என் மலர்
சென்னை
- குளித்தலை சிவராமன் தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த அதே தூய அன்பை என் மீதும் வெளிப்படுத்தி வந்தார்.
- தி.மு.கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 13 முறை சிறை சென்றுள்ளார்.
சென்னை:
தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க.வின் மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினருமான குளித்தலை அ.சிவராமன் மறைந்தார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.இளமைக்காலம் முதலே கழகத்தின் மீது ஆர்வம் கொண்ட அ. சிவராமன் 1971 முதல் குளித்தலை நகரச் செயலாளராக 18 ஆண்டுகளும், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத் தொண்டரணி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.
குளித்தலையில் தலைவர் கருணாநிதி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆனதையொட்டி, அன்றைய திருச்சி மாவட்டக் கழகச் செயலாளர் அன்பிலார் தலைமையில், குளித்தலை காவிரி ஆற்றங்கரையில் வெள்ளி விழா நடத்தி 60 பவுன் தங்க நாணயங்களை நகரச் செயலாளராக வழங்கிய தீவிர கலைஞர் பற்றாளர்தான் சிவராமன். தலைவர் கலைஞர் மீது கொண்டிருந்த அதே தூய அன்பை என் மீதும் வெளிப்படுத்தி வந்தார்.
தி.மு.கழகம் அறிவித்த பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு 13 முறை சிறை சென்றுள்ளார். 1989 சட்டமன்றத் தேர்தலில் குளித்தலை தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினையும் பெற்றார்.
குளித்தலை சிவராமன் நீண்டகாலமாகத் தடம் மாறாமல் பயணித்து வந்ததற்கான அங்கீகாரமாக, இந்த ஆண்டு கரூரில் நடைபெறவுள்ள கழக முப்பெரும் விழாவில், 'பாவேந்தர் பாரதிதாசன்' விருது பெறத் தேர்வாகியிருந்தார். நேரில் கண்டு அவருக்கு விருதினை வழங்கி, அவர் கரம் பற்றிக் கொள்ள ஆவலுடன் நான் காத்திருந்த நிலையில், நம்மையெல்லாம் துயரில் ஆழ்த்தி சிவராமன் மறைந்துவிட்டார். அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும், பொதுமக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய அவர் ஆடு மாடுகளின் மாநாட்டையும் நடத்தினார்.
- மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னை:
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆடு, மாடுகள் வளர்ப்பு, இயற்கை விவசாயம் உள்ளிட்டவை பற்றி எப்போதுமே அக்கறையோடு பேசி வருபவர் ஆவார்.
அந்த வகையில் பனை மரத்தில் ஏறி கள் இறக்கும் போராட்டத்தை நடத்திய அவர் ஆடு மாடுகளின் மாநாட்டையும் நடத்தினார்.
இந்த நிலையில் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கூட்டு சாலையில் சீமான் நாளை காலை 10 மணிக்கு மரங்களுடன் பேசுகிறார். அங்குள்ள மனிதநேய பூங்கா வெற்றி தோட்டத்தில் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

'மரங்களோடு பேசுவோம், மக்களுக்காக பேசுவோம்' என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் சீமானுடன் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளும் திரளாக பங்கேற்கிறார்கள்.
இந்த மாநாட்டையொட்டி சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாநாடு நடைபெறும் இடத்திற்கு சென்று தோட்டத்தில் உள்ள மரங்களை முத்தமிட்டு மகிழ்ந்தார். அப்போது ஒரு மரத்தின் கிளையை பிடித்த படி என்ன... உனக்கு தண்ணி ஊற்றினார்களா? சாப்பாடு போட்டார்களா? என்று கேட்டு பேசுவார். அந்த வீடியோக்களையும் நாம் தமிழர் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.
- பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
- நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
சென்னை நீலாங்கரையில் தி.மு.க. எம்.பி. என்.ஆர்.இளங்கோ இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார். திருமணத்தை நடத்தி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் மீதும், தி.மு.க. மீதும், என் மீதும் பற்று கொண்டவர் என்.ஆர்.இளங்கோ.
* என்.ஆர்.இளங்கோ அரசு வழக்கறிஞராக பணியாற்ற வாய்ப்பு தந்தவர் கலைஞர்.
* தேர்தல் காலத்தில் வழக்கறிஞர் அணியை தயார் நிலையில் வைத்திருப்பார் என்.ஆர்.இளங்கோ.
* பீகாரில் மேற்கொள்ளப்படும் சிறப்பு வாக்காளர் திருத்தத்தால் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
* வாக்குத்திருட்டு தொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
* பீகார் போன்ற நிலை தமிழகத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.
* நாளைய தினம் ஜெர்மனி, இங்கிலாந்து ஒரு வார கால பயணம் செல்கிறேன்.
* இதுவரை நான் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களால் தமிழ்நாட்டிற்கு 10 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
* ஜெர்மனி, இங்கிலாந்து பயணத்தின் நோக்கம் குறித்து நாளை தெரிவிக்கிறேன்.
* ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படம் திறக்கப்பட உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்களால் இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது.
- 2026 சட்டசபை தேர்தலில் சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும்.
சென்னை:
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது இல்லத்தில் விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை அமைப்பாளர் ராம சரவணன் மகள் சாய்ஸ்ரீ-ஜீனத் பிரியன் திருமணத்தை நடத்தி வைத்து பேசியதாவது:-
நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு 4 ஆண்டுகளை கடந்து இன்றைக்கு சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த 4 ஆண்டுகளில் எண்ணற்ற திட்டங்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டு மக்களுக்காக கொடுத்துக் கொண்டிருக்கிறார்.
நம்முடைய அரசின் பல்வேறு திட்டங்களால் இன்றைக்கு 11.20 சதவீதம் வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்களிலேயே தெரிவித்து இருக்கிறார்கள். ஆகவே இந்த திராவிட மாடல் அரசுக்கும், நம் முதலமைச்சருக்கும் நம் அத்தனை பேரும் முழு ஆதரவை தர வேண்டும். நான் உங்களிடம் கேட்ப தெல்லாம் அடுத்த 6 மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வர இருக்கிறது.
நாம் அனைவரும் ஒரு உறுதியை எடுத்துக் கொள்ள வேண்டும். அடுத்து நம் முதலமைச்சர் 2-வது முறையாக பதவியில் உட்கார வேண்டும் என்றால், நம் திராவிட முன்னேற்றக் கழகம் 7-வது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் என்றால், நீங்கள் அத்தனை பேரும், உற்றார், உறவினர்கள், நண்பர்கள், பக்கத்து வீட்டார்கள், தேர்தல் பிரசாரத்தை, அரசின் சாதனைகளை, முதலமைச்சரின் பணிகளை, திட்டங்களை மக்களிடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
2026 சட்டசபை தேர்தலில் சென்ற முறை பெற்ற வெற்றியை விட மிகப்பெரிய வெற்றியை நாம் பெற்றாக வேண்டும். தலைவர் 200 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று இலக்கு கொடுத்து இருக்கிறார்.
நாம் அனைவரும் களத்தில் இறங்கி, முழுமையாக பணியாற்றினால் 200 இல்லை 200-க்கும் அதிகமான தொகுதிகளில் தி.மு.க. வெற்றி பெறும். அதற்கு நாம் அத்தனை பேரும் இந்த திருமண நிகழ்வில் உறுதி ஏற்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
- நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது.
- வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,440-க்கும், செவ்வாய்கிழமை சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,840-க்கும், புதன்கிழமை சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,120-க்கும், நேற்று சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,240-க்கும் விற்பனையானது
இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,470-க்கும் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ. 75,760-க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 131 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 31ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
28-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,240
27-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.75,120
26-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.74,840
25-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,440
24-08-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 74,520
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
28-08-2025- ஒரு கிராம் ரூ.130
27-08-2025- ஒரு கிராம் ரூ.130
26-08-2025- ஒரு கிராம் ரூ.130
25-08-2025- ஒரு கிராம் ரூ.131
24-08-2025- ஒரு கிராம் ரூ.130
- பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
- 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது.
சென்னை:
நாடு முழுவதும் வந்தே பாரத் ரெயில்கள் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அதிவேக பயணம், விமான சேவைக்கு இணையான கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வந்தே பாரத் ரெயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. பெட்டிகள் குறைவாக இருப்பதால் டிக்கெட்டுகள் கிடைப்பதில்லை என பயணிகளிடம் இருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.
இந்த நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு 7 வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளுடன் வந்தே பாரத் ரெயில்களை இயக்க ரெயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக, ரெயில்வே வாரியத்தின் தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயல் இயக்குனர் தீலிப்குமார் கூறும்போது, "தற்போது, மங்களூரு சென்ட்ரல்-திருவனந்தபுரம் சென்ட்ரல், செகந்திராபாத்-திருப்பதி,
சென்னை எழும்பூர்-நெல்லை ஆகிய 3 வழித்தடங்களில் 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 20 பெட்டிகளாகவும், மீதமுள்ள மதுரை-பெங்களூரு கான்ட், தியோகர்-வாரணாசி, ஹவுரா-ரூர்கேலா மற்றும் இந்தூர்-நாக்பூர் ஆகிய 4 வழித்தடங்களில் 8 பெட்டிகளுடன் இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் 16 பெட்டிகளாகவும் அதிகரிக்கப்படும்" என்றார்.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
- கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, முத்து நகர்.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (30.08.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
போரூர்: ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், லலிதா நகர், ராஜேஸ்வரி அவென்யூ, முத்து நகர், மேக்ஸ்வொர்த் நகர், பங்களா தூபி, மாதா நகர், பொன்னியம்மன் கோவில் தெரு.
ஈஞ்சம்பாக்கம்: பி.ஜே.தாமஸ் அவென்யூ, அண்ணா என்கிளேவ், ஈசிஆர் மெயின் ரோடு, சாய்பாபா கோவில் தெரு, ஆலிவ் பீச் ஹனுமான் காலனி, கிளாசிக் என்கிளேவ், ராஜன் நகர், செல்வா நகர், பிராத்தனா பார்க் அவென்யூ, ராயல் என்கிளேவ், 1, 2வது அவென்யூ, வெட்டுவாங்கேணி, ஸ்வஸ்திக் அவென்யூ, குப்பம் நகர், சரவண நகர், செங்குன்றம் கார்டன்.
கீழ்ப்பாக்கம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, சாஸ்திரி நகர், புல்லா ரெட்டி புரம், ஓசங்குளம், நியூ பூபதி நகர், பிளவர்ஸ் சாலை, தம்புசாமி தெரு, மற்றும் கெங்குரெட்டி சாலை.
கிண்டி: இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், ஈக்காட்டுதாங்கல், காந்தி நகர், பூந்தமல்லி சாலை, ஜே.என்.சாலை, அம்பாள் நகர், லேபர் காலனி, பிள்ளையார் கோவில் 1 முதல் 5வது தெரு, ஏ முதல் டி பிளாக், பூமகள் தெரு, சௌத் கட்டம், மவுண்ட் ரோடு, பாலாஜி நகர், பாரதியார் தெரு, தனகோட்டி ராஜா தெரு, அச்சுதன் நகர்.
ஐடி காரிடார்: பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் கார்டன், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், இ.காந்தி நகர், பால்ராஜ் நகர், பெரியார் சாலை, கோவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கஜூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர் மற்றும் ரூகி வளாகம்.
பாரிவாக்கம்: கண்ணப்பாளையம், ஆயில்சேரி, பிடாரிதாங்கல், பனவேடு தோட்டம், கொளப்பஞ்சேரி.
திருவேற்காடு: பருத்திப்பட்டு, கோலடி, பெருமாளாகரம், வேலப்பஞ்சாவடி, மாதர்வேடு, கூட்டுறவு நகர், சண்முகா நகர், புளியம்பேடு, பி.எச்.ரோடு, நூம்பல், பரிவாக்கம், கண்ணபாளையம், காடுவெட்டி, வீரராகவபுரம், குப்புசாமி நகர், பாரதி நகர்.
- மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
- முதலமைச்சரால் வர முடியாததால் துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்ததாக தாகவல்.
பீகாருக்கு சென்று திரும்பிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெறும் நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்ததாரர்கள் கூட்டமைப்பு மாநில மாநாட்டில் முதல்வர் பங்கேற்கவில்லை என்று எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் வர முடியாததால் துணை முதலமைச்சர் உதயநிதியை அனுப்பி வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
- திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் வெளியீடு.
- விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
2023ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி தமிழக பாஜ தலைவராக இருந்த அண்ணாமலை, திமுக பைல்ஸ் என்ற பெயரில் திமுக பொருளாளர் டிஆர்பாலு உள்ளிட்டோரின் சொத்துக்கள் குறித்த பட்டியலை வெளியிட்டார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணாமலையிடம் ரூ.100 கோடி இழப்பு கேட்டு சென்னை சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு இன்று டி.ஆர்.பாலு ஆஜரானார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு டி.ஆர்.பாலு கூறுகையில்," 21 நிறுவனங்களுக்கும் எனக்கும் தொடர்பு என
அண்ணாமலை சொல்லியிருந்தார். அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெரிவித்தேன்.
ஒன்றரை மணி நேரம் நேரில் ஆஜராகி அத்தனை விளக்கமும் அளித்தேன். வழக்கின் அடுத்த விசாரணை செப்டம்பர் 22ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், அண்ணாமலை," 2004ம் ஆண்டு நீங்கள் நிறைய ஊழல் செய்ததால் தான் 2009ல் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை" கூறியதாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு கோபமடைந்த டி.ஆர்.பாலு, "சரியான நேரத்தில் பதில் சொல்கிறேன். அண்ணாமலை சொல்லும் போது என்னிடம் சொல்வார். அப்போது நான் பதில் சொல்லிக்கிறேன்" என்றார்.
மேலும், ரூ.10 ஆயிரம் கோடி குறித்து நிருபர் எழுப்பிய கேள்விக்கு, ' பதில் சொல்ல முடியாது போய்யா' எனக்கூறிவிட்டு சென்றார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
- 70 பதவிகளுக்கு நடத்தப்பட்ட குரூப் 1 தேர்வு முடிவுகள் வெளியானது.
- முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 பதவியில் காலியாக உள்ள 70 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த ஏப்ரல் 1-ந்தேதி வெளியிடப்பட்டது.
இதில், துணை கலெக்டர் பதவிக்கு 28 இடங்கள், போலீஸ் டி.எஸ்.பி. பதவிக்கு 7 இடங்கள், வணிகவரி உதவி ஆணையர் பதவிக்கு 19 இடங்கள், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பதவிக்கு 7 இடங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி பதவிக்கு 3 இடங்கள், தொழிலாளர் நல உதவி ஆணையர் பதவிக்கு 6 இடங்கள் ஆகிய 70 பணியிடங்கள் அடங்கும். அதோடு உதவி வன பாதுகாவலர் பதவிக்கு 2 காலியிடங்களுக்கான குரூப் 1 ஏ அறிவிப்பும் வெளியிடப்பட்டது.
இந்த தேர்வை எழுத ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு விண்ணப்பித்தனர். குரூப் 1, குரூப் 1 ஏ தேர்வுகளை எழுத மொத்தம் 2 லட்சத்து 49 ஆயிரத்து 296 பேர் விண்ணப்பித்தனர். குரூப் 1 தேர்வை எழுத 2 லட்சத்து 27 ஆயிரத்து 982 பேரும், குரூப் 1 ஏ தேர்வை எழுத 6,465 பேரும் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், கடந்த ஜூன் 15ம் தேதி நடந்த குரூப்-1 முதல் நிலை தேர்வுக்கான முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
இதைதொடர்ந்து, குரூப் 1 முதன்மை தேர்வு எழுத தகுதி பெற்றவர்கள் செப்டம்பர் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியான நிலையில் முதன்மை தேர்வு டிசம்பர் 1 முதல் 4ம் தேதி வரை சென்னையில் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
- நல்லகண்ணுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று மருத்துவமனைக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிலையில், நல்லகண்ணு விரைவில் நலம்பெற விழைகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
உடல்நலிவுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகைசால் தமிழர் தோழர் நல்லகண்ணு அய்யா அவர்களது உடல்நலன் குறித்து தோழர் முத்தரசன் அவர்களிடமும் - மாண்புமிகு அமைச்சர் சுப்பிரமணியன் அவர்களிடமும் தொடர்ந்து நலன் விசாரித்து வருகிறேன். நல்லகண்ணு அய்யா அவர்கள் விரைந்து நலம்பெற விழைகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது.
- நல்லகண்ணுவுக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை:
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மருத்துவ குழு பரிந்துரையின் படி அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. 48 மணி நேரத்தில் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டதால் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவு நல்லகண்ணுவுக்கு மீண்டும் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. உடனடியாக அவருக்கு செயற்கை சுவாசம் கொடுக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.
தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆஸ்பத்திரிக்கு சென்று நல்லகண்ணு உடல்நலம் குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும் போது, நல்லகண்ணுவுக்கு 2 நாட்கள் உடல் நிலை சீராக இருந்தது. நேற்று இரவு மீண்டும் வெண்டிலேட்டர் ( செயற்கை சுவாசம்) உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது என தெரிவித்தார்.






