என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விங் கமாண்டர் நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம்.!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
    X

    'விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம்.!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    • விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது.
    • கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    துபாயில் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்தியா உள்ளிட்ட 115 நாடுகளை சேர்ந்தவர்க்ள இந்த கண்காட்சியில் பங்கேற்றுள்ளன.

    நேற்று முன்தினம் விமான சாகச கண்காட்சி நடைபெற்றது. இதில் கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து தேஜஸ் எம்.கே. 1 இலகு ரக போர் விமானம் பங்கேற்றது. விமானி நமன் சியால் (வயது37) விமானத்தில் பறந்து சென்று சாகசம் செய்து கொண்டிருந்தார்.

    அப்போது அவர் இயக்கிய விமானம் திடீரென வானில் இருந்து தரையை நோக்கி பறந்து வந்து விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதில் விமானி நமன் சியால் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த நிலையில் துபாய் விபத்தில் பலியான விங் கமாண்டர் நமன் சியால் உடல் நேற்றிரவு துபாயில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு வரப்பட்டது. பின்னர் அவரது உடல் கோவை ரேஸ்கோர்சில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

    இன்று காலை மீண்டும் அவரது உடல் வாகனம் மூலமாக ரேஸ்கோர்சில் இருந்து சூலூர் விமானப்படை தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

    அங்கு உயிரிழந்த விமானி நமன் சியால் உடலுக்கு, கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.

    இந்நிலையில், லிங் கமாண்டர் நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர்," 'விங் கமாண்டர்' நமன்ஷ் சியால் அவர்களுக்கு வீரவணக்கம்.!

    அவரது உடல் கோவைக்குக் கொண்டுவரப்பட்ட காட்சிகளைக் கண்டு கலங்கினேன். கோவை சூலூர் விமானப்படை தளத்தில் பணிபுரிந்த அவருக்குத் தமிழ்நாடு தனது அஞ்சலியைச் செலுத்துகிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என குறிப்பிட்டிருந்தார்.

    Next Story
    ×