என் மலர்
சென்னை
- மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டுள்ளார்.
- மனைவி வான்மதி தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தேடி வகின்றனர்.
மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, ரூ. 45.4 லட்சம் மோசடி செய்த ராமாபுரத்தைச் சேர்ந்த பினகாஷ் எர்னஸ்ட்(38) கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி வான்மதி தலைமறைவாகியுள்ள நிலையில், போலீசார் தேடி வகின்றனர்.
சென்னை, கே.கே நகர், 45வது தெருவில் வசித்து வருபவர் மதியழகன். இவர், கடந்த 16 வருடங்களாக தனியார் நிறுவனத்தில் மருந்தாளுநர் வேலை செய்து வருகிறார்.
இவருக்கு தொழில் ரீதியாக கடந்த 2016ம் ஆண்டு அறிமுகமான மருத்துவர் வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட் ஆகிய இருவரும் சேர்ந்து, தமிழ்நாடு மருத்துவத்துறை மற்றும் மின்சார துறைகளில் உயர் பதவியில் உள்ளவர்களை நன்கு தெரியும் என்றும், மருத்துவதுறையில் அரசு வேலைக்கு ரூ.7 லட்சமும், மின்சாரதுறையில் அரசு வேலைக்கு ரூ.3 லட்சமும் கொடுத்தால், அரசு வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.
அதன்பேரில், மதியழகன் மற்றும் அவருக்கு தெரிந்தவர்கள் என்று சுமார் 15 நபர்கள் சேர்ந்து பணம் ரூ.45,41,000/-ஐ வான்மதி மற்றும் அவரது கணவர் பினகாஷ் எர்னஸ்ட்யிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் இதுவரை அரசு வேலை வாங்கித்தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வருவதாக மதியழகன், கடந்த 02.03.2025 அன்று போலீசில் புகார் தெரிவித்தார்.
புகாரின்பேரில், R-10 எம்.ஜி.ஆர் நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணையில் உண்மை தெரியவந்ததை அடுத்து, மோசடியில் ஈடுபட்ட பினகாஷ் எர்னஸ்ட் என்பவை போலீசார் கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள மனைவியை பிடிக்க காவல்குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பினகாஷ் எர்னஸ்ட் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி, சிறையில் அடைக்கப்பட்டார்.
- டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?
- பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?
எடப்பாடி பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும்!? என்று திமுக IT Wing தனது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.
இதுதொடர்பாக, திமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
1. வெள்ளை அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள DL2CAN 9009 பதிவெண் கொண்ட கருப்பு Bentley தனியார் சொகுசு காரில் வந்தார்?
2. டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?
3. கட்சி தொடர்பான சந்திப்பு என்றால் கட்சியினர் உடனிருக்க வேண்டும், அரசு அலுவல் என்றால் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால் குடும்பத்தினர் இருக்கலாம்! ஆனால் திரு அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார்?
4. பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?
5. அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா அவர்களின் இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்? என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்? எதை மறைக்கிறார்? யாரை மறைக்கிறார்?
செய்தியாளர் சந்திப்பில் தடுமாறும் பழனிச்சாமியிடம் இந்த கேள்விகளுக்கு பதிலுண்டா?
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
- ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க.வை காப்பாற்றியது பா.ஜ.க.தான் என எடப்பாடி பழனிசாமி கூறியது சரித்திர உண்மை.
- பா.ஜ.க. கஷ்டத்தில் இருந்தபோது டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக இருந்தார்கள்.
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* அமித் ஷா கூறியபடி எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணி தலைவர். அவரை முதலமைச்சராக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
* அமித் ஷாவை பார்த்துவிட்டு வந்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி முகத்தை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்னை பொருத்தவரை அவர் முகத்தை மறைத்ததாக தெரியவில்லை.
* ஜெயலலிதா மறைவுக்குப்பின் அ.தி.மு.க.வை காப்பாற்றியது பா.ஜ.க.தான் என எடப்பாடி பழனிசாமி கூறியது சரித்திர உண்மை.
* விஜய் சுற்றுப்பயணத்திற்கு கூட்டம் கூடினால் சந்தோஷம் தான், ஆனால் தொண்டர்கள் பொதுச்சொத்தை சேதப்படுத்த கூடாது.
* டி.டி.வி. தினகரனை ஓரிரு நாட்களில் நட்பின் அடிப்படையில் சந்திக்க இருக்கிறேன்.
* பா.ஜ.க. கஷ்டத்தில் இருந்தபோது டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாக இருந்தார்கள். அவர்களோடு அரசியலைத்தாண்டி என் நட்பு தொடரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு?
- இதை நீங்கள் ஒழங்குபடுத்த வேண்டாமா?
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயின் பிரசார கூட்டத்திற்கு அனுமதி வழங்கும்போது நிறைவேற்ற முடியாத நிபந்தனைகள், மற்ற கட்சிகள் மீது விதிக்கப்படாத நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக தவெக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையின்போது, "கர்ப்பிணி, மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம் எனக் கூறி மற்றவர்களுக்கு நீங்கள் முன்மாதிரியாக திகழலாமே?. உயரமான இடங்களில் ஏறி நின்று அசம்பாவிதம் நிகழ்ந்தால் யார் பொறுப்பு? இதை நீங்கள் ஒழங்குபடுத்த வேண்டாமா?" என உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
மேலும், பொதுச்சொத்து சேதமடைந்தால் இழப்பீட்டை வசூலிக்கும் வகையில் தொகை டொபாசிட் செய்ய விதி வகுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன் திருச்சி பரப்புரையின்போது சேதப்படுத்தப்பட்ட பொதுச் சொத்துகளுக்கான இழப்பீடு வசூலிக்கப்பட்டதா? எனவும் உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
அத்துடன் பொதுச்சொத்து சேதப்படுத்தப்பட்ட விவகாரத்தில் தலையிட நேரிடும் என தவெக-வுக்கு சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
திருச்சி பிரசாரத்தின்போது த.வெ.க. தொண்டர்களின் செயல்களை புகைப்படமாகவும் காவல்துறை வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
- என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் - தி.மு.க. இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம்.
- சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்.
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் அண்ணாமலை அமைத்த கூட்டணியோடு எடப்பாடி பழனிசாமி நின்றிருந்தால், இன்று இங்கு 15 எம்.பிக்கள், 2 அமைச்சர்கள் கிடைத்திருப்பார்கள். ஆனால் அதை எடப்பாடி பழனிசாமி செய்யவில்லை.
என்னை முன்னிறுத்தி தமிழக அரசியல் களம், சீமான் - தி.மு.க. இடையேதான் போட்டி என மாறிவிடுமோ என எடப்பாடி பழனிசாமிக்கு பயம். அந்த வேலை நடக்கிறது என தெரிந்ததும் மீண்டும் பா.ஜ.க.வோடு போய் எடப்பாடி பழனிசாமி சேர்ந்துவிட்டார்.
சசிகலா, டி.டி.வி.தினகரன், ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து வெளியேற்றி விட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
- நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
20-ந்தேதி வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
21-ந்தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
22-ந்தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
23 மற்றும் 24-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதனிடையே இன்று முதல் 21-ந்தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் வரை இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் இன்று சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
நாளை முதல் முதல் 22-ந்தேதி வரை தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
- செந்தில் பாலாஜியை உலகமகா உத்தர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார்.
- செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.
சென்னை:
பா.ஜ.க. தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* செந்தில் பாலாஜியை உலகமகா உத்தர் போல் முதலமைச்சர் பாராட்டுகிறார்.
* செந்தில் பாலாஜியை திருடன் என விமர்சித்த முதலமைச்சர் தற்போது பாராட்டுகிறார்.
* மண் குதிரையை நம்பி முதலமைச்சர் காவிரி நோக்கி பயணிக்கிறார்.
* 2026 தேர்தலுக்கு முன் மண் குதிரையில் காவிரிக் கரை நோக்கி முதலமைச்சர் செல்கிறார்.
* சாராயம் விற்ற பணத்தில் தான் தி.மு.க.வின் முப்பெரும் விழா நடைபெற்றுள்ளது என்றார்.
- அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது.
- நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும்.
சென்னை :
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
உயிருக்குப் போராடும் காசா, உலகம் கண்டுகொள்ளாமல் இருக்கக் கூடாது!
காசாவில் அரங்கேறி வரும் கொடுமைகளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு அதிர்ந்து போயிருக்கிறேன். அங்கிருந்து வெளிவரும் ஒவ்வொரு காட்சியும் நெஞ்சைப் பதறச் செய்கிறது. பச்சிளம் குழந்தைகளின் அழுகுரல், பட்டினியில் தவிக்கும் சிறார்கள், மருத்துவமனைகள் மீது நடத்தப்படும் குண்டுவீச்சு, ஐ.நா. விசாரணை ஆணையமே அங்கு இனப்படுகொலை நடந்து வருவதாக அளித்துள்ள அறிக்கை ஆகிய அனைத்தும், எந்த மனிதரும் எப்போதும் அனுபவிக்கக் கூடாத துன்பங்களை அங்கு அனுபவித்து வருவதையே காட்டுகிறது.
அப்பாவி மனித உயிர்கள் இப்படி கொல்லப்படும்போது, அமைதியாக இருப்பது என்பது ஒரு தேர்வாக இருக்க முடியாது. நம் ஒவ்வொருவரின் மனசாட்சியும் விழிக்க வேண்டும். இந்தியா உறுதியான நிலைப்பாட்டோடு பேச வேண்டும், உலகம் மொத்தமும் ஒன்றிணைய வேண்டும். இந்தக் கொடூரத்தை இப்போதே தடுத்து நிறுத்த நாம் அனைவரும் இணைந்து செயல்படவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.
- விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர். எனக்கு எப்போதுமே தம்பிதான்
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக வெற்றிக் கழக இளைஞர்கள் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். அவர்கள் பக்குவம் அடைய நாள் எடுக்கும். உச்சத்தை விட்டுவிட்டு வருவேன் என்று சொன்னால் உங்களை யார் வர சொன்னது என்கிற கேள்வி வருகிறது. அரசியலுக்கு வந்த பிறகு சேவை செய்ய வேண்டும். பெருமை பேசக்கூடாது.
தி.மு.க., அ.தி.மு.க.வை அழிக்க போராடிக் கொண்டிருக்கும்போது மீண்டும் அண்ணா, எம்.ஜி.ஆரை கொண்டு வந்தால் என்ன செய்வது? விஜய் மற்றவர்களுக்கு தான் தலைவர். எனக்கு எப்போதுமே தம்பிதான். விஜய்யை அரசியலில் சீர்படுத்தும் பொறுப்பு எனக்கு இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- தமிழ்நாட்டில் பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
- தமிழக கோவில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றதாகும்.
சென்னை:
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு கோவில்களில் வழிபாட்டு உரிமையை எந்த நிலையிலும் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று ஒரு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதி பி. புகழேந்தி ஆணை பிறப்பித்துள்ளார். இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மனதார வரவேற்கிறேன்.
ஆலய நுழைவு போராட்ட வரலாற்றுப் பின்னணி கொண்ட தமிழ்நாட்டில் பரவலாக சில இடங்களில் பட்டியலினத்தவர்களுக்கு கோவில்களில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில் தான் மதுரை உயர்நீதிமன்றம் வழிபாட்டு உரிமையை உறுதி செய்திருக்கிறது.
மதுரை ஆலய நுழைவு போராட்டம் நடைபெற்று 86 ஆண்டுகளும், அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்து 75 ஆண்டுகளாகியும் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்று மறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் முயற்சியால் சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகும், தமிழக கோவில்களில் வழிபாட்டு உரிமைகளில் சாதி வேறுபாடு காட்டுவது நியாயமற்றதாகும். இது சமூகநீதிக்கு எதிரானதாகும்.
எனவே, தமிழ்நாட்டு மக்கள் சாதி வேறுபாடுகளை கடந்து அனைவரையும் சமமாக கருதுகிற வகையில் வழிபாட்டுத் தலங்களில் அனைவரும் கடவுளை தரிசிக்கிற உரிமையை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். எல்லாவற்றிலும் முன்னோடி மாநிலமாக இருக்கிற தமிழ்நாடு அனைவரும் வழிபாட்டு உரிமை பெறுகிற வகையில் ஒத்துழைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர்.
- தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது.
சென்னை கிண்டியில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயை எதிர்த்து பேசினால் தி.மு.க. கைக்கூலி என்கிறார்கள்.
* விஜயை விமர்சிப்பதால் தி.மு.க.விடம் நான் பெட்டி வாங்கி விட்டதுபோல் பேசுகின்றனர்.
* தி.மு.க.வை எதிர்த்து பேசினால் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் கைக்கூலி எனக் கூறுகிறார்கள்.
* தேர்தலில் தி.மு.க. தனித்து நின்று போட்டியிட வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுக்கக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருந்தார்.
- தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து, அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரனும் விலகி உள்ளார்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பா.ஜ.க. முன்னாள் தலைவர் அண்ணாமலை கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதுதொடர்பாக பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக, ஓ.பி.எஸ்., டி.டி.வி.தினகரன் அறிவித்திருப்பது, இறுதி முடிவாக இருக்காது என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறுகையில், பா.ஜ.க. கூட்டணியில் மீண்டும் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் இணைந்தாலும் அது உடைந்த கண்ணாடி போன்று கீறல்களுடன்தான் இருக்கும் என்று விமர்சனம் செய்துள்ளார்.






