என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சென்னை கொளத்தூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - மக்கள் உற்சாக வரவேற்பு
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார்.
- பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
சென்னை:
சென்னை கொளத்தூர் பெரியார் நகரில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.6.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள அமுதம் அங்காடியின் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார்.
இதற்கான விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. விழாவில் பங்கேற்க வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாலையில் நடந்து சென்று மக்களை சந்தித்து பேசினார். பொதுமக்கள் வழிநெடுகிலும் நின்று முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் பொதுமக்களுடன் சேர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார். மாணவர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து, பெரியார் நகரில் அமைய உள்ள அமுதம் அங்காடி கட்டும் பணிக்கும், ரூ.17.47 கோடி செலவில் கட்டப்பட உள்ள அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.






