என் மலர்tooltip icon

    சென்னை

    • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். திருவள்ளூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, வேலூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வும் மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 31 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கோவை, விழுப்புரம், திருச்சி, அரியலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.
    • தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்தவர்.

    சென்னை:

    அ.திமு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகரும், கழக நட்சத்திரப் பேச்சாளருமான ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    சிறு சிறு விழா மேடைகளில் தொடங்கி, தொலைக்காட்சி, வெள்ளித்திரை என தனது தனித்துவ நடிப்புத் திறமையால் படிப்படியாக முன்னேறி வந்து, தனது இயல்பான நகைச்சுவை உணர்வால் ரசிகர்களை ஈர்த்த அன்புச் சகோதரர் ரோபோ சங்கரின் இழப்பு என்பது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் அவர்தம் குடும்பத்தாருக்கும், திரைத்துறையைச் சார்ந்தோருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதுடன், மறைந்த அவர்தம் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார். 



    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (20.09.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    கிண்டி: லேபர் காலனி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், டி.எஸ். மினி, பாலாஜி நகர், நாகிரெட்டித்தோட்டம், ஈக்காட்டுதாங்கல் காந்தி நகர் மெயின் ரோடு, சர்தார் காலனி, ஜே.என்.சாலை, கலைமகள் நகர், அச்சுதன் நகர் 1வது மெயின் ரோடு, அருளையம்பேட்டை, தெற்கு மற்றும் வடக்கு கட்டம், முத்துராமன் செக்டார், முத்துராமன் தெரு, கணபதி காலணி, லாசர் தெரு.

    செம்பியம்: சிம்சன் குரூப் ஆஃப் கம்பெனிஸ், ஓசூர் கார்டன், ஐபிஎல் கம்பெனி, பைமெட்டல் பேரிங், சிம்சன், டாஃபே கம்பெனி, டீச்சர்ஸ் காலனி, சந்தோஷ் நகர், வீனஸ் நகர், கடப்பா சாலை, சாரதி நகர், கலைமகள் நகர், வில்லிவாக்கம் சாலை, முகாம்பிகை நகர்.

    ஆவடி: கிரீன் பீல்டு, சோமசுந்தரம் அவென்யூ, வெங்கடாசலம் நகர், கமலம் நகர், லலிதாம்பாள் நகர், அன்னை தெரசா நகர், வெங்கடேஸ்வரா நகர், ஒரகடம் சொசைட்டி.

    ஆழ்வார்திரு நகர்: லட்சுமி நகர், ராதா அவென்யூ, ஏகேஆர் நகர், ராதா நகர், வேலன் நகர் 5 முதல் 9வது தெருக்கள்.

    எழும்பூர்: அட்கின்சன் சாலை, சிங்கர் தெரு, சுப்பையா தெரு, பாரக்ஸ் சாலை, சைடன்ஹாம்ஸ் சாலை, கற்பூர முதலி தெரு, திருவேங்கடம் தெரு, மாட்டுக்கார வீர பத்ரன் தெரு, கடூர் சடையப்பன் தெரு, முத்து கிராமணி தெரு, சர்ச் சாலை, ஈவிகே சம்பத் சாலை, டெர்மியா சாலை, பிஎச் சாலை, கெல்லிஸ் சாலை தெரு, பிரான்சன் கார்டன் தெரு, வெங்கடபதி தெரு, ஹாலிஸ் சாலை, ஏர் இந்தியா காலனி, சுந்தர்லால் நார்த் அவென்யூ, ஆர்ம்ஸ் சாலை, லூதர்ன் கார்டன் போலீஸ் குடியிருப்பு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, டாக்டர் முனியப்பா சாலை, ஈகா தியேட்டர், எஸ்ஐ குவாட்டர்ஸ், கேஜி ரோடு, உமா காம்ப்ளக்ஸ், பிரான்சன் கார்டன், பால்ஃபோர் சாலை.

    • மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
    • நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

    ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்தார்.

    இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று இரவு 8.30 மணியளவில் உயிரிழந்தார்.

    சென்னையில் உள்ள வீட்டில் அவரது உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் பலரும் அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ரோபோ சங்கர் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.   

    • ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார்.
    • தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    சின்னத்திரையில் பிரபலமான ரோபோ சங்கர் (46) சினிமாவில் அறிமுகமாகி பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

    இந்தநிலையில் ரோபோ சங்கர் நேற்று முன்தினம் மதியம் ஒரு படப்பிடிப்பில் பங்கேற்றார். அப்போது திடீரென அவருக்கு மயக்கம் ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை படக்குழுவினர் சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    ரோபோ சங்கரை பரிசோதித்த மருத்துவர்கள் நீர்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தொடர்ந்து சில தினங்கள் மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என அறிவுறுத்தியதன் பேரில் ரோபோ சங்கர் மருத்துவ கண்காணிப்பில் இருந்து வந்தார்.

    இந்நிலையில், வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரோபோ சங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இவரது மறைவு குறித்து அறிந்து திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    ரோபோ சங்கர் சில வருடங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தீவிர சிகிச்சைக்கு பிறகு உடல்நலம் தேறி மீண்டும் படங்களில் நடித்து வந்த நிலையில் உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன்.
    • அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம்.

    திமுகவில் இணைந்தது குறித்து மருது அழகுராஜ் கூறியதாவது;-

    அபகரிப்பு அரசியலில் இருந்து அரவணைக்கும் அரசியலை நோக்கி நகர்ந்திருக்கிறேன். 20 வருடமாக அதிமுகவிற்கு என்னுடைய தமிழ், எழுத்து, பேச்சையும் ஒப்படைத்து உழைத்தவன். எடப்பாடியின் அபகரிப்பு அரசியலை, ஆக்கிரமிப்பு அரசியலை ஜனநாயகத்திற்கு புறம்பானது என கண்டித்த காரணத்தினால் அங்கிருந்து விலக்கப்பட்டேன். அதிமுக-வை எடப்பாடி பழனிசாமி அபரிகரித்தார். இப்போது அதிமுகவை பாஜக அபகரித்துள்ளது.

    எம்ஜிஆர் காலத்தில் திராவிடக்கழகம் ஒன்றிணைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது முடியாமல் போனது. தற்போது எடப்பாடி பழனிசாமி புண்ணியத்தில் திராவிட இயக்கம் ஒன்றாகக்கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது. அன்வர் ராஜா வந்துள்ளார். நான் வந்துள்ளேன். இன்னும் பல்லாயிரம் மற்றும் பல லட்சம் பேர் வருவார்கள்.

    எடப்பாடி பழனிசாமியே ஆசி கொடுத்து அனுப்பி வைப்பார். திமுக கட்சியை வலப்படுத்துவற்கு எடப்பாடி பழனிசாமியும் துணையாக இருக்கிறார். அவருடைய உள்ளாசை திராவிட கழகம் ஒன்றாக வேண்டும் எனக் கூட நினைக்கலாம். அதிமுக-விற்கு பல காலம் உழைத்தவர்களை நல்ல எண்ணத்துடன் அனுப்பி வைத்துள்ளார் என எடுத்துக்கொள்கிறேன்.

    இவ்வாறு மருது அழகுராஜ் தெரிவித்துள்ளார்.

    • தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை வேளையில் கருமேகம் சூழ்ந்தது. பின்னர், பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், தமிழகத்தில் 30 மாவட்டங்களில் இன்று இரவு 11.15 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.

    கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சை, ஈரோடு, தேனி, நாமக்கல், நெல்லை மாவட்டங்களில் இரவு 11.15 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    • த.வெ.க. நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த புதிய பொறுப்பாளர்கள் நியமனம்.
    • துணை பொதுச் செயலாளராக இருந்த நிர்மல்குமார் இணைப் பொதுச் செயலாளராக நியமனம்.

    தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

    த.வெ.க. நிர்வாக கட்டமைப்பை வலுப்படுத்த புதிய பொறுப்பாளர்களை நியமிப்பதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    அதன்படி, தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளராக இருந்த நிர்மல்குமார் இணைப் பொதுச் செயலாளராக நியமனம்.

    தவெக-வின் கொள்கை பரப்பு செயலாளராக இருந்த ராஜ்மோகன் ஊடக அணி துணை பொதுச் செயலாளராக நியமனம்.

    மேலும், விஜயலட்சுமி, அருள்பிரகாசம், ஸ்ரீதரன், சுபத்ரா ஆகியோர் தவெக துணை பொதுச் செயலாளராக புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    • சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
    • சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் மழை.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    சென்னையில் காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், மாலை வேளையில் கருமேகம் சூழ்ந்தது. பின்னர், பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்நிலையில், சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை காரணமாக விமானங்கள் தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    தூத்துக்குடி, டெல்லி, விஜயவாடா, ஷீரடி உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னை வரும் விமான சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

    • இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
    • சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது.

    தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இடி, மின்னலுடன் கூடிய பலத்த காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என செனை்ன வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

    கடந்த சில நாட்களாக சென்னையில் இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. காலை நேரங்களில் வெயிலாக இருந்தது.

    காலை முதல் வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், தற்போது சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    அதன்படி, சென்னை கோயம்பேடு, வடபழனி, அசோக் நகர், பூவிருந்தவல்லி, மதுரவாயல், நெற்குன்றம், வளசரவாக்கம், முகப்பேர், ராமாபுரம், வானகரம், போரூர் ஆகிய இடங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

    சென்னை கிண்டி, ஆலந்தூர், மீனம்பாக்கம், வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், பூந்தமல்லி, கரையான்சாவடி, குமணன்சாவடி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு, திருவேற்காடு உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.

    • வருகிற 28ஆம் தேதி குரூப் 2, 2ஏ தேர்வுகள்.
    • www.tnpsc.gov.in, www.tnpscexams.in இணைய தளத்தில் டவுன்லோடு செய்து கொள்ளலாம் என அறிவிப்பு.

    வருகிற 28ஆம் தேதி டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் குரூப் 2, 2ஏ தேர்வுகள் நடைபெற இருக்கின்றன. தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் ஹால் டிக்கெட்டுகள் இணைய தளத்தில் வெளியாகியுள்ளது.

    www.tnpsc.gov.in, www.tnpscexams.in இணைய தளத்தில் ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

    • ராகுல் காந்தி அவர்களின் குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
    • தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.

    காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களே. வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமை பறிக்கப்படுவதும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நிகழ்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.

    உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர்களுக்கே தெரியாமல் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியில் மட்டும் 9,850 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது.

    தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார் என்ற தலைவர் ராகுல் காந்தி அவர்களின் குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இவ்வாறான முறைகேடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தாலும், தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.

    முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Y. குரேஷி அவர்கள் கூட, 'வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் புறக்கணிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்' என வெளிப்படையாக கூறியிருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய அவமானம்.

    இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமைகளை புறக்கணிப்பதால், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். மேலும், மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்ற போக்கைத் தொடர்வது ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதலாகும்.

    வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். வாக்குரிமையை பறிக்க முயன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

    மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஜனநாயகத்தை காப்பதற்கான எங்கள் போராட்டம் தீவிரமாக தொடரும்.தேர்தல் ஆணையத்தின் அலட்சியம் – ஜனநாயகத்தின் மீது தாக்குதல்

    இந்திய ஜனநாயகத்தின் அடித்தளம் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களே. வாக்குரிமை என்பது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமை பறிக்கப்படுவதும், வாக்காளர் பட்டியலில் முறைகேடுகள் நிகழ்வதும் இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய ஆபத்தாகும்.

    உத்தரப் பிரதேசம், பிகார், கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் வாக்காளர்களுக்கே தெரியாமல் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிராவில் ஒரு தொகுதியில் மட்டும் 9,850 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டிருப்பது தேர்தல் ஆணையத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. தமிழர்களுக்கே தெரியாமல் டெல்லியில் அமர்ந்துள்ள ஒருவர் தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்களின் வாக்குகளை அழிக்கிறார் என்ற தலைவர் திரு ராகுல் காந்தி அவர்களின் குற்றச்சாட்டு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.

    இவ்வாறான முறைகேடுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் வெளிப்படையாக எச்சரிக்கை விடுத்தாலும், தேர்தல் ஆணையம் உரிய விசாரணை மேற்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருகிறது.

    முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் S.Y. குரேஷி அவர்கள் கூட, 'வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை விசாரிக்காமல் புறக்கணிப்பது தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையை சேதப்படுத்தும்' என வெளிப்படையாக கூறியிருப்பது தேர்தல் ஆணையத்திற்கு மிகப்பெரிய அவமானம்.

    இந்திய தேர்தல் ஆணையம் தனது கடமைகளை புறக்கணிப்பதால், மக்களின் வாக்குரிமை பறிக்கப்படுகிறது. இது இந்திய ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தல். மேலும், மக்களின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டிய நேரத்தில் செயலற்ற போக்கைத் தொடர்வது ஜனநாயகத்தின் மீது நேரடி தாக்குதலாகும்.

    வாக்காளர் பட்டியல் முறைகேடுகள் மற்றும் வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகள் தொடர்பாக உடனடியாக, வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும். வாக்குரிமையை பறிக்க முயன்றவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். அலட்சியம் காட்டிய தேர்தல் ஆணைய அதிகாரிகளை பதவி நீக்கம் செய்யவேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வலியுறுத்துகிறேன்.

    மக்களின் வாக்குரிமை பறிக்கப்படும் நிலையில் காங்கிரஸ் கட்சி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. ஜனநாயகத்தை காப்பதற்கான எங்கள் போராட்டம் தீவிரமாக தொடரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×