என் மலர்tooltip icon

    சென்னை

    • ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள் தான்.
    • அனைத்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் முதுநிலை வணிக மேலாண்மை (எம்.பி.ஏ) இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு, முதலாம் ஆண்டுக்கு வழங்கப்பட வேண்டிய கல்வி உதவித் தொகை இன்னும் வழங்கப்படாததால் அவர்கள் கல்விக் கட்டணத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். ஏழை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவதில் தேவையற்ற தாமதம் செய்யப்படுவது கண்டிக்கத்தக்கது.

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்கல்வி நிறுவனங்களில் பட்டப்படிப்பு மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கான உதவித் தொகை (Post Matric Scholarship Scheme) வழங்கப்பட்டு வருகிறது. உயர்கல்வி பயிலும் ஏழைக்குடும்ப மாணவர்கள் கல்வி கட்டணம் செலுத்துவதற்காக இந்த உதவித் தொகையைத் தான் நம்பியிருக்கிறார்கள். அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதலாம் ஆண்டுக்கான கல்வி உதவித்தொகையாக தலா ரூ. 52,980 வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.

    முதலாம் ஆண்டின் இறுதியில் இந்த உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.52,980 வழங்குவதற்கு பதிலாக இதுவரை மொத்தம் ரூ.3025 மட்டும் தான் வழங்கப்பட்டிருக்கிறது. மீதமுள்ள ரூ.49,955 இன்னும் வழங்கப்படவில்லை. அதனால், அந்த மாணவர்களால் இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த முடியவில்லை. உடனடியாக கல்விக் கட்டணத்தை செலுத்தும்படி பல்கலைக்கழகம் கெடுபிடி காட்டி வரும் நிலையில், உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்கப்படாவிட்டால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

    அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் பிற இட ஒதுக்கீட்டுப் பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை முழுமையாக வழங்கப்பட்டு விட்டது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மட்டும் இன்னும் கல்வி உதவித் தொகை வழங்கப்படாததற்கு, இதற்கு பொறுப்பான பல்கலைக்கழக அதிகாரிகளும், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலத்துறை அதிகாரிகளும் தான் காரணம் ஆவர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மாணவர்கள் சந்தித்து முறையிடும் போதெல்லாம் அவர்கள் பொறுப்பைத் தட்டிக் கழிக்கிறார்களே தவிர, எவரும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கவில்லை.

    ஏழை மாணவர்கள் கல்வி கற்பதற்கு ஒரே ஆதாரம் இத்தகைய கல்வி உதவித் தொகைகள் தான். அவை குறித்த காலத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றால் அவர்களின் உயர்கல்வி பாதிக்கப்படும். இதை உணர்ந்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவர்கள் உள்பட இதுவரை கல்வி உதவித் தொகை வழங்கப்படாத அனைத்து மாணவர்களுக்கு உடனடியாக கல்வி உதவித் தொகை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகின.
    • இன்றைய சட்டசபை நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்ய உள்ளதாகவும், அது தொடர்பாக நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாகவும் தகவல் வெளியாகின.

    இதனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்ய உள்ள மசோதாக்கள் குறித்து எவ்வித தகவலும் இல்லாத நிலையில் மிகவும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

    இந்த நிலையில், அனைத்து வகையிலும் இந்தி மொழிக்கு தடை விதிக்கும் மசோதா சட்டசபையில் தாக்கல் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருமொழிக்கொள்கையை உறுதிப்படுத்தும் வகையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் இன்றைய சட்டசபை நிகழ்வு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    • கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.
    • அனைவருக்கும் ஒன்றாக பி.பி. அதிகமாகி விட்டதோ என்று நினைத்தேன் என்று கூறினார்.

    தமிழக சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.

    இந்நிலையில் கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் அப்பாவு கிண்டலடித்தார்.

    இதுதொடர்பாக அவர், அனைவருக்கும் ஒன்றாக பி.பி. அதிகமாகி விட்டதோ என்று நினைத்தேன் என்று கூறினார்.

    சிறையில் அடையாள பட்டை அணிந்திருப்பது போல் அ.தி.மு.க.வினர் வந்துள்ளனர் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

    அ.தி.மு.க.வினர் குறித்த சபாநாயகர், அமைச்சர் ரகுபதியின் கிண்டலால் சட்டசபையில் சிரிப்பலை உண்டானது.

    • கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர்.
    • சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.

    பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்கள் 8 பேர் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து, 2 மணித்துளிகள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அதன்பின்னர், கரூரில் நடைபெற்ற துயர சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தினர். அனைவரும் மவுன அஞ்சலி செலுத்தியதும் நேற்றைய கூட்டம் இத்துடன் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மு.அப்பாவு அறிவித்தார். அத்துடன் கூட்டம் நிறைவடைந்து.

    இந்நிலையில் தமிழக சட்டசபையின் 2-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.

    சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க வந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கைகளில் கருப்பு பட்டையை அணிந்து வந்தனர். கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.

    • மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.
    • அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் உடன் ஆய்வு மேற்கொண்டனர்.

    சென்னை:

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முன்கூட்டியே தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை மழை பெய்தது. மேலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில், சென்னை ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். அங்கு மண்டல வாரியாக செய்யப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்து கேட்டறிந்தார்.

    துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் அமைச்சர் கே.என்.நேரு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்டோரும் ஆய்வு மேற்கொண்டனர். 

    • கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
    • பழைய மாளிகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் 2-ம் நாள் அமர்வு தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    அந்த வகையில், கோபிசெட்டிப்பாளையத்தில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என செங்கோட்டையன் கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் எ.வ.வேலு, கோபிசெட்டிபாளையத்தில் புறவழிச்சாலைக்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

    மேலும், மதுரை சுற்றுலா மாளிகையை புதுப்பிப்பது தொடர்பாக எம்.எல்.ஏ. எழுப்பிய கேள்விக்கு, மதுரையில் புதிய சுற்றுலா மாளிகை கட்டப்பட்டு வருவதால் பழைய மாளிகையை புதுப்பிப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்தார். 

    • தங்கம் விலை சீரான இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டி பிடித்து வருகிறது.
    • வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது.

    தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகம் கண்டு வருவது இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்ல சுப நிகழ்ச்சிகளை திட்டமிட்டு வைத்திருக்கும் குடும்ப தலைவர்களுக்கும் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தங்கம் விலை எப்போது இறங்கும் என்பதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    தங்கம் விலை நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 580-க்கும், சவரன் ரூ.92 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது. இந்தநிலையில் நேற்று ரூ.245 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 825-க்கும், ரூ.1,960 அதிகரித்து ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது.

    தங்கம் விலை சீரான இடைவெளியில் புதிய உச்சத்தை எட்டி பிடித்து வருகிறது. அந்தவகையில் நேற்றும் தங்கம் விலை முதல்முறையாக ரூ.94 ஆயிரத்தை தாண்டி வரலாறு படைத்து இருக்கிறது.

    தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் உயர்ந்துகொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.197-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 97 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று ரூ.9 அதிகரித்து ஒரு கிராம் ரூ.206-க்கும், ரூ.9 ஆயிரம் உயர்ந்து ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்துக்கும் வெள்ளி விற்பனையாகியது. வெள்ளி முதல்முறையாக கிலோவுக்கு ரூ.2 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டிருக்கிறது.

    இந்த நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்துள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 35 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 11,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 280 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,880-க்கும் விற்பனையாகிறது.

    தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அந்த வகையில், இன்று கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 207 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 2 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

     

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600

    13-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,640

    12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    10-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 91,720

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    14-10-2025- ஒரு கிராம் ரூ.206

    13-10-2025- ஒரு கிராம் ரூ.197

    12-10-2025- ஒரு கிராம் ரூ.190

    11-10-2025- ஒரு கிராம் ரூ.190

    10-10-2025- ஒரு கிராம் ரூ.184

    • சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் டிரைவர்கள் தயாராக இருப்பர்.
    • ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அதன் மாவட்ட கள செயல்பாட்டுக் குழுவில் உள்ளவர்கள் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவர்.

    சென்னை:

    தமிழ்நாடு அரசு சுகாதாரத் திட்டத்தின் கீழ் செயல்படும் 108 அவசர ஆம்புலன்ஸ் சேவைகள் சார்பில் தீபாவளியை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுளதாக சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து, 108 ஆம்புலன்ஸ் சேவையின் மாநிலத் தலைவர் எம்.செல்வகுமார், சென்னை மண்டலத் தலைவர் எம்.முகமது பிலால் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மருத்துவம், காவல் மற்றும் தீயணைப்பு துறைகளுடன் இணைந்து 108 அவசர சேவை 24 மணி நேரமும் பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் செயல்படும் 521 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அவசர காலங்களில் விரைந்து சேவையாற்ற ஆயத்தமாக உள்ளன. பாதிப்பு வாய்ப்பு இருக்கக்கூடிய பகுதிகளில் ஆங்காங்கே ஆம்புலன்ஸ் வாகனங்கள் முன்னெச்சரிக்கை அடிப்படையில் நிறுத்தப்பட்டுள்ளன. சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவ உதவியாளர்கள் மற்றும் டிரைவர்கள் தயாராக இருப்பர்.

    மேலும், அனைத்து 108 ஆம்புலன்ஸ் வாகனங்களிலும் தீயணைப்பு சாதனங்கள், மீட்பு உபகரணங்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள் மற்றும் அவசர மருந்துப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பு வைக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பண்டிகை காலங்களில் தீயணைப்பு அல்லது பிற அவசர உதவிகள் தேவைப்பட்டால், 108 என்ற ஒரே எண்ணை தொடர்பு கொண்டால் போதுமானது. உடனடியாக அருகிலுள்ள சேவை மையத்துக்கு உரிய தகவல் அனுப்பப்படும். அனைத்து இலவச ஆம்புலன்ஸ்களிலும் தீக்காயங்களை கையாளும் வசதி செய்யப்பட்டுள்ளது. அடர்த்தியான குடியிருப்புப் பகுதிகள் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட சாலைகளின் குறுகிய பாதைகளில் துரிதமாக செயல்பட அவசர கால 108 பைக் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்படும்.

    ஆம்புலன்ஸ் சேவை மற்றும் அதன் மாவட்ட கள செயல்பாட்டுக் குழுவில் உள்ளவர்கள் அனைத்து துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுவர். சென்னையில் மருத்துவ உதவி கோரி அழைப்பு கிடைத்த 5-வது நிமிடங்களுக்குள் ஆம்புலன்ஸ் வாகனம் சம்பந்தப்பட்ட இடத்துக்கு சென்றடையும். அதேபோன்று பிற மாவட்டங்களிலும் 5-லிருந்து 9 நிமிடங்களுக்குள் சென்றடையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
    • நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!

    அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    #Foxconn நிறுவனம், முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் சந்திப்பு நடத்தியதாகவும், 15,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்போவதாகவும் திமுக அரசு அறிவித்தது. பொம்மை முதல்வரோ, இது தான் "செயலில் ஸ்டாலின் மாடல்" என்று மார்தட்டிக் கொண்டார்.

    இந்நிலையில், #Foxconn நிறுவனம், அத்தகைய முதலீடு குறித்த பேச்சுவார்த்தைகளை மறுத்துள்ளதாக செய்திகள் வருகின்றன.

    "பொய் சொன்னாலும் பொருத்தமாக சொல்லுங்க" என்ற ஸ்டாலினின் பொன்மொழியை, அவருக்கே நினைவுபடுத்த விழைகிறோம்.

    ஏனெனில், பொருத்தமற்ற பொய்கள் இப்படி தான் சீக்கிரமே அம்பலப்பட்டுப் போகும்.

    ஆண்டுதோறும் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் பொம்மை முதல்வர், அதனால் தமிழகத்திற்கு கிடைத்தது என்னவென்று கேட்டால், அதற்கு இவர்களின் பதில், "வெற்று பேப்பர்"! அது சரி, சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்?

    நேற்று அம்பலப்பட்டுள்ள இந்த பொய் என்பது, பொய்களே உருவான இந்த விடியா ஆட்சி விரைவில் அம்பலப்பட்டு வீழப் போவதற்கு சாட்சி!

    கூகுள் நிறுவனம் கூட, பல்லாயிரம் கோடி மதிப்பிலான முதலீட்டை ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் நேற்று அறிவித்துள்ளது. ஆட்சி என்றால் என்னவென்றே தெரியாத, திறமையற்ற பொம்மை முதல்வரிடம் சிக்கித் தவிக்கும் தமிழகத்தை மீட்டு, மீண்டும் வளர்ச்சிப் பாதையில் வளமான தமிழ்நாட்டைக் கட்டமைக்க ஒரே வழி, 2026-ல் அ.தி.மு.க. ஆட்சி அமைவதே!

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நேற்று 12 நிமிடங்கள் நடந்த இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.
    • வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    2025-26ம் ஆண்டின் கூடுதல் செலவுக்கான மானியக் கோரிக்கைக்காக தமிழ்நாடு சட்டசபை கூட்டம் நேற்று கூடியது. சபாநாயகர் அப்பாவு திருக்குறள் மற்றும் அதன் விளக்கத்தை வாசித்ததும் அவை நிகழ்ச்சிகள் தொடங்கின.

    அதைத்தொடர்ந்து இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. நேற்று 12 நிமிடங்கள் நடந்த இரங்கல் நிகழ்வுகளுடன் அவை நிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டன.

    இதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டசபையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய மசோதாக்களை தாக்கல் செய்கிறார். இதுதொடர்பாக நேற்று வழக்கறிஞர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும்.
    • ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (16.10.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். அதன்படி,

    அண்ணாநகர்: ஜெயலட்சுமி நகர், தனலட்சுமி நகர், மூகாம்பிகை நகர், பாலகிருஷ்ணா நகர், ராஜீவ் காந்தி நகர், ஜானகிராம் காலனி, புவனேஸ்வரி நகர், ராமலிங்க நகர், தாமரை அவென்யூ.

    அம்பத்தூர்: டி.வி.எஸ்.நகர் முழுப் பகுதி, கண்டிகை தெரு, அன்னை நகர் மெயின் ரோடு, பத்மாவதி நகர், அன்பு நகர், சந்தோஷ் நகர், மோகன் கார்டன், தண்ணீர் கால்வாய் சாலை, பல்லா தெரு.

    தில்லை கங்கா நகர்: வாஞ்சிநாதன் தெரு மற்றும் விரிவாக்கம், உத்தமர் காந்தி தெரு, திருவள்ளுவர் நகர், பாரதிதாசன் தெரு, நேதாஜி தெரு, கேசரி நகர் மெயின் ரோடு மற்றும் 1 முதல் 7வது தெரு, சுரேந்திரா நகர் 6வது தெரு முதல் 11வது தெரு வரை, விவேகானந்தா தெரு, இன்கம் டேக்ஸ் காலனி 1வது தெரு, பாலாஜி நகர் 1வது தெரு, சாந்தி நகர், டிஆர்ஏ அஸ்கோட் மற்றும் கேஜி பினாக்கிள்.

    • புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
    • தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. மேலும் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர் அரியலூர், திருச்சி, திண்டுக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    ×