வார விடுமுறை நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்- 18 ஆயிரம் பேர் முன்பதிவு

பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர்.
வார விடுமுறை நாட்களையொட்டி 920 சிறப்பு பஸ்கள் நாளை இயக்கம்- 18 ஆயிரம் பேர் முன்பதிவு
Published on

சென்னை:

அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 340 பஸ்களும், நாளை மறுநாள் 350 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு நாளை 55 பஸ்களும், நாளை மறுநாள் 55 பஸ்களும், இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் இருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 100 சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுதவிர, மாதவரத்தில் இருந்து நாளை மற்றும் நாளை மறுநாள் 20 பஸ்களும், சிறப்பு பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் வருகிற 16-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சிறப்பு பஸ்களில் பயணிக்க நாளை 7ஆயிரத்து 227 பயணிகளும், நாளை மறுநாள் 2 ஆயிரத்து 975 பயணிகளும், ஞாயிறு அன்று 7 ஆயிரத்து 563 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com