்த சாலையில் இருந்த தடுப்புகள் பெருமளவில் சேதமடைந்தன. இது தொடா்பாக சென்னை மாநகராட்சி உதவி பொறியாளா் காா்த்திக், தமிழக வெற்றிக் கழகத்தினா் மீது புகாா் செய்தாா். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசாா், அரசின் பொதுச் சொத்துகளை சேதப்படுத்தியதாக த.வெ.க. தலைவா் விஜய் உள்ளிட்ட போராட்டத்தில் பங்கேற்ற அனைவா் மீதும் வழக்குப் பதிவு செய்து உள்ளனா். வழக்கு தொடா்பாக போலீசாா், இன்று முதல் தீவிர விசாரணையில் ஈடுபட உள்ளனா்.
ஆர்ப்பாட்டத்தின்போது, சாலைக்கு நடுவே இருந்த இரும்பு தடுப்புகள் சேதமடைந்தது தொடர்பான புகாரையடுத்து சேதங்களை சீர் செய்து தருவதாக த.வெ.க. சார்பில் சென்னை மாநகராட்சி நிர்வாகத்திடம் கடிதம் தரப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி சார்பில் சிவானந்தா சாலையில் ஏற்பட்டிருக்கக் கூடிய சேதங்களை ஆய்வு மேற்கொண்ட பின்னர் இது குறித்து முடிவு எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர்.
- கீழடியில் 102 குழிதோண்டி பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
சு. வெங்கடேசன் எம்.பி. எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
ராஜஸ்தானில் உள்ள பஹஜ் என்ற இடத்தில் ஐந்து மாதங்கள் மட்டுமே அகழாய்வு நடந்துள்ளது. பத்து குழிகள் மட்டுமே தோண்டியுள்ளனர். அதற்குள் சரஸ்வதி நதியை கண்டுபிடித்து விட்டனர். இதே முறையில் ஹரியானாவிலும் இமாச்சல பிரதேசத்திலும் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளார்கள்.
கீழடியில் 102 குழிதோண்டி, 88 கார்பன் மாதிரிகளையும், 5700 தொல் பொருட்களையும் கொண்டு அறிவியல் முறை பகுப்பாய்வு நடத்தி அறிக்கை சமர்பித்தால், ஆதாரம் போதவில்லை என்கிறார்கள்.
ஆனால் ஒரு கார்பன் மாதிரி கூட கண்டறியாமல், நதியையே கண்டறிந்து உலகையே அதிர்ச்சிக்கு உள்ளாக்குகிறது பாஜக அரசு.
இவ்வாறு சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
- தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
- வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* நீலகிரி, கோவை மாவட்டங்களுக்கு வரும் 17-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை 5 நாட்கள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
* வரும் 17-ந்தேதி தேனி, திண்டுக்கல், தென்காசி, திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* வரும் 18-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
* வரும் 19-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை தேனி, தென்காசியில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்விதான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர்.
- உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர்.
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
காலத்தாலும் களவாட முடியாத கருவூலம் கல்விதான் என்பதை அன்றே கணித்து, தமிழகத்தில் கல்விச் சாலைகள் கட்டமைத்தவர். உழவர் பெருங்குடி மக்களின் உள்ளங்கள் குளிர, பாசனப் பயன்பாட்டுக்கு அணைகளைக் கட்டியவர். வீடு உயர்ந்தால் நாடு உயரும் என்று வேலைவாய்ப்புகளைப் பெருக்கத் தொழிற்சாலைகளை உருவாக்கியவர். தன்னலமற்ற சேவைகளால் தமிழகத்தைத் தலைநிமிரச் செய்தவர், பெருந்தலைவர் காமராஜர்.
கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான பெருந்தலைவர் காமராஜர், தமது ஆட்சியில் மசச்சார்பின்மையையும் நிர்வாகத்தில் நேர்மையையும் கடைப்பிடித்தவர். சமூகநீதிக் கொள்கை வழியில் எளியவர்களுக்கும் அதிகாரமளித்து, தமிழகத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்ற பெருமைக்குரியவர்.
பெருந்தலைவர் காமராஜரின் பிறந்தநாளையொட்டி, சென்னை, பனையூரில், கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இவ்வாறு விஜய் அதில் குறிப்பிட்டுள்ளார்.
- வீடு தேடி சேவைகளை தரும் திராவிட மாடல் அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது.
- சென்னை முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு எளிதாக சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னை சைதாப்பேட்டையில் அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 13 சேவைகள் குறிப்பாக கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, முதல்வர் மருத்துவ காப்பீடு திட்டம், புதிய ஆதார் இணைப்பு, வீட்டு வசதி வாரியத்துறை, கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சேவைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வீடு தேடி சேவைகளை தரும் திராவிட மாடல் அரசின் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இன்று தொடங்கி வைக்கப்பட்டது. சென்னையில் இன்று மட்டும் 109 முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. முதல் நாளே மக்கள் இதனை வரவேற்று பாராட்டுகின்றனர்.
தமிழகத்தில் ஊரகப் பகுதிகளில் 15 துறைகளை சார்ந்த 45 சேவைகளும் நகர்புறங்களில் 13 துறைகளை சேர்ந்த 43 சேவைகளும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் நடத்தப்பட்டு வருகின்றன.
காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க பெண்கள் அதிகமாக வருவதால் கூடுதலாக அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் நவம்பர் இறுதி வரை சென்னை முழுவதும் 400 முகாம்கள் அமைக்கப்பட்டு மக்களுக்கு எளிதாக சேவைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- சென்னையில் 40, 50 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோவில்களில் குடமுழுக்குகளை நடத்தி வருகிறோம் .
- எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை வருகிற தேர்தலில் வாக்கு வங்கியால் ஏமாற்ற மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
சென்னை:
சென்னை மண்ணடி சாம்பய்யர் தெருவில் உள்ள தில்லை விநாயகர் கோவிலுக்கு வெள்ளி பூஜை பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது;-
கடந்த மாதம் 5-ந்தேதி தில்லை விநாயகர் கோவிலில் நன்னீராட்டு விழா நடைபெற்றது. துறையின் ஆணையாளர் பொது நிதியில் இருந்து இந்த நன்னீராட்டு விழா நடைபெற்றது. இந்து சமய அறநிலைத்துறை வரலாற்றில் அதிக அளவு குடமுழுக்கு நடந்த ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது.
3300-க்கு மேற்பட்ட கோவில்களில் குடமுழுக்கு நடந்திருக்கிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் 3500 கோவிலில் குடமுழுக்கு நடத்துவதற்கான பணிகளை துறை சார்ந்த அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்.
சென்னையில் 40, 50 ஆண்டுகளாக குடமுழுக்கு நடைபெறாமல் உள்ள கோவில்களில் குடமுழுக்குகளை நடத்தி வருகிறோம் .
இன்றயை தினம் தில்லை விநாயகர் கோவிலுக்கு பக்த ஜனசபை சார்பில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள வெள்ளிகளால் ஆன பூஜை பொருட்கள் வழங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு துறை சார்ந்த அமைச்சராக நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். சேலத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அவமதிக்கப்பட்டது சமூக விரோத செயல். ஏதாவது ஒரு வகையில் வன்முறையை விதைக்க வேண்டும் என்கின்ற வகையில் நினைக்கிறார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் மக்களை பிளவுபடுத்த நினைப்பவர்களை சூழ்ச்சிகள் வேர் அறுக்கப் டுகிறது. அமைதியை குலைக்க முற்படுகிறார்கள்.
உங்களுடன் ஸ்டாலின் திட்டம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்ததை நாங்கள் கூட திருப்பிச் சொல்லலாம், இத்தனை நாள் அமைதியாக இருந்துவிட்டு இப்போது ஏன் மக்கள் பிரச்சாரத்தை தொடங்கி இருக்கிறார். இதை மக்களை ஏமாற்றுவதற்கான சூழலாக எடுத்துக் கொள்ளலாம்.
ஆட்சியில் இருக்கும் முதலமைச்சர் ஆட்சி பொறுப்பு ஏற்ற நாளில் இருந்து புதிய திட்டங்களை கொண்டு வந்திருக்கிறார். இன்று மக்களை தேடி அவர்களுக்கு இருக்கின்ற குறைகளை போக்குவதற்காக இந்த முன்னோடியான திட்டத்தை எடுத்திருக்கிறார். ஆட்சி பொறுப்பை ஏற்றதில் இருந்து மாதம் தோறும் புது திட்டங்களை கொண்டு வந்து மக்களுடைய முழு நம்பிக்கையை பெறுகின்ற முதல்வரின் புதிய திட்டமாக தான் மக்கள் கருதுகிறார்கள். ஏமாற்றுபவர்கள் தான் ஏமாற்றத்தை பற்றி பேசுவார்கள். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியை வருகிற தேர்தலில் வாக்கு வங்கியால் ஏமாற்ற மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நான் முதலமைச்சரான பின் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நேராக தலைமை செயலகத்தில் எனது அறைக்கு வரலாம் என்றார்.
- தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. போலீஸ் ஆட்சியும், அதிகாரிகள் ஆட்சியுமே நடைபெறுகிறது.
சென்னை:
சென்னையில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி வருமாறு:-
தமிழகம் முழுவதும் தொடங்கப்பட்டுள்ள உங்களுடன் ஸ்டாலின் 'திட்டம் என்பதற்கு பதிலாக பொய்களுடன் ஸ்டாலின் என பெயர் வைத்திருக்கலாம். தேர்தல் வந்தால்தான் முதலமைச்சருக்கு மக்கள் கண்ணுக்கு தெரிகின்றனர்.
கொஞ்சம் கூட ஸ்டாலினுக்கு வெட்கம் இல்லையா..? எதிர்கட்சியாக இருந்தபோது பெட்டி வைத்து வாங்கிய மனுக்கள் என்னவானது..? சாவியை அவரே வைத்திருந்தார். முதலமைச்சரான பின் மனுக்களை நானே படித்து நடவடிக்கை எடுப்பேன் என்றார்.
நான் முதலமைச்சரான பின் பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் நேராக தலைமை செயலகத்தில் எனது அறைக்கு வரலாம் என்றார். 4 ஆண்டில் தலைமைச் செயலகத்தில் பொதுமக்களை ஒருமுறையேனும் ஸ்டாலின் சந்தித்தது உண்டா..? "பொய்களுடன் ஸ்டாலின்" என்பதே திட்டத்தின் உண்மையான பெயராக இருக்க வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.
தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சி நடைபெறவில்லை. போலீஸ் ஆட்சியும், அதிகாரிகள் ஆட்சியுமே நடைபெறுகிறது.
அரசின் செய்தித் தொடர்பு அதிகாரிகளாக 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அறிவித்துள்ளார் இதன் மூலம் முதலமைச்சர். தலைமைச் செயலாளர் நிலையில் இருக்கும் நான்கு அதிகாரிகளை அவமதித்து விட்டார். இனி 4 மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளையும் பி.ஆர்.ஓ. என்று மற்றவர்கள் கூப்பிடுவர்.
ஏற்கனவே செய்தி மக்கள் தொடர்புத் துறை இருக்கும்போது ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை செய்தித் தொடர்பாளராக நியமிப்பது ஏன்..? அரசின் திட்டங்களை அமைச்சர்கள் மக்களுக்கு கூறாமல் அதிகாரிகள் கூறினால் அதன் பெயர் எமர்ஜென்சி நிலை. இப்போது மக்களாட்சி இல்லை, அதிகாரிகள் ஆட்சியே நடக்கிறது என்பதற்கு இந்த நியமனமே உதாரணமாகும். தமிழகத்தில் மக்களாட்சி நடைபெறவில்லை, அதிகாரிகள் ஆட்சிதான் நடைபெறுகிறது.
கேரளாவை போல் 'ப' வடிவில் மாணவர்களை அமரவைப்பதால் கல்வித்தரம் உயர்ந்து விடுமா..? 3,600 பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை. கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஆசிரியர்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். பள்ளிகளில் கழிவறை உட்பட அடிப்படை வசதியில்லை.
நானும் கடைசி பெஞ்ச் மாணவன் தான். ஆனால் பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றேன். அன்பில் மகேஷ் திறமையற்றவர், அறிவு இருப்பவர்களை பள்ளிக் கல்வித்துறைக்கு அமைச்சர்களாக நியமிக்கலாம். அன்பில் மகேசை திரைத்துறை அமைச்சராக போடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது.
- 2,378 அறிவியல், 1,791 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 11,163 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
பள்ளிக்கல்வி இயக்குநர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
வரும் கல்வி ஆண்டில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் கலந்தாய்வு கடந்த 1-ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான மாவட்டத்துக்கு உட்பட்ட பொது மாறுதல் கலந்தாய்வு நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இந்த கலந்தாய்வில் 1,544 தமிழ், 2,260 ஆங்கிலம், 3,190 கணிதம், 2,378 அறிவியல், 1,791 சமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் என மொத்தம் 11,163 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
இவர்களில் 2,388 பட்டதாரி ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பள்ளிகளுக்கு மாறுதல் ஆணை பெற்றுச் சென்றுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பாஸ்போர்ட் தொலைந்து விட்டதால், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
விசாரணையின்போது சீமான் தரப்பில், நிலுவையில் உள்ள குற்ற வழக்குகளை சுட்டிக்காட்டி தனது மனு நிராகரிக்கப்படுகிறது. அரசியல் காரணத்திற்காக வழக்குப்பதிவு செய்துள்ளதால் விண்ணப்பத்தை நிராகரித்த உத்தரவை ரத்து செய்து பாஸ்போர்ட் தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், புதிய பாஸ்போர்ட் வழங்கக்கோரி சீமான் தாக்கல் செய்த மனு குறித்து மண்டல பாஸ்போர்ட் அதிகாரி, நீலாங்கரை காவல் ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 22-ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.
- அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
- பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* அ.தி.மு.க. உறுப்பினர் எண்ணிக்கை சரிவதால் பரிதாபத்திற்குரிய இ.பி.எஸ். தி.மு.க.வின் திட்டத்தை விமர்க்கிறார்.
* மகளிர் உரிமைத் தொகை தர வேண்டுமென இ.பி.எஸ். நினைத்திருந்தால் அவர் ஆட்சியில் இருந்தபோதே கொடுத்து இருக்கலாம்.
* தேர்தலுக்காக எதை வேண்டுமானாலும் சொல்வார் இ.பி.எஸ்., ஆனால் நாங்கள் சொல்வதை செய்வோம்.
* பா.ஜ.க.வின் சி டீமான விஜயின் த.வெ.க. கட்சி பற்றி நாங்கள் பேச விரும்பவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.






