search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pasumpon Muthuramalinga Thevar"

    • பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.
    • வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுகிறது.

    மதுரை:

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 30-ந்தேதி குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி, முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா பசும்பொன் தேவருக்கு ரூ.3 கோடி மதிப்பில் 13 கிலோ எடை கொண்ட தங்க கவசத்தை அ.தி.மு.க. சார்பில் வழங்கினார். விழா முடிந்த பிறகு இந்த கவசம் மதுரையில் உள்ள ஒரு வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இதனை வருடந்தோறும் அ.தி.மு.க. பொருளாளர் மூலம் பெற்று தேவர் ஜெயந்தி விழாவின்போது பசும்பொன்னுக்கு கொண்டு செல்லப்படும். அதன்படி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த ஓ.பன்னீர் செல்வம் அதனை பெற்று தேவர் குருபூஜை விழாக் குழுவினரிடம் வழங்கி வந்தார்.

    ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஓ.பி.எஸ்., எடப்பாடி பழனிசாமி அணியினரிடையே ஏற்பட்ட பிரிவு காரணமாக கோர்ட்டு உத்தரவுப்படி தங்க கவசம் கடந்த ஆண்டு ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி பெற்று விழாக்குழுவிடம் வழங்கினார். தற்போது அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வாகி கட்சிக்கும் தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

    இதையடுத்து தங்களிடம் தங்க கவசத்தை வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அதன்படி பசும்பொன் தேவருக்கு அணிவிக்கப்படும் தங்க கவசத்தை திண்டுக்கல் சீனிவாசனிடம் ஒப்படைக்க மதுரை ஐகோர்ட் உத்தரவிட்டது.

    வருகிற 30-ந்தேதி தேவர் குருபூஜை விழா நடைபெறுவதை முன்னிட்டு இன்று மதுரை அண்ணாநகரில் உள்ள பேங்க் ஆப் இந்தியாவில் இருந்து தங்க கவசம் எடுத்து அ.தி.மு.க. பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசனிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர் துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் துப்பாக்கி ஏந்திய பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தங்க கவசம் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னுக்கு எடுத்து செல்லப்பட்டது.

    • முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, அரசு விழாவாக வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.
    • பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.

    சென்னை:

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகேயுள்ள பசும்பொன் கிராமத்தில், முத்துராமலிங்க தேவரின் ஜெயந்தி விழா மற்றும் குருபூஜை, அரசு விழாவாக வருகிற 28-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள், முக்கிய பிரபலங்கள் கலந்து கொண்டு முத்துராமலிங்க தேவருக்கு மரியாதை செலுத்துவது வழக்கம். தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பா.ஜனதா சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் வருகிற 30-ந்தேதி பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜை விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் இருந்து 29-ந் தேதி காலையில் விமானம் மூலம் மதுரை சென்றடைகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
    • முதலமைச்சர் பசும்பொன் செல்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    சென்னை:

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் பிறந்தநாள் ஜெயந்தி விழா ஆண்டு தோறும் அக்டோபர் 30-ந் தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் உள்ள அவரது நினைவிடத்தில் நடைபெறும்.

    தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவார்கள்.

    அந்த வகையில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவில் பங்கேற்க வருகிற 30-ந்தேதி பசும்பொன் செல்கிறார்.

    இதற்காக சென்னையில் இருந்து 29-ந் தேதி காலையில் விமானம் மூலம் மதுரை சென்றடைகிறார். மதுரையில் அன்று இரவு தங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 30-ந்தேதி காலையில் மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார்.

    அதன் பிறகு காரில் பசும்பொன் கிராமம் சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்துகிறார். அவருடன் அமைச்சர்களும் மரியாதை செலுத்துகின்றனர்.

    இந்த நிகழ்ச்சி முடிந்ததும் மதுரை வந்து 30-ந்தேதி மதியம் 2.45 மணிக்கு சென்னை திரும்புகிறார்.

    முதலமைச்சர் பசும்பொன் செல்வதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    ×