என் மலர்tooltip icon

    சென்னை

    • பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
    • உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    கிட்னி திருட்டு குறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கிட்னி முறைகேடு குறித்து தொலைக்காட்சியில் வந்த செய்தியை அறிந்த உடனேயே முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    * முதலமைச்சர் உத்தரவின் பேரில் குழு அமைக்கப்பட்டு உடனடியாக விசாரணை தொடங்கப்பட்டது.

    * அரசின் குழு பள்ளிப்பாளையம் உள்ளிட்ட பகுதி மருத்துவமனைகளில் ஆய்வு செய்து முறைகேடு நடந்ததை உறுதி செய்தது.

    * சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளில் கிட்னி மாற்று அறுவை சிகிச்சை செய்ய உடனடியாக தடை விதிக்கப்பட்டது.

    * சட்ட நுணுக்கங்களை தவறாக பயன்படுத்தி கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    * சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

    * அ.தி.மு.க. ஆட்சியிலும் கிட்னி முறைகேடு நடந்துள்ளது.

    * 2017-ம் ஆண்டு நாமக்கல் மாவட்ட எஸ்.பி. சுகாதாரத்துறைக்கு கடிதம் எழுதியிருந்தார்.

    * சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    * விசாரணை மேற்கொண்ட சுகாதாரத்துறை குழு பல்வேறு பரிந்துரைகளை வழங்கியது.

    * பாரபட்சமின்றி, பாகுபாடு காட்டாமல் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * கிட்னி முறைகேட்டில் ஈடுபட்டதாக 2 புரோக்கர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    * சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

    * உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை தொடர்பாக புதிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

    * தானம் எனும் பெயரில் உடல் உறுப்பை விற்கக்கூடாது என ஆட்சியர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

    * மனித உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான ஆவணங்கள் 10 ஆண்டுகள் வரை பராமரிக்க வேண்டும்.

    * அனைத்து ஆவணங்களும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    * சென்னை, மதுரை, கோவை உட்பட 4 அரசு மருத்துவமனைகளில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அங்கீகார குழு செயல்படுகிறது.

    * கிட்னி மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் 2 பேர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு கைது செய்யப்பட்டனர்.

    * கிட்னி மோசடி தொடர்பாக அரசு அலுவலர்கள் 7 பேர் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார்.
    • கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய நிகழ்வில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அப்போது கவர்னர் ஆர்.என்.ரவி குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    * கவர்னர் ஆர்.என்.ரவி அரசு முறையை பின்பற்றாமல் தன் கருத்தை தெரிவித்து வருகிறார்.

    * கவர்னரின் செயல் அரசியல் சட்டத்திற்கு முரணானது.

    * சட்ட முன்வடிவில் திருத்தங்களை கூற கவர்னருக்கு அதிகாரம் கிடையாது, சட்டம் இயற்றுவது என்பது சபைக்கு மட்டுமே அதிகாரம் என்றார்.

    இதனை தொடர்ந்து, அரசு அனுப்பிய மசோதாவை கவர்னர் ஆர்.என்.ரவி ஜனாதிபதிக்கு அனுப்பிய நிலையில் சித்த மருத்துவ பல்கலை குறித்த கவர்னரின் கருத்தை சட்டசபை நிராகரித்ததாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்தார். கவர்னர் கருத்துக்கு எதிராக முதலமைச்சர் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    • விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.
    • கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது.

    சட்டசபையில் கிட்னி திருட்டு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * விசைத்தறி தொழிலாளர்களின் வறுமையை பயன்படுத்தி கிட்னி திருட்டு நடைபெற்றுள்ளது.

    * ஏழை மக்களின் கிட்னியை திருடிய மருத்துவமனை மீது தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    * அரசின் விசாரணை குழுவில் இடம் பெற்றுள்ளவர்கள் பாதிக்கப்பட்டோரை விசாரித்துள்ளனர்.

    * கிட்னி முறைகேடு நடந்துள்ளதை விசாரணை குழு உறுதி செய்துள்ளது.

    * உயர்நீதிமன்ற மதுரை கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு குழுவிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

    * சிறப்பு புலனாய்வு குழு உடனடியாக விசாரணையை தொடங்க தமிழக அரசு வழிவகை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • விமர்சனம் செய்யும் போது கூட பொறுமையாக, அமைதியாகத்தான் செய்வார்.
    • யாருக்கும் எந்தவித கோபமும் வராத வகையில் நடந்து கொள்வார்.

    சென்னை:

    தமிழ்நாடு சட்டசபையின் 3-ம் நாள் அமர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. நிகழ்வின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

    எதிர்க்கட்சி வரிசையில் (நயினார் நாகேந்திரன்) இருந்தாலும் அவர் கோபமாக பேசி நான் பார்த்ததில்லை. விமர்சனம் செய்யும் போது கூட பொறுமையாக, அமைதியாகத்தான் செய்வார். வெளிநடப்பு செய்யும் போது கூட சிரித்துக்கொண்டே யாருக்கும் எந்தவித கோபமும் வராத வகையில் நடந்து கொள்வார். சிறந்த அரசியல்வாதியாக இருக்கக்கூடியவர்.

    64 முடிந்து 65-வது வயதிலே அடியெடுத்து வைத்திருக்கிறார். அவருக்கு என்னுடைய சார்பிலும் தி.மு.க. சார்பிலும் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

    • கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.
    • நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    சென்னை:

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவா் ஆா்.நல்லகண்ணு (வயது 100), கடந்த ஆகஸ்டு மாதம் 22-ந் தேதி வீட்டில் தவறி கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

    இதனிடையே, திடீர் மூச்சுத் திணறல் காரணமாக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நல்ல கண்ணுக்கு மூத்த மருத்துவர்கள் தலைமையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்த நிலையில், கடந்த வாரம் 10-ந்தேதி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினார்.

    இந்த நிலையில், இன்று காலை நல்ல கண்ணுக்கு மீண்டும் உடல்நலம்பாதிக் கப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அதிகாலை 2 மணிக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவர் வாய் வழியாக உணவு உட்கொள்ள முடியாத நிலையில் டியூப் மூலம் உணவு செலுத்தப்படுகிறது. நேற்றிரவு உணவு உட்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு மீண்டும் உணவு சீராக உட்கொள்வதற்கான சிகிச்சையினை மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

    சிகிச்சை பெற்று வரும் நல்லகண்ணுவை கம்யூனிஸ்டு முன்னாள் மாநில தலைவர் முத்தரசன் நேரில் சென்று நலம் விசாரித்தார்.

    • வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மரியாதை செலுத்தினார்.
    • துணை முதலமைச்சர் உயதநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் 226-வது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.

    சென்னை கிண்டியில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    அவரைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உயதநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

    • சட்டசபையின் 3-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் தொடங்கியது.
    • அ.தி.மு.க.வினர் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    தமிழக சட்டசபையின் 3-வது நாள் அமர்வு சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று தொடங்கியது.

    நேற்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கரூர் கூட்ட நெரிசல், கிட்னி திருட்டு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கைகளில் கருப்பு பட்டை அணிந்து வந்தனர்.

    இந்நிலையில் இன்று அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சட்டைகளில் 'கிட்னிகள் ஜாக்கிரதை' என்ற ஸ்டிக்கர் அணிந்து வந்துள்ளனர். அ.தி.மு.க.வினர் இன்று கிட்னி திருட்டு விவகாரத்தை எழுப்ப திட்டமிட்டுள்ளனர்.

    வினாக்கள் - விடைகள் நேரத்தில் எம்.எல்.ஏ.க்களின் கேள்விகளுக்கு அந்தந்த துறை அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

    • அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
    • நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    சென்னை:

    தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார். அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    இன்று பிறந்தநாள் காணும் பா.ஜ.க. மாநில தலைவர், திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினர் அன்புச் சகோதரர் நயினார் நாகேந்திரனுக்கு எனது இதயங்கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    நீண்ட ஆயுள், உடல் நலத்துடன் தொடர்ந்து மக்கள் சேவையாற்றிட எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் என கூறியுள்ளார். 

    • விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.
    • வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது.

    சென்னை:

    ஆபரணத்தங்கத்தின் விலை தினந்தோறும் புதிய உச்சத்தை தொட்டு விற்பனையாகிறது. விலை மாற்றம் இல்லாத நாட்களே இல்லை என்ற வகையில் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் தங்கம், வெள்ளி என்பது மக்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என்ற நிலை உருவாகி வருகிறது.

    இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,900-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.95,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலை சற்று குறைந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 206 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து பார் வெள்ளி 2 லட்சத்துக்கு 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    15-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,880

    14-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 94,600

    13-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,640

    12-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    11-10-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 92,000

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    15-10-2025- ஒரு கிராம் ரூ.207

    14-10-2025- ஒரு கிராம் ரூ.206

    13-10-2025- ஒரு கிராம் ரூ.197

    12-10-2025- ஒரு கிராம் ரூ.190

    11-10-2025- ஒரு கிராம் ரூ.190

    • தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும்.
    • சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது. அதற்கு முன்னதாகவே தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கன முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனிடையே, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் நேற்று இரவு முதல் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனை தொடர்ந்து 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில், பல நூற்றாண்டுகளுக்கு பிறகு தூத்துக்குடி, நெல்லையில் பெரிய மழை பெய்துள்ளதாக தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பெரிய மழை பெய்துள்ளது. தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் மழை இன்னும் 3 மணி நேரம் நீடிக்கும். பின்னர் படிப்படியாகக் குறையும். கடந்த 24 மணி நேரத்தில் காயல்பட்டினத்தில் 15.4 செ.மீ., திருச்செந்தூரில் 14.6 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

    கன்னியாகுமரி, தூத்துக்குடி மற்றும் நெல்லையின் பிற உள் பகுதிகளில் நண்பகல் அல்லது மாலை வரை மழை பெய்யக்கூடும்.

    சென்னையில் இன்று பகலில் வெயில் அடித்தாலும் மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறியுள்ளார். 

    • சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 5,900 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14,268 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து இன்று 565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    சென்னை:

    நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் வசிப்பவர்கள் பெரும்பாலானோர் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இதையொட்டி பயணிகளின் வசதிக்காக இன்று முதல் வருகிற 19-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த 4 நாட்களும் சென்னையில் இருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 5,900 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 14,268 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பிற ஊர்களில் இருந்து இந்த 4 நாட்களும் 6,110 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. இதன் மூலம் மொத்தம் 20,378 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் பயணிகளுக்காக வருகிற 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை 3 நாட்களுக்கு தினசரி இயக்கக்கூடிய 2,092 பஸ்களுடன் 4,253 சிறப்பு பஸ்கள் விடப்படுகிறது. மற்ற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 4,600 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதன் மூலம் மொத்தம் 15,129 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    முதல் கட்டமாக சென்னையில் இருந்து இன்று வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 760 சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து இன்று மொத்தம் 2,852 பஸ்கள் புறப்பட்டு செல்கின்றன. இதேபோல் தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து இன்று 565 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2,092 பஸ்களுடன், 2,165 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,790 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 18-ந்தேதி (சனிக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 1,935 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 2,145 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    வருகிற 19-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 2092 பஸ்களுடன், 1,040 சிறப்பு பஸ்களும், தமிழகத்தின் பல்வேறு முக்கிய இடங்களில் இருந்து 1,610 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளன.

    சென்னை கிளாம்பாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், திருச்சி, மதுரை, தூத்துக்குடி, செங்கோட்டை, திருநெல்வேலி, சேலம், கோயம்புத்தூர், கும்பகோணம் மற்றும் தஞ்சாவூர் மார்க்கமாக செல்லும் பஸ்களும், வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை மார்க்கமாக செல்லும் பஸ்களும் இயக்கப்படுகின்றன.

    கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை, காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் மற்றும் திருத்தணி மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மாதவரம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து பொன்னேரி, ஊத்துக் கோட்டை வழியாக ஆந்திரா மார்க்கமாக செல்லும் பஸ்கள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

    • ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது.
    • தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.

    சென்னை:

    தீபாவளி பண்டிகை வருகிற 20-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் தீபாவளியன்று பட்டாசு வெடிக்க காலை மற்றும் இரவு நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு மட்டுமே இதுபோன்ற கால நிர்ணயம் செய்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவி வருகிறது. இதனை பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    இந்தநிலையில் இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    இது முற்றிலும் தவறான தகவல். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் அடிப்படையில் அரசு 2018-ம் ஆண்டில் இருந்து தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கி வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு நாடு முழுவதுக்கும் பொருந்தக்கூடியது. தமிழ்நாட்டில் மட்டுமே இப்படி கால நிர்ணயம் செய்வதாக வதந்தி பரப்பி வருகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×