என் மலர்
சென்னை
- விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது.
- வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
சென்னை:
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விலை என்ற போக்கில் தங்கம் விலை இருக்கிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் ஏறுவதும், இறங்குவதுமாக தங்கம் இருந்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களாக தங்கம் விலை உயர்ந்த வண்ணமே காணப்படுகிறது. இதுவரை இல்லாத வகையில் வரலாற்றில் புதிய உச்சத்தில் தங்கம் விற்பனையாவதால் பொதுமக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்கிழமைகளில் உச்சத்தில் விற்பனையான தங்கம் விலை நேற்று விலை மாற்றமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், இரண்டாவது நாளாக இன்றும் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படவில்லை. ஒரு கிராம் தங்கம் ரூ.10,150-க்கும் சவரன் ரூ.81,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி 140 ரூபாய்க்கும் பார் வெள்ளி ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
09-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 81,200
08-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,480
07-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
06-09-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 80,040
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-09-2025- ஒரு கிராம் ரூ.140
09-09-2025- ஒரு கிராம் ரூ.140
08-09-2025- ஒரு கிராம் ரூ.140
07-09-2025- ஒரு கிராம் ரூ.138
06-09-2025- ஒரு கிராம் ரூ.138
- முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர்.
- நயினார் நாகேந்திரனுடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர்.
தமிழகத்தில் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்துள்ளது. இதனிடையே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆகியோர் கூட்டணியில் இருந்து விலகி உள்ளனர்.
கூட்டணியில் இருந்து விலகிய டி.டி.வி.தினகரன், பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு கூட்டணியை கையாளத் தெரியவில்லை என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், அமித் ஷா - செங்கோட்டையன் சந்திப்பு குறித்து தனக்கு தெரியாது என்றும், அமித்ஷா- செங்கோட்டையன் சந்திப்பால் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை என்றும் கூறி இருந்தார்.
இத்தகைய பரபரப்பான அரசியல் சூழலில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று டெல்லி செல்கிறார். அவருடன் பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர்.
சி.பி.ராதாகிருஷ்ணனின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்பதற்காக நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. மூத்த தலைவர்களும் டெல்லி செல்கின்றனர். டெல்லி செல்லும் பா.ஜ.க. நிர்வாகிகளுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆலோசனை நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
- வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
- இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் சம்பந்தியும், சபரீசனின் தந்தையுமான வேதமூர்த்தி உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 81.
தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் மகள் செந்தாமரையின் கணவர் சபரீசன். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் சபரீசன்- செந்தாமரை தம்பதியினர் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சபரீசனின் தந்தை வேதமூர்த்தி உடல்நலக்குறைவு காரணமாக ஓஎம்ஆரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நள்ளிரவில் காலமானார்.
வேதமூர்த்தி உடல் அஞ்சலிக்காக கொட்டிவாக்கம் ஏஜிஎஸ் காலனியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இறுதி சடங்கு நாளை நடைபெற உள்ளது. அண்மையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அண்ணன் மு.க. முத்து உடல்நலக்குறைவால் மரணமடைந்தார்.
- இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்று கொள்ளலாம்.
- www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் 60 வயது முதல் 70 வயதிற்குட்பட்ட பக்தர்கள் கட்டணமில்லா பயணமாக ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவத் கோவில்களுக்கும், அறுபடை வீடுகளுக்கும், ராமேசுவரத்திலிருந்து காசிக்கும் அழைத்துச் செல்லப்பட்டு வருகின்றனர். மேலும் மானசரோவர் மற்றும் முக்திநாத் போன்ற புனித தலங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று வருபவர்களுக்கு வழங்கப்படும் அரசு மானியமும் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆன்மிகப் பயணங்களின் மூலம் இதுவரை 7,998 பக்தர்கள் பயன் பெற்றுள்ளனர்.
அந்தவகையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலிருந்து காசி விஸ்வநாதசாமி கோவிலுக்கு இவ்வாண்டு ரூ.1.50 கோடி அரசு நிதியில் 600 பக்தர்கள் ஆன்மிகப் பயணமாக அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதற்காக இந்து சமய அறநிலையத்துறையின் 20 இணை ஆணையர் மண்டலங்களிலிருந்து மண்டலத்திற்கு 30 பக்தர்கள் வீதம் 600 நபர்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இந்த ஆன்மீக பயணத்திற்கான விண்ணப்ப படிவங்களை அந்தந்த மண்டல இணை ஆணையர் அலுவலகங்களில் நேரில் பெற்றோ அல்லது www.hrce.tn.gov.in என்ற இந்து சமய அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்தோ விண்ணப்பிக்கலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய சான்றுகளுடன் இணைத்து சம்பந்தப்பட்ட மண்டல இணை ஆணையர் அலுவலகத்தில் அக்டோபர் 22-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று அமைச்சர் சேகர்பாபு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (12.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,
பாலவாக்கம்: காமராஜர் சாலை மற்றும் மெயின் ரோடு, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 முதல் 7வது தெரு.
பூந்தமல்லி: வரதராஜபுரம், பனிமலர் மருத்துவக் கல்லூரி, பெங்களூரு டிரங்க் ரோடு, பனிமலர் பொறியியல் கல்லூரி, நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், அகரமேல்.
திருமங்கலம்: மெட்ரோ சோன், சத்திய சாய் நகர், பாடிகுப்பம் மெயின் ரோடு, டிஎன்எச்பி குவார்ட்டர்ஸ், பழைய பென், கோல்டன் ஜூபிலி பிளாட்ஸ், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், விஜிஎன், அம்பேத்கர் நகர், மேத்தா ராயல் பார்க், ரெயில் நகர், மாட வீதிகள், சிவன் கோவில் தெரு, சீனிவாசன் நகர், 100 அடி சாலை, நியூ காலனி மற்றும் மேட்டுக்குளம்.
எழும்பூர்: ஈவிகே சம்பத் சாலை, ஜெர்மையா சாலை, ரிதர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் லேன், பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஏ, மெரினா டவர், வெனல்ஸ் சாலை, பிசிஓ சாலை, விபி ஹைல், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ் சாலை, பார்க் டவுன், வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பிரகின்பாட் சாலை, எச். சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பேரக்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கரை வீர பத்திரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஜெரேமியா சாலை.
- பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.
- பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது.
- மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் ‘மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
சென்னை:
பள்ளிகளில் அமைதியான சூழலை ஏற்படுத்தவும், மாணவர்கள் ஒழுக்கத்தில் சிறந்து விளங்கவும் மேற்கொள்ளப்பட வேண்டிய சில வழிமுறைகள் குறித்து, பள்ளிகளுக்கு, கல்வித்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:-
சாதி அல்லது வகுப்புவாத எண்ணங்களை மாணவர்களிடையே ஏற்படுத்த முயற்சிப்பதாக ஆசிரியர் மீது பெறப்படும் புகார்கள் குறித்து முதன்மைக்கல்வி அலுவலர் உடனடியாக விசாரணை மேற்கொள்வதோடு, சம்பந்தப்பட்ட ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும்.
மாணவர்களுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கக்கூடிய கல்வி உதவித் தொகை விவரங்கள் ரகசியமாக பராமரிக்கப்படுவது மிக மிக அவசியம். இந்த விவரங்களை பொதுவெளியில் தெரியும் வகையில் காட்சிப்படுத்தக்கூடாது. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்கும் 'மகிழ் முற்றம்' குழுத்திட்டத்தை பள்ளிகளில் முன்னுரிமை அளித்து செயல்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டு இருக்கிறது. இருப்பினும் பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்படுத்துவது தெரியவந்தால், அதை தலைமை ஆசிரியரோ, ஆசிரியரோ பறிமுதல் செய்து பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும். பள்ளிகளில் திருக்குறள் அறநெறி வகுப்புகளை தவறாமல் நடத்த வேண்டும். 'மாணவர் மனசு' புகார் பெட்டியை வாரம் ஒரு முறை பள்ளி மேலாண்மைக்குழு தலைவர், தலைமை ஆசிரியர் முன்னிலையில் திறந்து, அதில் உள்ள தபால்களின் எண்ணிக்கையை பதிவு செய்து, அதுகுறித்து விசாரணை செய்து மாவட்டக்கல்வி அலுவலர், முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் சமர்ப்பிக்கவேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும்.
- பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம் நாளை (11.09.2025) திருவொற்றியூர் மண்டலம் (மண்டலம்-1), வார்டு-4ல் ராமநாதபுரம் முதல் தெரு நடுநிலைப்பள்ளி எதிரில் உள்ள சமுதாயக் கூடம், மணலி மண்டலம் (மண்டலம்-2), வார்டு-16ல் ஆண்டார்குப்பம் பள்ளி மைதானம், தண்டையார்பேட்டை மண்டலம் (மண்டலம்-4), வார்டு-35ல் கொடுங்கையூர், எம்.ஆர்.நகரில் உள்ள முத்துகுமாரசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி, இராயபுரம் மண்டலம் (மண்டலம்-5), வார்டு-54ல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஜே.கே.கன்வென்ஷன் ஹால், திரு.வி.க.நகர் மண்டலம் (மண்டலம்-6),
வார்டு-69ல் அகரம் பார்த்தசாரதி தெருவில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம், அம்பத்தூர் மண்டலம் (மண்டலம்-7), வார்டு-93ல் முகப்பேர், நந்தினி லட்சுமணன் தெருவில் உள்ள ஏ.எஸ்.என். மஹால், அண்ணாநகர் மண்டலம் (மண்டலம் – 8), வார்டு-94ல் வில்லிவாக்கம், எம்.டி.எச். சாலையில் உள்ள டி.கே.ஏ. திருமண மண்டபம், தேனாம்பேட்டை மண்டலம் (மண்டலம்–9), வார்டு-111ல் ஆயிரம் விளக்கு, மாதிரி பள்ளிச் சாலையில் உள்ள சமுதாயக் கூடம், கோடம்பாக்கம் மண்டலம் (மண்டலம் – 10), வார்டு-127ல் கோயம்பேடு,
காளியம்மாள் கோயில் தெரு, சென்னை குடிநீர் வாரிய வளாகத்தில் உள்ள பேட்டரி மூன்று சக்கர வாகன நிறுத்துமிடம், அடையாறு மண்டலம் (மண்டலம் – 13), வார்டு-170ல் கோட்டூர் இரயில் நிலையம் அருகிலுள்ள ஹாக்கி விளையாட்டு மைதானம், பெருங்குடி மண்டலம் (மண்டலம் – 14), வார்டு-189ல் பள்ளிக்கரணை, ஐஐடி காலனி 3வது பிரதான சாலையில் உள்ள ஐஐடி சமுதாயக் கூடம், சோழிங்கநல்லூர் மண்டலம் (மண்டலம் – 15), வார்டு-199ல் பழைய மகாபலிபுரம் சாலையில் உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய 12 வார்டுகளில் நடைபெறவுள்ளது.
இந்த முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வார்டுகளில் நடைபெறும் "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் பங்கேற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தினாரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
- பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டம்.
வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
12/09/2025 (வெள்ளிக்கிழமை) 13/09/2025 (சனிக்கிழமை) மற்றும் 14/09/2025 (ஞாயிறுக் கிழமை முகூர்த்தம்) மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினாரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை. திருச்சி கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி நாகர்கோவில் கன்னியாகுமரி தூத்துக்குடி, கோயம்புத்தூர். சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 12/09/2025 (வெள்ளிக்கிழமை) அன்று 355 பேருந்துகளும், 13/09/2025 (சணிக்கிழமை) 350 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளங்கண்ணி ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 12/09/2025 வெள்ளிக் கிழமை அன்று 55 பேருந்துகளும் 13/09/2025 சனிக்கிழமை அன்று 55 பேருத்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாதாவரத்திலிருத்து 12/09/2025 மற்றும் 13/09/2025 ஆகிய நாட்களில் 20 பேருந்துகளும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருத்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 5,230 பயணிகளும் சனிக்கிழமை 3.276 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,040 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
- மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
அந்த வகையில், நாளை மறுநாள் (12.9.2025) மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாலவாக்கம்: காமராஜர் சாலை மற்றும் பிரதான சாலை, கரீம் நகர், மகாத்மா காந்தி நகர், சங்கம் காலனி 1 மற்றும் 2வது தெரு, கந்தசாமி நகர் 1 முதல் 7வது தெரு.
பூவிருந்தவல்லி: வரதராஜபுரம், பனிமலர் மெடிக்கல் காலேஜ், பெங்களூர் டிரன்க் சாலை மற்றும் இன்ஜினியரிங் காலேஜ், நசரத்பேட்டை, மேப்பூர், மலையம்பாக்கம், அகரமேல்.
திருமங்கலம்: மெட்ரோஜோன் பிளாட், வி.ஆர் மால், சத்தியசாய் நகர், பாடிகுப்பம் பிரதான சாலை, வி.ஜி.என் குடியிருப்பு, பழையபென், கோல்டன்ஜூபிலி அப்பார்ட்மென்ட், பாலாஜி நகர், காமராஜ் நகர், பெரியார் நகர், அம்பேத்கர் நகர், மேத்தாராயல் பார்க், இரயில் நகர், 100அடி சாலை, சீனிவாசன் நகர், சிவன்கோயில் தெரு, மாடவீதிகள், நியூகாலனி, டிமேட்டுகுலம்.
எழும்பூர்: ஈ.வி.கே. சம்பத் சாலை, ஜெர்மய்யா தெரு, ரிதெர்டன் சாலை மற்றும் சந்து, சர்ச் சந்து, பாலர் கல்வி நிலையம், சிஎம்டிஎ மெரினா டவர், வேனல்ஸ் சாலை, பிசிஒ சாலை, விபி ஹால், பிக்னிக் ஹோட்டல், வால்டாக்ஸ், பூங்கா நகர் வரதராஜன் தெரு, சந்தோஷ் நகர், பூந்தமல்லி நெடுஞ்சாலை, கங்கு ரெட்டி சாலை, ஆராமுதன் கார்டன், பிரதாபட் சாலை, ஹட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பய்யா தெரு, பேரக்ஸ் சாலை. சைடனாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீரபத்ரன் தெரு, காட்டூர் சடையப்பன் தெரு, முத்து கிராமனி தெரு, ஜெர்மையா சாலை.
- பாமக சார்பில் குறைந்தது 5 லட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
- இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும் என தற்போதைய நேபாள புரட்சியை உதாரணம்.
வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்வில்லை என்றால் இளைஞர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
வன்னியர்களுக்கு 15 சதவீத உள்ஒதுக்கீட்டை வழங்காவிடில் இளைஞர்களை திரட்டி சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும்.
இடஒதுக்கீடு வழங்காவிடல் 2 மாதத்தில் சிறை நிரப்பும் போராட்டம். பாமகவினர் அறவழியில் கலந்து கொள்ள வேண்டும்.
பாமக சார்பில் குறைந்தது 5 லட்சம் பேர் சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.
இளைஞர்கள் நினைத்தால் புரட்சி வெடிக்கும் என தற்போதைய நேபாள புரட்சியை உதாரணம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.
- தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் சிபினிடம் கடிதம் அளித்தனர்.
தமிழகம் முழுவதும் வரும் 13-ந்தேதி சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக த.வெ.க. தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
திருச்சியில் இருந்து தனது சுற்றுப் பயணத்தை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். அதன்படி சத்திரம் பேருந்து நிலையத்தில் விஜய் உரையாற்ற த.வெ.க. சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் காவல்துறை அதற்கு அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்தது.
இதனையடுத்து மரக்கடை பகுதியில் இருந்து சுற்றுப் பயணத்தை தொடங்க மீண்டும் மனு அளிக்கப்பட்டது. இன்று காலை மனு அளித்த நிலையில், மாலை காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
ஆனால், ரோடு ஷோ நடத்தக் கூடாது உள்பட பல்வேறு நிபந்தனைகளை காவல்துறை விதித்துள்ளது.
இந்நிலையில், திருச்சி மரக்கடை பகுதியில் பிரச்சாரத்திற்கு காவல்துறை விதித்த நிபந்தனைகள் அனைத்தையும் தவெகவினர் ஏற்றுக் கொண்டுள்ளனர். இதுதொடர்பாக, தவெக நிர்வாகிகள் எழுத்துப்பூர்வமாக துணை ஆணையர் சிபினிடம் கடிதம் அளித்தனர்.
இதைதொடர்ந்து, ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பிறகு துணை ஆணையர், பிரச்சாரத்திற்கு அனுமதி அளித்தார்.
விஜய், வருகிற 13-ந்தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 20-ந்தேதி வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
ஒரே நாளில் 3 முதல் 4 மாவட்டங்களில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
3 மாதங்களில் 16 நாட்கள் மட்டும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அதன்படி, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளும் விஜய், 15 சனிக்கிழமைகள் மற்றும் ஒரு ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






