என் மலர்
சென்னை
- சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
- பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.
சென்னை மாநகராட்சி தூய்மை பணிகளை தனியாருக்கு வழங்கியதை எதிர்த்து தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 6 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் நகரின் பல இடங்களில் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது.
இந்நிலையில், இன்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையின் முன்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம் நடத்தினர்.
ரிப்பன் மாளிகையின் முன்னால் போராடிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்களுக்கு அவசரமாக தண்ணீர் தேவைப்பட்ட நிலையில், பாடகி சின்மயி 500 லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் உடன் போராட்டக்களத்திற்கு வந்தார்.
தங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும், தங்களை நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்ற தூய்மை பணியாளர்களின் கோரிக்கைக்கு சின்மயி ஆதரவு தெரிவித்தார்
- தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் வீடு, அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
- ஆதாரங்கள் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை.
திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.
டாஸ்மாக்கில் நடந்ததாக கூறப்படும் ஆயிரம் கோடி ரூபாய் முறைகேட்டில் இவர்களுக்கு தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் குற்றம் சாட்டினர். சோதனையின்போது தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் வீடு, அலுவலகத்துக்கு 'சீல்' வைத்தனர். இதை எதிர்த்து இருவரும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் ஜுன் 20 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், டாஸ்மாக் வழக்கில் திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர்.
மேலும், சோதனை தொடர்பாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களில் எந்த ஆதாரமும் இல்லை. எந்த ஆதாரங்களும் இல்லாத நிலையில் சோதனை நடத்துவதற்கு அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்தனர். மேலும், கைப்பற்றிய ஆவணங்கள், லேப்டாப், செல்போன்களை திரும்ப ஒப்படைக்குமாறு அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர்.
இதைத்தொடர்ந்து ஆகாஷ் பாஸ்கரன், விக்ரம் ரவீந்திரன் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்த தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது.
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் தாக்கல் செய்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்யாத அமலாக்கத் துறைக்கு ரூ.30,000 அபராதம் விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
ஏற்கனவே 2 முறை அவகாசம் வழங்கிய பின்னரும் பதில் மனுத் தாக்கல் செய்யாதது சரியான நடவடிக்கை அல்ல என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமலாக்கத் துறைக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
- போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
- உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.9.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
சென்னை:
2025-2026-ம் நிதியாண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டமன்ற அறிவிப்பினை நிறைவேற்றிடும் வகையில் தமிழ் கடவுள் என்று போற்றப்படுகின்ற முருகப் பெருமான் வீற்றிருக்கும் அறுபடை வீடுகளான திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமி மலை, திருத்தணி, பழமுதிர்சோலை ஆகியவற்றிற்கு மூத்த குடிமக்கள், ஒரே முறையாக சென்று தரிசனம் செய்திடும் வகையில் கட்டணமில்லாமல் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட 2,000 பக்தர்கள் அழைத்து செல்லப்பட உள்ளனர்.
ஆன்மிகப் பயணம் செல்ல விரும்பும் பக்தர்கள் இந்து மதத்தை சார்ந்தவராகவும், 60 வயதிற்கு மேல் 70 வயதிற்குட்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருப்பதோடு, அதற்கான வருமான சான்றிதழை வட்டாட்சியரிடமிருந்து பெற்று இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி உள்ளதற்கான மருத்துவ சான்றுடன், ஆதார் நகல் இணைக்கப்பட வேண்டும்.
இந்த ஆன்மிகப் பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் 15.9.2025-க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அறுபடைவீடு ஆன்மிகப் பயணம் தொடர்பான விவரங்களுக்கு துறையின் இணையதளத்திலோ அல்லது 1800 425 1757 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம். ஆகவே, இந்த ஆன்மிகப் பயணத்தில் பங்கேற்க விரும்பும் தகுதி உடைய மூத்த குடிமக்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்து உள்ளார்.
- 2012 இல் புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார்.
- 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கார்த்திக் தொண்டைமான், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார்.
2012 ஆம் ஆண்டு புதுக்கோட்டை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு கார்த்திக் தொண்டைமான் வென்றார். அதன் பின்னர் 2016 மற்றும் 2021 தேர்தல்களில் புதுக்கோட்டை தொகுதியில் போட்டியிட்டு அவர் தோல்வியை தழுவினார்.
திமுகவில் இணைந்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய கார்த்திக் தொண்டைமான், "அதிமுக மதவாத சக்திகளுக்கு துணை போகிறது. அதிமுக போகும் போக்கே சரியில்லை. தமிழ்நாட்டில் மதவாத சக்திகள் தலைதூக்க கூடாது என்ற காரணத்திற்காக திமுகவில் இணைந்தேன்" என்று தெரிவித்தார்.
- தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும்.
- ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
தமிழகத்தில் 2,000 டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. டெலிவரி ஊழியர்கள் மானியம் பெறுவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
டெலிவரி ஊழியர்களுக்கு ரூ.20,000 மானியம்: முக்கிய அம்சங்கள்
தமிழ்நாடு அரசு, இணையவழி சேவைகளில் பணிபுரியும் கிக் தொழிலாளர்களுக்காக (gig workers) ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இதன் மூலம், டெலிவரி ஊழியர்கள் புதிய மின்சார ஸ்கூட்டர் (e-scooter) வாங்க ரூ.20,000 மானியம் பெறலாம். இந்த மானியத்திற்காக அரசு ரூ.4 கோடி நிதி ஒதுக்கியுள்ளது.
இந்த மானியத் திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
யாருக்கு மானியம்?
தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள டெலிவரி ஊழியர்களுக்கு இந்த மானியம் வழங்கப்படும். இது Zomato, Swiggy, Zepto, Amazon, Flipkart போன்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்குப் பொருந்தும்.
பயனாளிகளின் எண்ணிக்கை
ஆரம்பகட்டமாக, இந்தத் திட்டத்தின் கீழ் 2,000 டெலிவரி ஊழியர்கள் பயன்பெறுவார்கள்.
மானியம் எவ்வளவு?
ஒரு மின்சார ஸ்கூட்டர் வாங்க, தலா ரூ.20,000 மானியம் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிப்பது?
இந்த மானியத்தைப் பெற, தமிழ்நாடு இணையம் சார்ந்த தொழிலாளர்கள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் குறித்த கூடுதல் தகவல்களை நல வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnuwwb.tn.gov.in -ல் காணலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், அருகில் உள்ள இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.
- ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
- இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும்.
தமிழகத்தில் 2,000 உணவு டெலிவரி ஊழியர்கள் மின்சார இருசக்கர வாகனம் (e scooter) வாங்க தலா ரூ.20,000 மானியம் வழங்குவதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அமேசான், பிளிப்கார்ட், சொமட்டோ, மீசோ போன்ற ஆன்லைன் சார்ந்த நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க ரூ.20 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது.
நலவாரியத்தில் பதிவு பெற்ற டெலிவரி ஓட்டுநர்கள் tnuwwb.tn.gov.in என்ற இணைய தளத்தில் பதிவு செய்து மானியம் பெறலாம்.
இத்திட்டத்தின் மூலம் டெலிவரி ஊழியர்களுக்கு வேலையில் மேலும் எளிமையாக செயல்பட உதவும். டெலிவரி ஊழியர்களின் வாழ்க்கைத் தரம் மேம்படும்.
- முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
- ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சென்னை:
பொதுத்துறை வங்கிகளில் காலியாக உள்ள 10,277 கிளர்க் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை IBPS வெளியிட்டுள்ளது. 20 வயது முதல் 28 வயதுக்குள் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி வாய்ந்தவர்கள். தேர்வு முறையில் முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி : Customer Service Associates (Clerk)
பணியிடங்கள்: 10,277. தமிழ்நாட்டில் 894, புதுச்சேரிக்கு 19 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஊதியம்: ரூ. 24,050 - 64,480
தகுதி: ஏதாவதொரு பாடப்பிரிவில் இளநிலைப்பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 21
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம்: ibps.in
தேர்வு செய்யப்படும் முறை: இந்த தேர்வு இரண்டு கட்டங்களாக நடைபெறும். முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு. இரண்டு தேர்வுகளும் ஆன்லைனில் நடத்தப்படும். முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கும், முதன்மை தேர்வு 200 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.
மேலும் தகவலுக்கு IBPS என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
- காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
- மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே!
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
திருப்பூர் மாவட்டத்தில் குடும்பத் தகராறை விசாரிக்கச் சென்ற எஸ்.ஐ. சண்முகவேல் படுகொலை செய்யப்பட்டதாகவும், கோவை காவல் நிலையத்தில் எஸ்.ஐ. அறையில் ஒருவர் தூக்கிட்ட நிலையில் உயிரிழப்பு எனவும் செய்திகள் வருகின்றன.
காவல் நிலையத்தில் கூட இல்லாத சட்டம் ஒழுங்கிற்கு என்ன பதில் வைத்துள்ளார் பொம்மை முதல்வர்?
விசாரிக்க செல்லும் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை என்பதையும், காவல் நிலையத்திலேயே ஒருவர் தூக்கிட்டுக் கொள்ளும் அளவிற்கு அலட்சியமாக இருந்தது என்பதையும் எப்படி எடுத்துக் கொள்வது?
மு.க.ஸ்டாலின் செய்யும் அத்தனை அரசியலும் இந்த சீர்கெட்ட சட்டம் ஒழுங்கைப் பற்றி யாரும் பேசக் கூடாது என்பதற்கான Diversion Tactic மட்டுமே!
ஆனால், மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு தேவை பாதுகாப்பான தமிழகம்! மக்களைக் காக்க, தமிழகத்தை மீட்க ஒரே வழி, இந்த கையாலாகாத விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதே!
மேற்கூறிய வழக்குகளில் முறையான விசாரணை நடத்திடவும், குற்றவாளிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.
- என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த வளர்ச்சியை காணிக்கை ஆக்குகிறேன்.
- 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார். உதவிப்பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வானோருக்கு நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* இளைஞர்கள் தான் தமிழ் சமூகத்தின் அடித்தளமாக உள்ளனர்.
* திராவிட மாடல் அரசு என்பது இளைஞர்களுக்கான அரசு.
* தமிழகத்தின் வளர்ச்சி என்பது அனைத்து துறை கூட்டு முயற்சியால் கிடைத்துள்ளது. அனைவருக்கும் நன்றி.
* என்னை நம்பி பொறுப்பை ஒப்படைத்த தமிழக மக்களுக்கு இந்த வளர்ச்சியை காணிக்கை ஆக்குகிறேன்.
* இது சாதாரண வெற்றியல்ல, நெருக்கடி, அவதூறுகளுக்கு இடையே நாம் அடைந்த சாதனை.
* தேர்வாணையம், பொதுத்துறைகள் மூலமாக 1.35 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
* நான் முதல்வன் திட்டத்தின் மூலம் 89 இளைஞர்கள் மத்திய அரசில் முக்கிய பணியில் உள்ளனர்.
* கல்வி கொடுத்தால் மட்டும் போதாது, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் நோக்கிலும் திட்டமிட்டு செயலாற்றுகிறோம்.
* 4 ஆண்டுகளில் 6.41 லட்சம் பேர் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.
* நகராட்சி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
* நான் முதல்வன் திட்டத்தில் 3 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கும் வேலைவாய்ப்பு வழங்கி உள்ளோம்.
* தொழிலாளர் நலத்துறை வேலைவாய்ப்பு முகாம் மூலம் 2 லட்சத்திற்கு மேற்பட்டோருக்கு விளையாட்டு துறை மூலம் 84 பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
* அமைதியான சூழல், சிறப்பான சட்டம் ஒழுங்கு, திறமையான இளைஞர்கள் காரணமாக நாட்டில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
- நாட்டில் எந்த பெரிய ஒரு மாநிலமும் பெறாத வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2,538 இளைஞர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கினார். உதவிப்பொறியாளர், நகரமைப்பு அலுவலர், இளநிலை பொறியாளர்கள் உள்ளிட்ட பணிகளுக்கு தேர்வானோருக்கு நியமன ஆணைகளை வழங்கி முதலமைச்சர் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக பொருளாதாரம் 11.19 சதவீதமாக உயர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை பகிர்கிறேன்.
* தமிழகத்தின் பொருளாதாரம் இரட்டை இலக்கமாக வளர்ந்துள்ளது என மத்திய அரசு கூறி உள்ளது.
* ஏற்கனவே கலைஞர் ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி இரட்டை இலக்கமாக இருந்தது.
* தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சி பெரும் உச்சத்தை தொட்டுள்ளது.
* திராவிட மாடல் ஆட்சியில் தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி 11.19 விழுக்காடாக அதிகரித்துள்ளது.
* பட்ஜெட்டில் நாம் கணித்ததை விட 2.2 விழுக்காடு அதிகமாக தமிழக பொருளாதார வளர்ச்சியை எட்டி உள்ளோம்.
* 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தி.மு.க. ஆட்சியில் தான் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை தமிழகம் எட்டி உள்ளது.
* இந்தியாவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக தமிழகம் உள்ளது.
* தமிழக மக்களுக்கு வெற்றி செய்தியை காணிக்கையாக்குகிறேன்.
* தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி தான் நேற்று இரவிலிருந்து talk of thd town, talk of the nation ஆக உள்ளது.
* நாட்டில் எந்த பெரிய ஒரு மாநிலமும் பெறாத வளர்ச்சியை தமிழகம் அடைந்துள்ளது.
* இன்னும் அதிகமான உயரத்தை அடைவதற்கான பயணத்தை தொடர்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது.
- வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமின் மனுக்களை பரிசிலீக்க வேண்டும்.
சென்னை :
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். இவர் கடந்த ஆண்டு ஜூலை 5-ம் தேதி தனது வீட்டின் அருகே வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 26 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி 17 பேர் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், வி.லட்சுமி நாராயணன் அமர்வில் விசாரிக்கப்பட்டது.
அப்போது காவல் துறை சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் பி.குமரேசன் மற்றும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ் ஆஜராகி, சட்டம் ஒழுங்கு மற்றும் பொது அமைதியை கருத்தில்கொண்டு 26 பேரும் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டதாக கூறினர்.
மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், கைது செய்யப்பட்டதற்கும், குண்டர் சட்டத்தில் அடைப்பதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கும் இடையேயான கால தாமதத்தை கருத்தில் கொண்டு குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து, குண்டர் சட்டத்தில் கைது செய்த தகவலை தெரிவித்தல், ஆவணங்களை குற்றவாளிகளுக்கு தருவது, உத்தரவுக்கான அனுமதி ஆகியவற்றில் காலதாமதம் மற்றும் குளறுபடிகள் குறித்து காவல் துறையிடம் நீதிபதிகள் சரமாரி கேள்வி எழுப்பினர். மேலும், காவல் துறை தரப்பில் ஆவணங்கள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். இதனையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
இந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு இன்று அளிக்கப்பட்டது. தீர்ப்பில் கைது செய்யப்பட்டவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்க பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள், குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டதால் அவர்களுக்கு ஜாமின் வழங்கக்கூடாது. வழக்கின் தீவிரத்தை கருத்தில் கொண்டே ஜாமின் மனுக்களை பரிசிலீக்க வேண்டும் என்றனர்.
- தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
- தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த பின்னர் தி.மு.க. கூட்டணி தலைவர்கள் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:
* சாதி ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என வலியுறுத்தினோம்.
* தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவை குறித்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தோம்.
* தமிழகத்தில் சாதி ஆணவ கொலைகள் அதிகரித்துள்ளது.
* தனிச்சட்டம் இயற்ற வேண்டியதன் தேவையை அரசும் உணர்ந்திருக்கிறது.
* சாதி ஆணவ படுகொலைகள் அதிகரிப்பது கவலைக்குரியது.
* சாதி வெறியிலிருந்து மக்கள் விடுபட்டு வரவேண்டியது அவசியமாகிறது.
* ஆணவ படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் தேவை என்பதை பல அமைப்புகள் வலியுறுத்துகின்றன.
* தனிச்சட்டம் வேண்டும் என தேசிய பெண்கள் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.
* நீதிபதி ராமசுப்ரமணியம் தனிச்சட்டம் வேண்டும் என்பதை தீர்ப்பாகவே வழங்கி இருக்கிறார்.
* சாதி ஆணவ கொலை என்பது ஒட்டுமொத்த சமூகத்திற்கான பிரச்சனை.
* ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இத்தகைய சட்டம் நடைமுறையில் உள்ளது.
* தனிச்சட்டம் இயற்றினால் ஓபிசி மக்கள் வாக்களிக்க மாட்டார்கள் என்பது மாயை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.






